Monday, June 11, 2012

மீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்!!!!



என்னது ? நமது பாரதம் வல்லரசாக இருந்ததா? நம்ப முடியவில்லையே என நினைக்கிறீர்களா?ஆம்! இன்றைய அமெரிக்கா வெறும் 200 ஆண்டுகளாகத்தான் வல்லரசாக இருக்கிறது.அதுவும் ஆயுத அரசியல் மூலமாக வல்லரசாகி,ஆயுத அரசியல் மூலமாகவே தன்னை ஒரு வல்லரசாக இன்றுவரை தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.(தற்போது அமெரிக்காவைப் போலவே,உலக வல்லரசாகத் துடிக்கும் சீனாவும் ஆயுத அரசியலையே தனது முகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது!!!)ஆனால்,பாரதமாகிய நாம் வர்த்தகம் செய்துவருவதோடு,உலகம் முழுவதும் இந்துதர்மத்தின் மரபுகளான மனிதநேயத்தை மட்டுமே பரப்பிக்கொண்டிருந்தது.(ஆயுத அரசியலில் ஈடுபடவில்லை!!!)

கி.பி.1700 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த 25,000 ஆண்டுகளாக நமது பாரதம் உலக வல்லரசாக இருந்திருக்கிறது.பாரதத்துடன் வணிகத் தொடர்பு கொள்ள உலக நாடுகள் கடும்போட்டி போட்டன;The Rising and Falling of Great Powers  என்ற புத்தகத்தை பவுல் கென்னடி என்ற யேல் பல்கலைக்கழகத்துப் பொருளாதாரப் பேராசிரியர் ஏராளாமான ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.(இதே போல ஆங்சன் மடிசன் எழுதியுள்ள வேர்ல்டு எக்கானமி – எ மில்லேனியல் பெர்ச்பெக்டிவ் என்ற புத்தகமும் ஏராளமான ஆதாரங்களைக் கூறுகிறது)அதில் அவர் கூறியிருப்பதைப் பார்ப்போம்:

கி.பி.1750 வரை உலக உற்பத்தியில் 25% ,உலக ஏற்றுமதியில் 24% இந்தியாவின் பங்களிப்பாக இருந்தது.கி.பி.1830 இல் அது 19% என்று குறைந்தது.அப்போது பிரிட்டனின் பங்கு வெறும் 8% மட்டுமே! அமெரிக்காவின் பங்களிப்போ வெறும் 2% அளவே இருந்தது.


இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் முக்கிய பங்கு வகித்ததால்,அதன் போர்ச்செலவையும் பொருளாதாரச் சீரழிவையும் சரி செய்ய இந்தியாவைச் சுரண்டி,இந்தியப்பொருளாதாரத்தைச் சீரழித்தனர்.இந்த சுரண்டல் 300 வருடங்களாக தொடர்ந்ததால்,பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறியபோது(கி.பி.1947 இல்) உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 2.5% ஆகச் சுருங்கிப்போனது.இருந்த போதிலும் கி.பி.1820 இல் பாரதத்திடமிருந்து ஸ்பின்னிங் டெக்னாலஜியை ஜப்பான் இறக்குமதி செய்திருக்கிறது.எப்படியெல்லாம் இந்தியாவை பிரிட்டன் சுரண்டியது தெரியுமா?


இந்தியாவில் தயாராகும் கைத்தறித் துணிகள் நீடித்து உழைப்பவை;வெயில்,குளிர்,பனி என எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவை;தரமோ மிக அதிகம்;விலையோ மிகக் குறைவு.இதனால் உலகம் முழுவதுமே இந்திய கைத்தறித் துணிகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே சென்றது.இந்தியாவை ஆள்கிறேன் பேர்வழி என்ற பிரிட்டன் இந்தியாவில் தயாராகிவந்த கைத்தறித்துணிகளுக்கு பல மடங்கு ஏற்றுமதி வரி விதித்து,பல கோடி கைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கொன்றது கிறிஸ்தவ பிரிட்டன்! அதே சமயம் கிறிஸ்தவ பிரிட்டனில் தயாரான விசைத்தறி துணிகள் விரைவில் கிழிந்துவிடக்கூடியவை;விலையோ அதிகம்;இருந்தபோதிலும் அவை இந்தியாவில் விற்றால்,அவைகளுக்கு எந்த வரியும் கிடையாது.


டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை;ஒரு தீப்பெட்டிக்குள் ஒரு 16 முழம் சேலையை மடித்து வைத்துவிடலாம்.அவ்வளவு மெல்லியதாக நெசவு நெய்வதில் கைதேர்ந்தவர்கள் மஸ்லீம் துணி நெசவாளர்கள்.கிறிஸ்தவ பிரிட்டன் அரசு,டாக்கா நகர் மஸ்லீம் நெசவாளர்களின் எண்ணிக்கை அப்போதே(கி.பி.1785) இரண்டு கோடி பேர்கள்.அவர்கள் அனைவரின் விரல்களும் பிரிட்டன் ராணுவ வீரர்களால் வெட்டப்பட்டன.டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் அழிந்துபோயின.அந்த இடத்தை கிறிஸ்தவ பிரிட்டனின் தரமில்லாத விசைத்தறித்துணிகள் உலகச் சந்தையில் ஆக்கிரமித்துக்கொண்டன.


