Sunday, February 3, 2013

பப்பட்டின் வெற்றி வழி

பங்கு வாங்கியாகி விட்டது.அதை எப்படி தொடர்ந்து கண்காணிப்பது எனவும் பார்த்தாகி விட்டது.இனி செய்ய வேண்டியது என்ன?ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.யாரிடம் ஜக்கிரதையாய் இருக்க வேண்டும்?பங்கு சந்தையிடம்.பப்பட் பங்கு சந்தையை பற்றி மிஸ்டர் மார்க்கட் என்ற பெயரில் சுவரசியமாக ஒரு கதை சொல்லுவார்.அந்த கதையை விட்டுவிட்டு அதில் உள்ள கருத்தை மட்டும் சொல்லுகிறேன். "Market is always correct.market is perfect " என்ற ஒரு மாயை பங்கு சந்தையில் நிலவுகிறது.பப்பட் அது தவறு என்கிறார்.பங்கு சந்தை பெர்பெக்டாக இருந்திருந்தால் நான் இன்னும் ஏழையாக தான் இருந்திருப்பேன் என்கிறார்.பப்பட்டின் வார்த்தைகளில் Market is not awlays correct.It is at times correct.There is a difference between both these views.The difference is like that between day and night. பங்கு சந்தையின் விலை உண்மை விலையை விட அதிகமாக இருக்கும்போது பேசாமல் இருக்க சொல்கிறார்.பங்கு சந்தை விலை உண்மை விலையை விட குறைவாக இருக்கும்போது பங்குகளை வாங்க சொல்கிறார்.பங்கு விலை குறைந்தால் தான் அவர் மகிழ்வார்.கடையில் பொருள் விலை குறைந்தால் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சி தானே?அது போல் தான் இதுவும் என்கிறார் பப்பட். நிறைய கம்பனிகளின் பங்குகளை வாங்குவதையும் அவர் ஆதரிக்கவில்லை.20 கம்பனிகளின் பங்குகளுக்கு மேல் அவர் வாங்கமாட்டார்.நாம் இன்னும் குறைவாக தான் வாங்க வேண்டும்.ஒரே கம்பனியில் பணம் போடுவதும் தவறு.10 நல்ல கம்பனிகளை கண்டறிந்த பிறகு மேலும் பணம் போடவேண்டுமென்றால் அந்த 10லேயே போடலாம் அல்லவா?11வது கம்பனி எதற்கு என கேட்கிறார் பப்பட். "which is the right time to sell?"' என்ற குழப்பம் பங்கு சந்தை துறைகளில் உண்டு.பப்பட் இதற்கு தெளிவான பதில் வைத்திருக்கிறார். NEVER என்பது தான் அவரின் பதில்.நம்மால் அப்படி செய்ய முடியாமல் போனாலும் குறைந்தது 10 - 20 வருடங்களுக்கு வாங்கிய பங்கை விற்கக் கூடாது. பப்பட் இதற்கு வீட்டை உதாரனம் சொல்கிறார்.10 லட்சம் தந்து வீடு வாங்குகிறோம்.வாங்கிய மறுநாள் சந்தை மதிப்பு 11 லட்சம் ஆகிறது.லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பதற்காக வீட்டை விற்போமா?சந்தை விலையை பற்றி கவலைப்படவே மாட்டோம் அல்லவா?அதுபோல் தான் பங்குகளும் என்கிறார் பப்பட். இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கிறேன்.பப்பட்டின் வழிமுறையில் முக்கியமானவற்றை சொல்லிவிட்டேன்.முதலீடு செய்ய விரும்புவோர் பப்பட்டின் புத்தகங்களை படித்து பார்த்து முதலீடு செய்க என அன்புடன் பரிந்துரைக்கிறேன். சில உருப்படியில்லாத விஷயங்களையும் சொல்லியாக வேண்டும். ஊருக்கு எத்தனை உபதேசம் செய்தேனே.என் பங்கு சந்தை அனுபவம் என்ன என கேட்கிறீர்களா?நான் பங்கு வாங்கிய கதையை தான் சொன்னேன்.பிறகு என்ன ஆச்சு என்பதையும் சொல்லிவிடுகிறேன். கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து 2 கம்பனிகளின் பங்குகளை வாங்கினேன்.20 வருடம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வாங்கினேன்.வாங்கியபோது ஒரு கம்பனி பங்கு விலை 234 ரூபாய்.இன்னொரு கம்பனி பங்கு 70 ரூபாய். பங்கு வாங்கிய 1 வருடத்தில் அமெரிக்க விசா கிடைத்தது.இருக்கும் பணம் முழுவதையும் வங்கிகணக்கில் காட்ட வேண்டும் என விசா கன்சல்டன்ட் சொன்னார்.234 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 246 ரூபாய்க்கு விற்றேன்.80 ரூபாய்க்கு வாங்கியதை 85 ரூபாய்க்கு விற்றேன். அந்த இரு பங்குகளின் உண்மை விலை 400 - 500 என கணித்து வைத்திருந்தேன்.80 ரூபாய் பங்கு மிக அன்டர்வேல்யூட் பங்கு.நிறைய வாங்கிக்குவித்திருந்தேன். விசா கிடைத்து அமெரிக்கா வந்துவிட்டேன்.இப்போது 234 பங்கு 1365 ரூபாய்க்கு விற்கிறது.80 ரூபாய் பங்கு 500 தாண்டியதாக 6 மாதம் முன் பார்த்தேன். ஆனால் நான் துளி கூட கவலைப்படவில்லை. இன்னொரு தமாஷையும் சொல்ல வேண்டும்.அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புத்தகத்தை வாங்கினேனே,அதை வாங்கிய பிறகு எதேச்சையாய் நெட்டில் பார்த்தபோது அது இலவசமாக நெட்டில் கிடைக்கிறது. அன்று மிகவும் மனம் நொந்து போனது உண்மை.சிரிப்பாகவும் இருந்தது.Life keeps on teaching me new lessons everyday. சரி நீங்கள் எல்லாரும் அந்த புத்தகத்தை ஓசியில் படிக்க வேண்டுமா? ஆசை தோசை அப்பளம் வடை. எதாவது தரும காரியத்துக்கு ஒரு சிறு தொகை தருவேன் என்று சத்தியம் செய்தால் தான் அந்த சுட்டியை கொடுப்பேன். எல்லாரும் சத்தியம் செஞ்சாச்சா? வெரிகுட் ....அடப்பாவி.இங்க பாரு அனியாயத்தை...அஷ்லின் மனசுக்குள் "அ" சொல்லிட்டு "சத்தியம்"னு சொல்லற மாதிரி இருக்கு.அதனால அவருக்கு மட்டும் இந்த சுட்டி கிடையாது. மத்தவங்க மட்டும் இங்க போய் படிங்க. இந்த சுட்டில ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமா இருக்கும்.புத்தகம் எடிட் செஞ்ச வெர்ஷன்.அதனால என்ன?நிறைய படிச்சா நல்லதுதானே? Happy investing.
Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment