Wednesday, February 27, 2013

ஹரிதாஸ் (2013) - விமர்சனம்

ெளிநாட்டுவாழ் இந்தியர் டாக்டர் வி.ராமதாஸின் தயாரிப்பில், அவருக்கும் அவரது மருத்துவ தொழிலுக்கும் பெருமை சேர்க்கும்படி வெளிவந்திருக்கும் வெற்றிப்படம் தான் "ஹரிதாஸ்"! திரைப்படம் மிக மிக அருமையாக உள்ளது. ஆனால் திரைஅரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. இது போன்ற நல்ல படத்தை மீடியாக்கள் விளம்பரபடுத்த வேண்டும். எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல ஒப்பனிங் குடுத்து காப்பாற்றும் ரசிகர்கள் இது போன்ற தரமான படத்தை ஆதரிக்காமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்....

பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு!!!!!!

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்....

Sunday, February 24, 2013

வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்...

Saturday, February 23, 2013

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்....

ட்ரை க்ரேப்ஸ் (உலர்ந்த திராட்சை) - 5 விஷயங்கள்

1) சுக்ரோஸ், வைட்டமின்கள், காலிஷியம், அமொனோ அமிலம், பொட்டாஷியம், மெக்னிஷியம், நார்சத்து, இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் ஆகிய‌ சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. 2) இந்த உலர்ந்த திராட்சையை தினமும் நான்கைந்து சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்திக்கு நல்லது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் தீரும். 3) ஒரு க்ளாஸ் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். பத்து உலர்ந்த திராட்சையை அதில் போட்டு காய்ச்சி, ஆற வைத்தபின் குடியுங்கள். தொடர்ந்து குடித்துவர மலச் சிக்கல்...

Thursday, February 21, 2013

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆண்டால் இந்தியா திவாலா... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

  நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொதுக் கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி பிராத்' என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, உலகப் பொருளாதார விற்பன்னர்கள் எனக் கூறிக் கொள்ளும், நிதியமைச்சரும், பிரதமரும், இந்திய தேசத்தை வெளிநாட்டவர்களுக்கு, அடகு வைக்க முயன்று வருகின்றனர்.    இவர்களோடு, இந்தியாவில் உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய...

Tuesday, February 19, 2013

அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன் பற்றி தகவல் !!!!

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று...

Saturday, February 16, 2013

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது: * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட...

Friday, February 15, 2013

அழகான மதுரை திருமலை நாயக்கர் மகாலை அருகில் இருந்தும் பார்க்க தவறியவர்கள் நம்மில் நிறைய இருப்போம் !!!

17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 Sq mtr பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை...

ஒடிசாவில் டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார் !!!

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால்...

Thursday, February 14, 2013

நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!!

உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில்...

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின்...

மனித மூளையும் அதன் செயல்திறனும்..!

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10...

Tuesday, February 12, 2013

முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)

இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடையேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும்...

விஸ்வரூபம் - கமலின் வியத்தகு வெற்றிரூபம் விமர்சனம்

  வெளிவருவதற்கு முன்பே தடை, தாமதமென்று உலகை விறுவிறுப்பாக பேச வைத்த "விஸ்வரூபம்", வெளிவந்த பின்பும் அதே உலகை வியக்கவும் வைத்திருக்கிறது! "உலக நாயகன் எனும் அடைமொழிக்கேற்ப கமல், உலக தரத்திற்கு தந்திருக்கும் உன்னதமான தமிழ்ப்படம் தான் "விஸ்வரூபம்"! கதைப்படி கதக் நாட்டிய கலைஞரான கமல் அமெரிக்காவில் அழகிய இந்திய வம்சாளி இளம் பெண்களுக்கு கதக் கற்றுத்தருகிறார்.  பெண் தன்மையுடன் வாழும் கமலின் நடை, உடை, பாவனைகள் எதுவும் பிடிக்காமல், அமெரிக்கன்...