படிச்சவன் பாடம் நடத்துறான்; படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்
அப்படீன்னு கிராமத்துப் பக்கம் கிண்டலாகப் பேசிக் கொள்வார்கள். இன்றைக்கு
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை ( கல்வி. மருத்துவம். அங்காடி கடைகள்.
காய்கறி கடைகள் ) பெரும்பாலும் தனிநபர்கள் செய்கிறார்கள். ஆனால், சமூக
விரோத செயல்களில் ஈடுபடுவோர் செய்ய வேண்டிய மதுபானக் கடைகளை அரசு ஏற்று
நடத்துகிறது. ஏன் என்றால் அரசுக்கு வருமானம் வருகிறதாம்.
கருவாடு வித்த பணம் நாறவாப் போகுதுன்னு வியாக்கியானம் பேசும்
அரசியல்வாதிகளுக்கு கடந்த ஆட்சியில் கொஞ்சக கொண்டாட்டம் என்றால், இந்த
ஆட்சியில் கொண்டாட்டமோ கொண்டாட்டம். டாஸ்மாக் ஒட்டியே நடத்தப்படும்
'பார்கள் அனைத்தும் கைமாறிவிட்டன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 6
ஆயிரத்து 804 கடைகளிலும், என்னென்ன ரகத்தில் சரக்கு உள்ளது என சர்வே
நடத்தினார்களாம். அப்போது, பீர் அதிகம் விற்பனையாவதால், விலையை உயர்த்தி
விட்டாரகள். பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் விலை இன்று
உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 65 ரூபாய்க்கு விற்ற சரக்கை, கடை மூடிய
பிறகு 100 ரூபாய்க்கு விற்றார்கள். இனி இந்த 100 ரூபாயும் கூடும்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாய்யான்னு ஒரு காமெடி பார்த்திருப்போம்.
அதுமாதிரி எவ்வளவு உயர்த்தினாலும் குடிக்கத்தானேப் போறானுகன்னு நெனைக்குதோ
அரசாங்கம்..-?
நல்ல குடிநாயகம்!
0 comments:
Post a Comment