உண்மை விலையை கண்டறிய பப்பட் ஒரு எளிய கணித சூத்திரம் வைத்திருக்கிறார்.நாம் முன்பு பார்த்தபடி நாம் நம் பங்கு முதலீட்டுக்கு 15% முதல் 20% வரை ரிடர்ன் எதிர்பார்க்கலாம் என எழுதியிருந்தேன்.உதாரணத்துக்கு 15% என்று வைத்துகொள்வோம்.நமக்கு இதோடு EPS என்ற இன்னொரு விவரமும் தேவைப்படும்.ஒவ்வொரு கம்பனியும் தமது வருடாந்திர EPS (earning per share) எவ்வளவு என்பதை வெளியிடும். உண்மை விலையை கண்டறிவதற்கான சூத்திரம் intrinsic price = eps /expected return In our example expected return = 15% i.e 0.15 இப்போது சில கம்பனிகளை எடுத்துக்கொண்டு அவற்றின் பங்குகளின் உண்மையான விலையை பார்க்கலாம். ரிலயன்ஸ் eps = 54.34 expected return = 0.15 intrinsic price = eps/expected return = 54.34/0.15 = 362 உண்மை விலை = 362 இன்றைய சந்தை விலை = 653 பரிந்துரை = over priced.wait 362 மேல் ரிலயன்ஸ் கம்பனியின் பங்குகளை பப்பட்டின் முறையில் வாங்கக்கூடாது. இதே முறையில் மற்ற கம்பனிகளின் உண்மை விலையை கணக்கிட்டு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருந்தால் வாங்க வேண்டும். (நீங்கள் இப்போது இந்த சூத்திரத்தை பயன்படுத்தி பார்த்தால் இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் over priced என்பது தெரியவரும்.ஏனேனில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய பங்கு சந்தை முன்னேற்றம் கண்டுள்ளது.இது விற்பதற்கு அருமையான சமயம்.வாங்குவதற்கு அல்ல) இந்த சூத்திரத்தின் அடிப்படையை எழுதினால் அது ரெண்டு மூணு பதிவு வரை போகும்.அதனால் அதை எழுதவில்லை. பங்கை பப்பட்டின் சூத்திரத்தை பயன்படுத்தி வாங்கிவிட்டோம்.அடுத்து செய்ய வேண்டியது என்ன?
Published by WebStory
0 comments:
Post a Comment