கி.பி.1903 இல் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் என்ற சைக்கிள் மெக்கானிக்குகள் விமானத்தைக் கண்டுபிடித்தனர்.அவர்கள் கண்டுபிடித்த விமானம்,தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் பறந்தது.அதுவே இன்று உலக வரலாற்றில் இடம்பிடித்தது.ஆனால்,கி.பி.1895 லேயே நமது பாரதத்தில் S.D.தால்படயே என்ற பாரதியர் கண்டறிந்த விமானம் தரையிலிருந்து 10,000 அடி உயரத்தில் பறந்தது.புனே அருகே பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த ‘உலகின் முதல் விமான வெள்ளோட்டம்’ நிரூபிக்கப்பட்டது.அடிமை நாட்டில் ஒரு அரிய சாதனையா? என்று பொறாமைப்பட்ட பிரிட்டன் இந்த சம்பவத்தை அன்றைய செய்தித்தாள்களில் வெளிவராமல் பார்த்துக்கொண்டது.மேலும்,தால்படயேவை அவரது விமானத்துடன் நாடு கடத்தியது.அவரைப்பற்றிய கதி என்ன ஆனது என்று இன்றுவரையிலும்தெரியவில்லை;(ஆதாரம்:Vedic World Heritage by P.N.Oak)


உலக வர்த்தகப்போட்டியில் சீனா,பிரேசில்,தாய்லாந்து.மெக்ஸிகோ போன்றவை நம்மோடு இருக்கின்றன.இருப்பினும்,கி.பி.2020 இல் உலகப் பொருளாதார மையமாக பாரதமே உருவெடுத்துவிடும் என்று ஏராளமாக கணிப்புகள்,சர்வேக்கள்,ஐ.நா.சபையின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகின் மிகப்பெரிய தொழில் முனைவோர் நமது பாரதத்திலேயே இருக்கின்றார்கள்.ஆமாம்,பாரதத்தில் சுய  தொழில் புரிவோர்களின் எண்ணிக்கை 22 கோடி!! அமெரிக்காவிலோ,சீனாவிலோ இந்த எண்ணிக்கை இன்றுவரையிலும் இல்லை;உலகத் தேயிலைச் சந்தையில் 3 இல் 2 பங்கை டாடா நிறுவனம் 1997 லேயே கைப்பற்றிவிட்டது.உலக கார் உற்பத்தி மையமாக சென்னை உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.உலக குளிர்பான நிறுவனமான பெப்சி,ஆஸ்திரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டிஹெச் எல்  போன்றவைகளின் சி.ஈ.ஓ நமது பாரத நாட்டைச் சேர்ந்தவர்களே!!!சுமார் 22 நாடுகளில் அந்த நாட்டின் முக்கிய அரசியல்தலைமைகளாக நமது பாரத நாட்டைச் சேர்ந்தவர்களே இருக்கின்றனர்.பாரதத்தின் மூலிகைகள் உலகம் முழுவதும் நோய்களிலிருந்து பக்கவிளைவுகளின்றி மனிதர்களைக் குணப்படுத்திவருகிறது.பரதநாட்டியம்,ஜோதிடக்கலை,     யோகாசனங்கள் இன்று சர்வதேச பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களாக பயிற்றுவிக்கப்படுகின்றன.சமஸ்க்ருதமும்,தமிழும் செம்மொழிகளாகி உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் புராதனமான தமிழ் மற்றும் சமஸ்க்ருத நூல்கள் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருக்கின்றன.பகவத் கீதையில் அர்ஜீனனுக்கு பகவான் க்ருஷ்ணர் சொன்ன உபதேசங்கள் இன்று பிரிட்டனின் ராணுவ வீரர்களுக்கு மனோதத்துவ டெக்னிக்குகளாக போதிக்கப்பட்டுவருகின்றன.பன்னாட்டு நிறுவனங்களின் மார்கெட்டிங் துறைகளுக்கு தினசரி  பயிற்சியே பகவத் கீதையின் அடிப்படைதான்!

கி.பி.2010 முதல் ஒரு ரூபாயை 50$ கொடுத்து வாங்கும் சூழ்நிலை உலக வர்த்தக அரங்கில் உருவாகும் என்று ரிலையன்ஸின் நிறுவனர் திருபாய் அம்பானி மதிப்பிட்டிருந்தார்.ஆனால்,நிலைமையோ தலைகீழாக இருக்கிறது.இதற்குக் காரணம் என்ன? இந்தியர்களாகிய நாம் சுதேசி உணர்வுடன் செயல்படாததே !
நமது பாரதம் விரைவாக வல்லரசாக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இன்று முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமது நாட்டுத் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும்.இதை மட்டும் செய்துவிட்டால்,நமது நாட்டின் அரசியல் குழப்பத்தையும் மீறி கி.பி.2015க்குள்ளாவே வல்லரசாகிவிடுவோம்.

ஜெய் ஹிந்த்!!!

0 comments:

Post a Comment