Sunday, April 22, 2012

2 மில்லியன் வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் சமைத்த சாம்பல் கண்டுபிடிப்பு

wonderwerk-cave-south-africaபல ஆண்டுகளுக்கு முற்பட்ட சாம்பல் தென்ஆபிரிக்க குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்கள் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்பே சமைத்துள்ளனர் என்ற உண்மையை விளக்ககூடுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
wonderwerk-cave-hunting-fire
Boston University in Massachusett ஐ சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் Francesco Berna மற்றும் அவரது குழுவினர் புற்கள், இலைகள், எலும்புகள் எரிக்கப்பட்டதனால் உருவான இந்த சாம்பலை தென்ஆபிரிக்காவில் நோர்த் கேப் எனும் இடத்திலுள்ள Wonderwerk குகையின் 30 மீட்டர் ஆலத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
wonderwerk-cave-hunting
இந்த குகையும் மனிதனின் 2மில்லியன் வரலாற்றுக்கான முக்கியமான சான்றுகளில் ஒன்றாகும்.ஆனால் மனிதனின் எந்த இனப்பிரிவை சேர்ந்தவர்கள் இதை பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. எனினும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி இது Homo erectus இனால் உருவாக்கப்பட்டசாம்பலாக இருக்லாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment