Saturday, February 2, 2013

விஸ்வரூபம் – திரை விமர்சனம்

நடிப்பு – கமலஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, உபேந்திரா, ராகுல் போஸ், சேகர் கபூர் மற்றும் பலர்.

இசை – ஷங்கர்-எஹ்சான்-லாய்

இயக்கம் – கமலஹாசன்

ஒளிப்பதிவு – சானு வர்க்ஹீஸ்

பாடல்கள் –  வைரமுத்து

தயாரிப்பு – ராஜ் கமல் இன்டர்நேஷனல் .

படத்தின் கதைச்சுருக்கம், கமல் ஒரு கதக் நடனக் கலைஞர். கமலஹாசனின் மனைவியாய் வரும் பூஜா மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி துறையில் வேலை செய்கிறார். கமலின் நடனப்பள்ளியில் பயிலும் மாணவிதான் ஆண்ட்ரியா. கமலின் மனைவிக்கும் அவருடைய நிறுவன அதிகாரிக்கும் காதல் மலர்கிறது. அந்த காதலை அடைவதற்கு தனது கணவனிடம் ஏதாவது குற்றத்தை கண்டு பிடிக்க ஒரு டிடெக்டிவை அனுப்புகிறார் பூஜா. அதன் பின்னர் கமல் கதக் நடனக்கலைஞர் மட்டும்  அல்ல, அவர் ஒரு இஸ்லாமியன் என்பதும் தெரிய வந்ததும் கதை சூடு பிடிக்க துவங்குகிறது.. அதன் பின்னர் எதிர்களை அடித்து துவம்சம் செய்வதை பார்க்கும் பூஜா தன கணவனிடம் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதை எண்ணி வியக்கிறார்.

கமல் ஒரு ரகசிய அதிகாரி, அல்கொய்தா அமைப்பில் பயிற்சி பெற்றவர், அவர் அமெரிக்காவை அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் திட்டத்தை அமெரிக்க அதிகாரிகளுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது வெள்ளித்திரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கமல் ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர் எனபது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப காட்சிகளில் கதக் கலைஞராக நடை உடை பாவனைகளில் நளினம் காட்டி அசத்துகிறார் உலக நாயகன். அவரின் நீண்ட கால பசிக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது இந்த வேடம். அதன் பின்னர் வரும் கமல் சராசரியாக ஒரு அதிகாரயின் வேடத்திற்கு பொருத்தமானவராகவே வளம் வருகிறார். ஒரு நிடிகர் கமல் என்பதை காட்டிலும், ஒரு இயக்குனர் கமல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இந்த விடயத்தை விமர்சனத்தில் சேர்க்க மனம் இல்லைதான், ஆனால் தற்போது நிலவும் தடைகளுக்காக இந்த வசனத்தை கூறியே ஆக வேண்டும். சில இஸ்லாம்  உணர்வாளர்கள் இந்த படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக தடையுத்தரவு வாங்கினார்கள்?  ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு சூழல் நிலவுவதாக தெரியவில்லை. போதா குறைக்கு கமலே இந்த படத்தில் ஒரு இஸ்லாமியனாகத்தான் வருகிறார்.

இந்த படத்தில் ஆப்கானில் அல்கொய்தா அமைப்பினர் செய்யும் கொடுமைகளையும், அமெரிக்காவின் அட்டூழியங்களையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டியுள்ளார். படத்தின் காட்சியமைப்புகளும், ஒலி அமைப்புகளும்  ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது.

நிச்சயமாக கூறவேண்டுமானால், கமல் என்னும் தனி மனிதன் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment