Saturday, February 2, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரை விமர்சனம்

’இன்று போய் நாளை வா’படத்தின் ரீமேக் என்பதாலும் சந்தானம்-பவர் ஸ்டார் காம்பினேசன் என்பதாலும் என் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. பொங்கல் போட்டியில் குதித்து ஹிட் அடித்திருக்கும் இந்த படத்தின் விமர்சனம்.

ஒரு ஊர்ல ஒரு அழகிய பெண்ணும் அவரது குடும்பமும் புதிதாகக் குடியேற, அந்த பெண்ணை மடக்க மூன்று ஹீரோக்களுக்கு வரும் ஆசையும் அதற்கு அவர்கள் செய்யும் அட்டூழியமுமே படத்தின் ஒரு வரிக் கதை.

சந்தானத்தை பார்த்ததும் திரையரங்கில் விசில் பறக்கும். ஆனால் பவர் ஸ்டார் வரும் போது திரையரங்கு கிழிகிறது. பவருக்கு எங்கிருந்து இத்தனை ரசிகர்கள் வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சமயோசிதமாக சிந்தித்து பவர் ஸ்டாரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் தயாரிப்பாளர் சந்தானம். பல இடங்களில் அபாரமான   பாடி லாங்வேஜ்களால் கலக்குகிறார். வாயை வைக்கும் விதம், உடலை அசைக்கும் பாங்கு என பவர் ஸ்டார், ஒரு முழு காமெடியனாக இதில் அவதாரம் எடுத்திருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பது போன்ற காமெடிகளைப் பண்ணுவதை விட்டுவிட்டு, காமெடியனாக நடிக்க ஆரம்பிக்கலாம்.பல சீன்களில், இவரது பிரசன்ஸே சிரிப்பை வரவழைக்கிறது.

இந்த படத்தின் இன்னொரு அறிமுகம் சேது. புதிய முகமாக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். நடிப்பு, காமெடி என எல்லாவற்றியும் நன்றாகவே பண்ணியிருக்கிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தால் ஒரு பெரிய ரவுண்டு வரலாம்.

படத்தின் நாயகி விஷாகா. நல்ல அழகா இருக்காங்க. இந்த படத்தில் மிகப்பெரிய வேலை சிரிப்பதும் அழுவதும் மூன்று பேரை அலையை விடுவதும். அடியே என் அன்னகிளியே பாடலில் மிக அழகாக இருக்கிறார்.

கோவை சரளா ரேஞ்சே தனி, அவரும் VTV கணேஷும் தனி அளப்பரையை செய்துள்ளார்கள். அவர்களும் படத்துக்கு ஒரு பெரிய பலம்தான்.

இப்படத்திற்கு இசை தமன். படம் வெளிவருவதற்கு முன்னரே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். கானா பாலா குரலில் இரண்டு பாடல்கள் அருமையோ அருமை.

கவலை மறந்து சிரிக்க பல நாட்களுக்கு பின்னர் வந்திருக்கும் படம். ஆனால் பாக்யராஜின் ’இன்று போய் நாளை வா’ அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை. மொத்ததுல்ல லட்டு நல்ல இனிப்பா இருக்கு. பார்த்த நமக்கு மனசெல்லாம் சந்தோசம் மட்டும்தான் இருக்கு. இந்த வருடத்தின் முதல் ஹிட் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment