Saturday, February 2, 2013

மருத்துவத் துறையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’

மருத்துவத் துறையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ என்று சொல்லப்படும் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை இன்றைக்கு எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் அதைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் இந்தியாவில்... ஆனால், அந்த அற்புதம் இங்கேதான் நிகழ்ந்தது.

இந்த அறுவைசிகிச்சையை அறிமுகப்படுத்தி, அதன் சூட்சுமத்தை அனைவருக்கும் பயிற்றுவித்தவர் சுஷ்ருதா. கங்கைக் கரை நகரான வாரணாசியில் வாழ்ந்தவர். வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. சுஷ்ருதா எழுதிய சிகிச்சை குறிப்புகள் ‘சுஷ்ருதா சம்ஹிதா’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவனும் ஆறு ஆண்டு மருத்துவம் பயில வேண்டும் என்று நிர்ணயம் செய்திருந்த சுஷ்ருதாவின் குறிப்புகளில் அறுவைசிகிச்சையை எப்படிச் செய்வது என்று மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு அதை எவ்வாறு கற்பிப்பது என்றும் விளக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 120 அறுவைசிகிச்சை உபகரணங்கள்பற்றியும், 300 அறுவைசிகிச்சை முறைகள்பற்றியும் அவற்றில் விளக்கப்பட்டு உள்ளன. வெட்டி எடுத்தல், தழும்பாக்குதல், குத்துதல், ஆராய்தல், வெளியே எடுத்தல், கழிவுகளை வெளியே எடுத்தல், தையல் போடுதல், வலி நீக்கம் செய்தல் என்று அறுவைசிகிச்சையினை எட்டு விதமாக வகைப்படுத்துகிறார் சுஷ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரிபற்றியும் கணிசமான குறிப்புகள் அதில் உள்ளன.

பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நுணுக்கங்களான திட்டமிடுதல், நேர்த்தி ரத்த சேதம் தடுத்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவற்றை எல்லாம் சுஷ்ருதா தமது குறிப்பில் எழுதிவைத்து இருக்கிறார். மேலும், குறைபாடுள்ள இடங்களில் தோலை வெட்டி ஒட்டுதல் பக்கத்தில் உள்ள திசுக்களில் இருக்கும் ரத்தக் குழாய் மூலம் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்தல் போன்றவையும் விளக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கற்ற மூக்கினை வடிவமைக்கும் சிகிச்சையான ‘ரைனோபிளாஸ்டி’ சுஷ்ருதாவின் செயல்முறைகளில் மணிமகுடம் எனலாம்

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment