வெளிலே தலை காட்ட முடியலை அவ்வளவு வெயில் என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். கூடுமானவரை பாதுகாப்பாக இருந்தால் வெயில் சுட்டெரித்தாலும் கூலாக இருக்கலாம். இன்று முதல் தினம் வெயிலோனிடம் நட்பாக இருக்க சில டிப்ஸ் :
"பொதுவாக மனித உடல் நல்ல நிலையில் இருக்கத் தேவையான வெப்ப நிலை 25 டிகிரி செல்ஷியஸ். ஆனால், இப்போதோ வெப்ப நிலை 35 - 40 டிகிரியை சர்வசாதாரணமாகத் தொடுகிறது. இந்த நிலையில் உடலைக் குளிர்ச்சியடையச் செய்ய அதிக அளவில் வியர்வை வெளிவரும். இதனால், அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைப்பது இல்லை. அவசரத்துக்குக் கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால் நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது''
வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது. மிலேரியா என்ற கிருமியால் வியர்க்குரு ஏற்படும். இதைத் தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வியர்க்குரு பவுடரையும் பயன்படுத்தலாம்.
* நன்கு கொதிக்கவைத்து, ஆறவைக்கப்பட்ட தண்ணீரையே குடிக்க வேண்டும்.
* நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடன் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது; வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.
* காபி, ஆல்கஹால் போன்ற பானங்கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத்தும். இதனால், உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* குடியிருப்புகளின் அருகே கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும். பயன்படாதவை என்று தூக்கிப்போடும் தேங்காய்ச் சிரட்டை, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் தண்ணீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்."
Published by WebStory
0 comments:
Post a Comment