Monday, April 30, 2012

மைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்


ரூ.20,000க்கும் கீழான விலையில், டூயல் கோர் சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக, மைக்ரோமேக்ஸ் ஏ85 சூப்பர் போன் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மைக்ரோமேக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதிய பாணியில் வடிவமைக்கப்பட்ட போனாக இது உள்ளது. மோட்டாரோலா அல்லது எல்.ஜி. யின் ஸ்மார்ட் போன் போலத் தோற்றமளிக்கிறது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை உள்ளது. இதன் திரை 480x800 பிக்ஸெல் திறன் கொண்டது. திரைக்கு அருகாமையிலேயே முன்பக்க கேமரா மற்றும் பல சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதன் மைக்ரோ எஸ்.டி. கார்டினை எளிதாக மாற்றலாம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூடி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ப்ரோயோ சிஸ்டம் பதியப்பட்டுள்ளது.
‘Gesture control’ எனப்படும் அசைவுகள் மூலம் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்; மாற்றலாம். மியூசிக் பிளேயர், ரேடியோ, வீடியோ பிளேயர் என அனைத்தும் சற்று சிறப்புகளோடு தரப்பட்டுள்ளன. இந்த போன் 4 பேண்ட் அலைவரிசையில் 3G HSDPA and HSUPA சப்போர்ட் தருகிறது. இத்துடன் வை-பி மற்றும் புளுடூத் கிடைக்கின்றன. இணைய இணைப்பில் செயல்படுத்த பல அப்ளிகேஷன்கள் பதிந்து கிடைக்கின்றன.
ஆட்டோ போகஸ் திறன் கொண்ட 5 எம்பி கேமராவிற்கு பிளாஷ் இல்லாததால், பகல் வெளிச்சத்தில் எடுக்கப்படும் போட்டோக்களே நன்றாகக் கிடைக்கின்றன. திறன் கொண்ட பேட்டரி 7 மணி நேரத்திற்கும் மேலாக மின் சக்தி அளிக்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.19,500. இந்த வகையில் டூயல் கோர் சிப் கொண்டு இந்த விலைக்கு விற்கப்படும் முதல் போன் இதுதான். அந்த வகையில் இதனை வாங்கிப் பயன்படுத்தலாம். பணம் கூடுதலாகச் செலவழிக்க விருப்பமுள்ளவர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 வாங்கலாம்.

நன்றி: தினமலர்

Sunday, April 29, 2012

ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...'

ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து, "நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்...' என்றார்.
அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து ஞானம் பெற்றேன். இப்போது இந்த ஜென்மா கிடைத்துள்ளது. இனி, நான் எதையும் கற்றுணர வேண்டும் என்பதில்லை. இந்த ஜென்மாவில், மேலும் ஞானத்தால் பகவானை அடைவேன். இனி, பிறவி இராது.
"பூர்வ ஜென்மங்களின் புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங் களில் நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது. பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது, ஒரு பசுவை கட்டிப்போட்டு, தண்ணீர் கொடாமல் இருந்து விட்டேன். அந்தப் பாவத்துக்காக, எனக்கு நரகலோக வாசம் ஏற்பட் டது. நரகத்தில், என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
"இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டு இருந்தோம். அந்த சமயம், திடீரென்று, குளிர் காற்று வீசியது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன். அப்போது எம தூதர்கள், ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது. அந்த புண்ணிய புருஷன் வந்ததால், இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து கொண்டேன். அந்த எம தூதன், புண்ணிய புருஷனுடன் வரும்போது, நரகலோகத்தை காண்பித்தபடி வந்தான்.
"நரகவாசிகள், அந்த புண்ணிய புருஷனிடம், "ஐயா... நீங்கள் போய் விடாதீர்கள். இங்கேயே இருங்கள். நீங்கள் இருப்பதால், இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது...' என்று கூறினர். அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து, "நான் பல யாக யக்ஞங்கள் செய்துள்ளேன். தான தர்மம் செய்திருக் கிறேன். நான் விபச்சித் என்ற அரசனாக இருந்த போது, குடிமக்களை நீதியுடன் பரிபாலனம் செய்தேன். அப்படி இருக்கும்போது, என்னை ஏன் நரக லோகத்துக்கு அழைத்து வந்தீர்...' என்று கேட்டார்.
"அதற்கு எம தூதன், "ஐயா... நீர் சொல்வதெல்லாம் உண்மை! ஆனாலும், நீர் உம்முடைய மனைவி ஒருத்திக்கு, தவறு செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர். ஒரே ஒரு சமயம் தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான். அதனால்தான் உமக்கு நரகலோக வாசம் இல்லாவிட்டாலும், நரகலோகத்தை பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத்து உள்ளது. இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம். அதோ விமானம் வருகிறது...' என்றான் எமதூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் இங்கிருப்பதால் இத்தனை பேர்களுக்கும் சுகம் ஏற்படுகிறது. ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நரகமானாலும், பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து விடுகிறேன்...' என்றார்.
"இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும். புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான்! நீங்கள் வந்து விமானத்தில் ஏறி, சுவர்க்கம் செல்லுங்கள்...' என்றான் எம தூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் செய்த புண்ணியங்களில் ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன். இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்...' என்றார். அதேபோல் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார். அந்த புண்ணிய பலன் கிடைத்ததும், பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது, அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார். அந்தக் கூட்டத்தில், நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்து எனக்கும் விடுதலை கிடைத்தது.
"அதன் பின், பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது. பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து, ஞானத்தை வளர்த்தேன். ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...' என்றது அந்தக் குழந்தை.
இப்படி ஒரு சின்ன கதை உள்ளது. இங்கு அதை ஏன் சொல்கிறோம் என்றால், எந்த பாவம் செய்தாலும் தண்டனை உண்டு; அதனால், ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.

நன்றி: தினமலர்

நீர் மூழ்கி கப்பல் தயாரிக்கும் சாதனை இளைஞர்!

 
சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த ஷாங் வுயி என்ற இளைஞர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். எவ்வளவு சிரமப்பட்டு பணியாற்றியும், கையில் காசு நிற்கவில்லை. சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். தன் மெக்கானிக் மூளையை பயன் படுத்தி, சிறிய அள விலான நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிட்டார். ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு பிடித்து, அதில், தன் தொழிலை ஆரம்பித்து விட்டார். கடலுக்கு அடியில் சென்று, மீன் பிடிக்கும் வகையில், சிறிய அளவிலான நீர் மூழ்கி கப்பல்களை தயாரித்தார்.
இவர் தயாரிக்கும் கப்பலின் மூலம், கடலுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்துக்கு செல்ல முடியும். தொடர்ந்து பத்து மணி நேரம் பயணிக்கவும் முடியும். இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதியுடைய இந்த கப்பலில், ஆக்சிஜன் டாங்க், வீடியோ கேமரா ஆகிய வசதிகளும் உள்ளன. ஒரு கப்பலின் விலை, 17 லட்சம் ரூபாய். இந்த கப்பலில் செல்வதால், 40 நிமிடங்களில், 50 கிலோ அளவுள்ள மீன்களை பிடிக்க முடிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஷாங் வுயிக்கு, தற்போது ஆர்டர்கள் குவிகின்றன.

நன்றி: தினமலர்