Wednesday, April 11, 2012

குப்பையில் ‘கோமேதகம்’



சென்னையின் புறநகர்ப் பகுதியான போரூரையடுத்த மவுலிவாக்கம் பஞ்சாயத்தில் கோவிந்தராஜன் நகரில் 50 அடுக்குமாடி வீடுகள்  உள்ளன.அங்குள்ள அனைவருக்கும் வீட்டிலேயே குப்பையை மக்க வைத்து உரமாக்குவதற்கான எண்ணம் ஏற்பட்டுள்ளது.மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள்ளாக இந்த மாற்றம்.எந்த ஒரு சிறிய ப்ளாஸ்டிக் பையோ,காகிதக் குப்பையோ அதை இப்பகுதி சிறுவர்கள் எடுத்து வீட்டு வாசலில் உள்ள பொதுவான குப்பைக் கூடையில் போட்டுவிடுவர்.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் இயக்குநர் (பயிற்றுவித்தல்)ஏ.சுப்பையா இங்கே 2 ஆண்டுகளுக்கு முன் வந்தவுடன் இந்த மாற்றம் தொடங்கியது.
காய்கறி கழிவுகள்,காகிதம் கழிவுகள் உட்பட சமையலறை குப்பையை மக்க வைத்து இயற்கை உரமாக மாற்ற முடியும்.ஒரு சிறு குழி போதும்.அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்போர் பூந்தொட்டிகளில் உரம் தயாரிக்கலாம்.ஒவ்வொரு மனிதன் மூலமாக 200 முதல் 500 கிராம் குப்பை சேர்கிறது.குப்பையை மக்க வைத்து உரமாக்கினால் இதை 10 கிராம் ஆக்கிவிடலாம் என்கிறார் சுப்பையா.இவர் கோவிந்தராஜன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் காரியதரிசியாகியிருக்கிறார்.இதனால்,குப்பையை மக்கச் செய்து ‘வீட்டு உரம்’ தயாரிக்கும் வேலை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
நன்றி:த ஹிந்து 9.8.12

0 comments:

Post a Comment