கார்த்தி-ன் இன்னொரு ஒன் மேன் ஷோ படம். கார்த்தி பெருசா நடிக்க ஆசைப்படாமல்
கட்சிக்கு தேவையான ரியாக்ஷன்களை சரியா காட்டக்கூடிய நல்ல நடிகர் என்பதை
மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தோட கதை, கார்த்தி
(கமலக்கண்ணன்) சந்தானத்திடம் (ரஜினி) கொஞ்சம் சீரியசான தனது பிளாஷ்பேக்கை
கொஞ்சம் ஜாலியாக சொல்ல ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இடையில சந்தானத்தின்
மானே தேனே பொன்மானே என்கிற ரீதியிலான பன்ச் வசனமும் கூட கொஞ்சம் ஜாலியாவே
போகுது. ஏற்கனவே எல்லார்க்கும் தெரிந்த "தூள்" படத்தோட கதைதான். அது என்னனா
கிராமத்தில பாரம்பரியமிக்க தனது வீடு ரயில்வே நீட்டிப்பு காரணமாக
இடிக்கப்பட போகிறது என்ற காரணத்திற்காக அதை தடுக்க ரயில்வே அமைச்சரை
பார்த்து மனுக் கொடுக்க போகிறார். அவர் மனு கொடுத்த பத்தாவது நிமிடம்
அமைச்சர் வீட்டுக்கு எதிரே இருந்த டீ கடையில் பஜ்ஜி மடிக்க வந்துவிடுகிறது.
டீக்கடைகாரரின் பேச்சைக் கேட்டு அமைச்சருக்கு தெரிந்தவர் மூலம் மனுகொடுக்க
முயற்சி செய்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் கார்த்தியின் பணத்தை
சரக்கடித்தே காலி செய்கிறார்கள். இதுதான் பிளாஷ்பேக் இதை ஆட்டோ டிரைவர்
சந்தானத்திடம் சொல்லிக்கொண்டே வரும் கார்த்தி தனது பணத்தை காலி பண்ணுன
டுபாக்கூரை ஒரு டாஸ்மாக் கடையில் பார்த்து அடிபின்னுகிறார். பின்பு அந்த
அமைச்சரை பலி வாங்க போகிறார், கடைசியில் கதை இல்லாத தமிழ் சினிமாவில்
கதைக்கு உதவிய தரணியின் தூள் படத்திற்கு நன்றி என்று போட்டு படத்தை முடிக்க
போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு கார்த்தி மத்திய
அமைச்சருக்குப் பதிலாக தமிழக முதல்வருக்கு எதிராக அரசியலில் தனது சகுனி
ஆட்டத்தை ஆடி அடுத்து வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்கட்சி தலைவரை
ஆட்சியில் அமர வைக்கிறார். புது முதல்வர் பதவியேற்ற உடன் முதல் வேலையாக
அந்த ரயில்வே நீட்டிப்பு காண்ட்ராக்டை ரத்து செய்கிறார். பின்பு
கார்த்திக்கு டெல்லியில ரா__ல்ஜி இடமிருந்து அழைப்பு வர டெல்லி செல்கிறார்.
நன்றி வணக்கம்.
இந்த கேவலமான கதைக்கு திரைக்கதை அமைக்க மிகுந்த சிரத்தை
எடுத்திருக்கிறார்கள். ஐயோ என்ன விட்டுருங்க என்று இந்த பேஜை குளோஸ்
பண்ணிராதீங்க. ஏன்னா நம்ப முடியாத கதையை நம்ப வைக்க நிறைய முயற்சி
சம்பந்தமே இல்லனாலும் செய்திருக்கிறார்கள். அது இன்னானா, எப்பா முடியலட
சாமி. இந்த படம் நிறைய பேருக்கு பாடம். மொக்க கதைக்கு எப்படி சுமாரான
திரைக்கதை எழுதுவது, அப்படியும் படம் சரியா வரலைனா எப்படி ரீ-சூட்
பண்ணுவது. அப்படியும் படம் தப்பிக்கிறது கஷ்டமுன்னு தோணுனா, எப்படி அதிக
தியேட்டரில் ரிலீஸ் செய்து ஒப்பநின்க் கலக்ஷன் அள்ளுவது, அப்படியும் போட்ட
காசை எடுப்பது கஷ்டமுன்னு தோணுனா வேந்தர் மூவீஸ் மாதிரியான பணத்தை பற்றி
கவலைப்படாத கம்பனியிடம் படத்தை தள்ளி விடுவது என்று ஏகப்பட்ட ஐடியாவை படம்
நமக்கு சொல்லித்தருகிறது. அதிலும் படத்தின் முக்கியமான அந்த கிளைமாக்ஸ்
யாராலும் கணிக்க முடியாது, ஏன்னா ஏற்கனவே பல படங்களில் வந்த கிளைமாக்ஷை
வைப்பார்கள் என்று யார்தான் எதிபார்பார்கள். திரைக்கதையில ராதிகா, நாசர்
இருவரின் கேரக்டரும் நடிப்பும் நன்றாக கைகொடுத்திருக்கிறது. அதுதான் இந்த
படத்த காமர்சியலா காப்பத்துதுன்னு தோணுது. கமர்சியலா வெற்றி பெற்ற
படங்களில் முடிவு எதை நோக்கினு தெரியும் ஆனா அதை எப்படி செய்கிறார்கள்
என்பதுதான் அந்த படத்தினுடைய வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் சகுனியை
பொறுத்தவரை சும்மா காரைக்குடியில இருந்து சென்னைக்கு போனவன் அங்க அத்தை
மகளை டாவடிச்சு முதலமைச்சரை பகைச்சு இட்லி வித்த வட்டிகடை ராதிகாவை
கவுன்சிலர் ஆக்கி அப்படியே பாக்கிற நம்ம காதுல நமக்கே தெரியாம பூ சுத்தி
ராதிகாவை மேயர் ஆக்கி, செயில்ல இருந்த எதிர் கட்சி காரரை
முதலமச்சரக்குகிறார். பாடல்கள் கேட்க நல்லா இருந்தது ஆனால் படத்துல ஏன்டா
பாட்டு வருதுன்னு தோன வச்சுட்டாங்க, முடியலடா சாமி. எல்லோரும் தியேட்டரில்
போய் பாருங்க. அடுத்த வருஷம் கங்கையில குளிச்சு உங்களை பாக்க சொன்ன பாவத்தை
கழிவிட்றேன்.
0 comments:
Post a Comment