Saturday, February 2, 2013

அலெக்ஸ் பாண்டியன் திரை விமர்சனம்

படத்தின் ஆரம்பக்காட்சியே கார்த்தி அனுஷ்காவை ஒரு  கும்பல் துரத்துவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க இருவரும் ரெயிலில் ஏறுகிறார்கள். தொடர்ந்து துரத்தும் ரவுடி கும்பலை அடித்து நொறுக்கி  கார்த்திக் அனுஷ்காவை காப்பாத்துகிறார்   . இறுதியில் கும்பல் தலைவன் ஹெலிகாப்டரிலிருந்து வந்து துப்பாகியால் சுட இருவரும் ஆற்றில் குதித்து தப்பிக்கிறார்கள். விழித்துப் பார்த்தால், சந்தானத்தின் கிராமத்திற்குள் கதை நுழைகிறது.

முதல் பாதி முழுவதுமே கார்த்தி-சந்தானம் மற்றும் அவரது மூன்று  தங்கைகளும் சேர்ந்து  நகைசுவை கதையாக நகர்கிறது அதில் சந்தானம் இரட்டை வசனம்களாக பேசிவதை தவிர்த்திருக்கலாம்  . இடைவேளைக்கு முன்பாக அனுஷ்கா வருகிறார். அடுத்த பாதியில் ஆக்ஷன், காதல், கொஞ்சம் காமெடி என எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி அனுஷ்காவை கார்த்திக் கடத்தியதன் காரணம் சொல்லபடுகிறது   அதில்

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சென்னை துறைமுகத்துக்கு ஆயிரம்  கோடி மதிப்பிலான போலி மருந்துகள் அடங்கிய ஒரு கப்பலுடன் வருகிறது.

இதை விற்பனை செய்ய முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. முதலமைச்சர் விசு இந்த மருந்தின் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எனக்கூறி அந்த மருந்தை விற்க தடை செய்கிறார்.உடனே, அந்த வெளிநாட்டுக் கும்பல் சென்னையில் பிரபல டாக்டரான சுமனின் உதவியுடன் சாமியாரான மகாதேவன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணுகிறது. அதன்படி, முதலமைச்சரிடம் மூன்று பேரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போகவே முதலமைச்சரின் மகளான அனுஷ்காவை கடத்தி தங்களது திட்டத்தை சாதிக்க நினைக்கின்றனர்.

அவரை கடத்துவதற்காக கார்த்தி 10 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் நியமிக்கப்படுகிறார். திட்டமிட்டு அனுஷ்காவை கடத்திக் கொண்டுபோய் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று பணயக் கைதியாக வைத்திருக்கிறார் கார்த்திக் இதன் இடயே இருவருக்கும் காதல் பிறக்கிறது

மூன்று நாளுக்குப் பிறகு தங்களது , அனுஷ்காவை திரும்ப ஒப்படைக்குமாறு கார்த்தியிடம் சொல்கின்றனர். வரும் வழியில் என்னை  எதிரிகளிடம்  ஒப்படைக்காமல்  அப்பாவிடம் ஒப்படைத்தால் ரூ.50 லட்சம் தருகிறேன் என்று கூறுகிறார்அனுஷ்கா .காதலியின் உபதேசம் பெற்ற கதையின் நாயகன் நல்லவனாக மாறி எதிரிகளை பந்தாடுகிறார் என்பதே மீதிக்கதை.

மசாலா படங்களையே எடுத்து வரும் சுராஜ் இந்த முறையும் அதே மசாலா வேறு விதமாக ரசிகருக்கு கொடுத்து இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் வழக்கம்போல குத்து பாடல், படத்தில் சந்தானத்தின் காமெடி தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை .

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment