விஷால், த்ரிஷா, சுனைனா,சம்பத், ஜெயப்ரகாஷ், மனோஜ் பாஜ்பாய், ஜே.டி.சக்கரவர்த்தி நடிக்க இப்படத்தை இயக்கி இருக்கிறார் திரு. இவர் ஏற்கனவே விஷாலுடன் இணைந்து “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்கின்ற வெற்றி படத்தையும் இயக்கியுள்ளார்.
படத்தின் கதைச்சுருக்கம், ஊட்டியில் காடுகளை சுற்றிக்காட்டும் வேலை செய்யும் விஷாலுக்கு. அங்கு விஷாலுக்கும் சுனைனாவுக்கும் காதல் உருவாகிறது. காட்டிலுள்ள மரங்களை பற்றிய தகவல்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் விஷாலுக்கு, தான் விரும்பும் பெண்ணை பற்றி பெரிதாக தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கும் ஒரு காதலன். இப்படி தன்னை சட்டை செய்யாமல் விஷால் இருப்பதால் ஒரு கட்டத்தில் தன்னுடைய செருப்பு சைஸ் என்ன? இடுப்பு சைஸ் என்ன? என்று கேட்க, அதற்கு பதில் தெரியாமல் விஷால் முழிக்கிறார். இது சரிப்பட்டுவராது என்று கூறி நாம் பிரிந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு பேங்காக் சென்று விடுகிறார்.
மூன்று மாதங்கள் கழித்து தன்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ உடனே இங்கு (பேங்காக்) கிளம்பி வா என்று விஷாலுக்கு கடிதம் எழுதும் சுனைனா, விமானா டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். சுனைனாவை பார்ப்பதற்காக பேங்காக் போகும் விஷால், ஏர்ப்போர்ட்டில் த்ரிஷாவை சந்திக்கிறார். அவரும் பாங்காங் செல்வதால் இருவருக்கும் விமான பயண நட்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் அங்கு என்ன நடந்தது என்பதை இயக்குநர் வித்தியாசமான கதையம்சத்தோடும், சஸ்பென்ஸுமாகவும் சொல்லியிருக்கிறார்.
காட்டை சுற்றிக் காட்டும் வேடத்திற்கு கட்டான உடலை வைத்திருப்பதன் மூலம் கனகச்சிதமாக பொருந்தியிருகிறார் விஷால். ஆனால் பல இடங்களில் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தம் இல்லாததது போன்று இருக்கிறது அவரின் செயல்கள். எப்போதும் போல சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் அசத்தியிருக்கும் விஷால், பேங்காக்கில் நடக்கும் காட்சிகளில் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் புலம்பும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
விஷாலுடன் லேட்டாக ஜோடி சேர்ந்திருக்கும் திரிஷா, தன பங்கை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செய்துள்ளார். திரிஷாவுடன் ஜோடி சேர்வது விஷாலின் பல நாள் கனவாகும். பளபளவென்று வரும் திரிஷா இலகுவான தனது கதாபாத்திரத்தை ஈஸியாக செய்துள்ளார்.
சுனைனா, சமீபத்தில் வந்த படங்களில் மிகவும் அழகோடும் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது முந்தையப் படங்களை காட்டிலும் இதில் கூடுதலான அழகோடு காட்சியளிக்கும் சுனைனா, தான் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் தனக்கு ஒரு சின்ன பரிசையாவது தரமாட்டான என்று ஏங்கும் ஒரு சராசரி பெண்ணாக இருக்கிறார், பல கோடி பெண்களின் மனதை ரொம்ப அழகாக பிரதிபலிக்கிறார். காதலை முறிப்பதற்கு, “செருப்பு சைஸ் என்ன , இடுப்பு சைஸ் என்ன” என்று புது ஐடியா கொடுக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “அழகோ அழகு…” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். படத்திற்கு பின்னணி இசை தருண். ரொம்பவே வித்தியாசமான சவுண்ட்களை கொடுத்திருக்கிறார் தருண்.
ஒரு குழப்பமான கதையை ஊட்டியில் ஆரம்பித்து வழக்கம் போல் பாங்காங்கில் முடிக்கிறார் இயக்குனர். படத்தில் பல சஸ்பென்ஸ் காட்சிகளை வைத்துள்ள திரு, பாங்காக் பகுதி கதையா இன்னும் அழுத்தமாக சொல்லிருந்தால் சமர் பெரிய அளவில் சாதித்திருப்பான். விஷாலின் நடிப்பில் நல்ல முனேற்றம் தெரிகிறது. சமர், (பொங்கல்)களத்தில் நின்று வெல்வான்.
0 comments:
Post a Comment