பங்கை வாங்கியாகி விட்டது.அடுத்து செய்ய வேண்டியது என்ன? நாம் போட்ட முதலீடு எப்படி வேலை செய்து கொண்டிருக்கிறது என பார்க்க வேண்டும்.பங்கு சந்தையில் என்ன விலை விற்கிறது என பார்க்க வேண்டியதில்லை. உதாரணமாக இந்துஸ்தான் லீவரின் பங்குகளை வாங்கினால் நாம் அடுத்து பார்க்கவேண்டியது அந்த கம்பனியின் வருடாந்திர லாப,நஷ்டம் செயல்பாடு எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தான்.அந்த கம்பனியின் பங்குகள் சந்தையில் என்ன விலை விற்கிறது என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் என்கிறார் பப்பட். நம் முதலீட்டை எப்படி கண்காணிப்பது? 100 ரூபாய் ஒரு கம்பனியில் போடுகிறோம்.வங்கியில் போட்டால் நமக்கு 10% வருடத்துக்கு வட்டி வந்திருக்கும் என்று வைத்துக்கொள்வோம்.ஆக அடுத்த வருடம் நாம் போட்ட முதலீடின் மதிப்பு 110 ரூபாயாக இருக்கும். பங்கு சந்தையிலும் இதே கதைதான். நாம் உண்மை விலை என்பதை பற்றி பார்த்தோம்.அந்த உண்மை விலை வருடா வருடம் உயர வேண்டும்.நாம் போட்ட முதலீட்டை விட உண்மை விலை வருடா வருடம் அதிகரிக்க வேண்டும்.அது நடந்து கொண்டே இருந்தால் நாம் வேறெதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் பப்பட்.பங்கு சந்தையில் பங்கு என்ன விலைக்கு விற்கிறது என்பதைப்பற்றி கவலைபட வேண்டியதில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம். X கம்பனியின் தற்போதைய 10 ரூபாய்.15% நாம் எதிர்பார்க்கும் ரிடர்ன்.ஆக உண்மை விலை 66.67 ரூபாய். வருடா வருடம் கம்பனியின் ஈ.பி.எஸ் அதிகரிக்க வேண்டும்.அப்போது தான் உண்மை விலையும் அதிகரிக்கும். 2000வது வருடம் நாம் 66.67 உண்மை விலையுள்ள ஒரு கம்பனியின் பங்கை 40 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள்.40 ரூபாயை பங்கில் போடாமல் வங்கியில் போட்டிருந்தால் நமக்கு கிடைப்பது 10%.2001ல் 10% வட்டியில் அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு 40*1.1 = 44. 2001 வருட உண்மை விலை இந்த 44 ரூபாயை விட அதிகமாக இருந்தால் நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.வருடா வருடம் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் நாம் எதைப்பற்றியும் கவலைபட வேண்டியதில்லை என்கிறார் பப்பட். உதாரணம் பார்ப்போம் year eps intrinsic value investment market price 2000 10 66.67 40 34 2001 11.5 76.67 44 24 2002 13.22 88.16 48.4 35 2003 15.20 101.39 53.24 45 2004 17.49 116.60 58.564 160 2005 20.11 134 64.42 145 2006 23.13 154.20 70.86 82 ஆக மேற்கண்ட உதாரணத்தில் உண்மை விலை நாம் போட்ட முதலீட்டை விட வருடா வருடம் அதிகமாக இருக்கும்போது நாம் சந்தை விலையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சந்தை விலை உண்மை விலையை விட மிக குறைவாக சில சமயங்களில் இருக்கும்.( eG 2001, 2002, 2003 )உண்மை விலையை விட மிக அதிகமாக சில சமயங்களில் இருக்கும்.( eG:2004,2005 ) குறைவாக இருக்கும் வருடங்களில் நாம் செய்திருக்க வேண்டியது இன்னும் அதிக பங்குகளை வாங்குவதுதான். அதிகமக இருக்கும் வருடங்களில் செய்ய வேண்டியது? சும்மா இருப்பதுதான்.
Published by WebStory
0 comments:
Post a Comment