Wednesday, June 20, 2012

குருமார்கள் சீடர்களைத் தேடலாமா?

போதி தர்மர், இந்தியாவிலிருந்து இமயமலையைக் கடந்து சீனாவுக்குப் போனார். சீடர்களை பிடிக்கவோ புத்த மதத்தைப் பரப்பவோ அல்ல. ஒன்பது வருடங்களாக அவர், மக்களுக்கு முதுகு காட்டி, சுவரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள். வருகிறவர்களுக்கு எல்லாம் அவரின் முதுகுதான் தெரிந்தது!
மக்கள், “ஏன் இப்படி சுவரைப் பார்த்தபடியே இருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் பார்த்த மனிதர்களது முகங்கள் அனைத்தும் சுவர் போல உயிர்ப்பு அற்றதாகவே உள்ளன. என்னிலிருந்து வெடித்துக் கிளம்பும் ஞானத்தை வரவேற்கும் உயிர்ப்புள்ள முகங்களே இல்லை. சுவர் போன்ற அந்த முகங்களைவிட சுவரே மேலானது என்று காத்திருக்கிறேன்...” என்றாராம்.
ஹீய்நிங் என்கிற ஒருவர் வந்து தம் கைகளை வெட்டி, போதி தர்மரிடம் கொடுத்துவிட்டு, “நீங்கள் திரும்பாவிட்டால் என் தலையை நானே வெட்டிக்கொள்வேன்” என்றதும் திரும்பினாராம். ஹீய்நிங்கின் கண்களை ஊடுருவி நோக்கினார், போதி தர்மர். “நான் இமயமலை தாண்டியது இவனுக்காகவே” என்றார். (இப்படியொரு சீடர்- இப்படியொரு குரு)
- சுகி.சிவம் (24.2.2009 சக்தி விகடன் இதழில்)

0 comments:

Post a Comment