நீண்ட நெடிய பயணம் செய்யும் நிறைய லாரி டிரைவர்களை பார்த்து இருக்கின்றேன்.. அவர்கள் கண்களில் எப்போதும் ஒரு தூக்க கலக்கம் குடி கொண்டு இருக்கும்..
லாரியை விட்டு இறங்குவதில் இருந்து சாப்பிட்டு லாரியை எடுப்பது வரை அவர்களிடம் எதுக்கும் அலட்டிக்கொள்ளாத ஒரு பொறுமையை நாம் பார்க்கலாம்.. நாள் முழுவது ரோட்டையே பார்த்துக்கொண்டு லாரி ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் அவர்கள்.. நிறைய விபத்துகளை பார்த்ததன் மூலம் கண் எதிரில் வாழ்க்கை சுக்கு நூறாவதை பார்த்து பார்த்து தினமும் வாழ்பவர்கள்.. ஒரு சிலரைத்தவிர மத்திமவயதை கடந்த பல டிரைவர்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள்.. அப்படி அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் அர்ஜென்டினா லாரி டிரைவரின் கதையைத்தான் இந்த படத்தில் பார்க்கப்போகின்றீர்கள்.
================
Las acacias (2011) உலகசினிமா/அர்ஜென்டினா படத்தின் ஒன் லைன்
லாரி டிரைவர் தனது லோடு லாரியில் கைகுகுழந்தையுடன் இருக்கும் தாயை பார்டர் தாண்டி அவள் செல்லும் ஊருக்கு கொண்டு போய் சேர்ப்பதே கதை...
=============
Las acacias (2011) உலகசினிமா/அர்ஜென்டினா
ரூபன் ஒரு சரக்கு லாரி டிரைவர்.. டாஸ்மார்க் சரக்கு எத்திக்கிட்டுப்போற ஆள் இல்லை. பெரிய பெரிய மரம் ஏத்திக்கிட்டு போற டிரைவர்...
ரூபனுக்கு சொல்லிக்கொள்வது போல சொந்தம் என்று யாரும் இல்லை.. டெய்லி பெருகுவேயில இருந்து பீயுனேஸ் ஏர் என்ற இடத்துக்கு மரத்தை ஏத்திகிட்டு போற வேலை..
ரூபனோட ஓனர் ஒரு பொண்ணை ஏத்திகிட்டு பார்டர் தாண்டி அவ இறங்க போற ஊர்ல போற வழியில் விட்டு விடு என்று சொல்ல, அவனும் மரத்து சரக்கை ஏத்திகிட்டு அந்த பொண்ணுக்கா வெயிட்பண்ணா?? அது 5 மாச கைக்குழுந்தையோட வந்து லாரியில ஏறுது...
அவனுக்கு அந்த பெண்ணையும் குழந்தையையும் அவனுக்கு பிடிக்கலை.. அவன் அவளை சரியான இடத்துல இறக்கி விட்டானா? என்பதை கொஞ்சம் பொறுமையா பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. காரணம் படம் ரொம்ப ஸ்லோவா இருக்கும்...
====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
இந்த படம் ரொம்ப ஸ்லோவான படம்.
ஒரு வாரி டிரைவர் கீர் போடுவது, ஸ்டியேரிங்கை திருப்புவது, சிகரேட் பற்ற வைப்பது... ஆக்சிலேட்டரை அழுத்துவது என்று காட்டி நம் பொறுமையை நன்றாகவே சோதித்தாலும்... கொஞ்ச நேரத்தில் நீங்களும் அந்த லாரியில் பயணிக்கு சக பயணியாய் மாறிவிடுவீர்கள்.
ஒரு வேளை அதுக்குதான் அது போல ஷாட் வச்சாங்களான்னு எனக்கு தெரியலை.,..
முதலில் ரூபனுக்கு அந்த பெண்ணையும் குழந்தையும் பிடிக்கவே பிடிக்காது குழந்தை பசிக்காக அழுவதும் அவளுக்காவும் குழந்தைக்காவும் லாரியை நிறுத்தி செல்லுதலில் கடுப்பை கண்பிப்பதும் பிறகு எப்படி மெல்ல மெல்ல அந்த பெண் மீதும் அந்தக்குழந்தை முதும் எப்படி மனதை பறிக்கொடுக்கின்றான் என்பது கதை..
டயலாக் எல்லாம் எட்டு பக்கத்தில் முடித்து விடலாம்.. அந்த அளவுக்கு ரொம்ப குட்டி குட்டி டயலாக்குகள்..
நிறைய காட்சிகள் விஷுவல் மூலமாகவே பிரிய வைத்து இருப்பார்கள்..
இவன் யாருமில்லாத அனாதை...அவளுக்கு எல்லோரும் இருந்தும் அனாதை...இரண்டு பேரும் லாரியில் இரண்டு நாட்கள் பயணம் மேற்க்கொள்ளுகின்றார்கள்...
முடிவு மிக நெகிழ்ச்சியாக கவிதையாக படத்தை முடித்து இருப்பார்கள்.
முக்கியமாக குழந்தை அவனை பார்த்து சிரிக்கையில் தியேட்டரில் ஒரு பெரிய மகிழ்ச்சிபிரவாகம்க ரசிகர் அதனை கொண்டாடினார்கள்.
ஒரு லாரி ,ஒரு டிரைவர், ஒரு பெண், ஒரு குழந்தை அவ்வளவுதான் படம்....
இந்த படம் சென்னை 9வது சர்வதேச திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிட்டார்கள்..
0 comments:
Post a Comment