Sunday, April 8, 2012

திருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது!!!


சிவ ஸ்தலங்களில் மிக அரிதான,மிக முக்கியமான,அளவற்ற சக்திவாய்ந்த ஆலயம் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலேஸ்வரின் இந்த ஆலயத்தினுள்ளே சித்தர்களில் ஒருவரான இடைக்காடரின் ஜீவசமாதி  அமைந்திருக்கிறது.

திருமஞ்சனக்கோபுரம் வழியாக திரு அண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்ததும்,இடது பக்கமாக தெரிவது கோசாலை ஆகும்.இந்த கோசாலைக்குள்ளே தெற்கு நோக்கியவாறு இருக்கும் ஒரு சிறு குகை போன்ற அமைப்பே இடைக்காடர் சித்தரின் ஜீவசமாதி ஆகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 முதல் 12 மணிக்குள்ளும்;அல்லது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 7 முதல் 9 மணிக்குள்ளும் இடைக்காடர் சித்தரை வழிபட ஏற்ற நேரம் ஆகும்.

முழுக்க முழுக்க ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள் குறைந்தது கால் கிலோ, விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழம் பாக்கெட் ஒன்று, டயமண்டு வடிவில் இருக்கும் கல்கண்டு ஒரு கிலோ, பத்தி,நெய் தீபம் ஏற்ற கொஞ்சம் நெய் மற்றும் தாமரை நூல் திரி,தீப்பெட்டி,(மணமானவர்கள்) தேங்காய்,வாழைப்பழம் மற்றும் வேறு இரண்டு விதமான பழங்களுடன் வந்து இடைக்காடரை வழிபட்டு  செல்ல வேண்டும்.இவ்வாறு எட்டு திங்கட் கிழமை அல்லது எட்டு வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாடு செய்தால்,நமது தீர்க்கமுடியாத பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

இடைக்காடர் சித்தரை வழிபட்டபின்னர்,கொஞ்சம் டயமண்டு கல்கண்டையும்,கொஞ்சம் வாழைப்பழத்தையும்,கொஞ்சம் விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சைப் பழங்களையும் கண்டிப்பாக அவரவர் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது ரத்த உறவுகளுக்கு தர வேண்டும்.இவ்வாறு செய்தால் தான் வழிபாடு முழுமையடையும்.

நன்றி: ஆன்மிகக்கடல்

1 comment:

  1. இறைவன் ஒருவரே. அவர் ஒளி யாக உள்ளார். உயிர் சிறிய ஒளி .
    உயிர் ஒளி சிறியதாக உள்ளது. அதை திருஅடி தவத்தின் மூலம் பெரியது செய்து
    வாழ்வை நல்ல படியாக வாழலாம். ஞானம் பெறலாம்.
    இறைவன் திருவடி நம் கண்மணியே. திருவடி தவம் செய்து வாழ்வை நல்ல படியாக வாழலாம் ..

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    Video link
    http://sagakalvi.blogspot.in/2013/06/2013.html


    https://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

    ReplyDelete