Sunday, April 29, 2012

நீர் மூழ்கி கப்பல் தயாரிக்கும் சாதனை இளைஞர்!

 
சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த ஷாங் வுயி என்ற இளைஞர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். எவ்வளவு சிரமப்பட்டு பணியாற்றியும், கையில் காசு நிற்கவில்லை. சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். தன் மெக்கானிக் மூளையை பயன் படுத்தி, சிறிய அள விலான நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிட்டார். ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு பிடித்து, அதில், தன் தொழிலை ஆரம்பித்து விட்டார். கடலுக்கு அடியில் சென்று, மீன் பிடிக்கும் வகையில், சிறிய அளவிலான நீர் மூழ்கி கப்பல்களை தயாரித்தார்.
இவர் தயாரிக்கும் கப்பலின் மூலம், கடலுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்துக்கு செல்ல முடியும். தொடர்ந்து பத்து மணி நேரம் பயணிக்கவும் முடியும். இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதியுடைய இந்த கப்பலில், ஆக்சிஜன் டாங்க், வீடியோ கேமரா ஆகிய வசதிகளும் உள்ளன. ஒரு கப்பலின் விலை, 17 லட்சம் ரூபாய். இந்த கப்பலில் செல்வதால், 40 நிமிடங்களில், 50 கிலோ அளவுள்ள மீன்களை பிடிக்க முடிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஷாங் வுயிக்கு, தற்போது ஆர்டர்கள் குவிகின்றன.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment