Sunday, April 22, 2012

Refrigerator வேண்டாம்! குளு குளு தண்ணீர் குடிக்க நீங்க ரெடியா?

கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரம், மனசு கூலா குடிப்பதற்கு ஏங்கும்…… அப்போது கைகள் அணைத்து கொள்வது குளிர்சாதன பெட்டியில் உள்ள குளிர் தண்ணீரை தான்… காரணம், வெளியில் அலுமினிய, பிளாஸ்ரிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சூழல் வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள தண்ணீர் உடல் நலத்துக்கு நல்லதல்ல, அது சமிபாடு செயற்திறனை குறைப்பதோடு, வயிறு பருமன் ஆவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
அதிலும் உணர்ச்சி மிக்க பற்களை கொண்டவர்களால் குளிராக குடிக்கவே முடியாது…
இதற்கு எல்லாம் தீர்வு என்ன…? கோடை காலங்கலில் எம்மால் கூலாக இருக்க என்ன வழி?
அதை நமது தமிழ் முன்னோர்களே சொல்லி தந்து இருக்கிறார்கள்.
அது தான் மண்பாணை குடிநீர்…!
என்ன சிரிப்பாக இருக்கிறதா…! இது முற்றிலும் உண்மை.
மண் பானையில் உள்ள குடிநீர் குளிர்ச்சியாக இருப்பதற்கான விஞ்னான விளக்கத்தை பார்ப்போம்…
மண் பானைகளில் பார்வைக்கு புலப்படாத மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இத் துளைகள் மூலம் நீர் வெளியே சிந்தாது, காரணம், அந்த அளவுக்கு அவை நுண்ணிதாய் இருக்கும்.
மண் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்ததும், அதில் உள்ள நுண் துளைகள் மூலம் தண்ணீர் கசிந்து பானையின் வெளி மேற்பரப்பில் படலம் போல் படர்ந்து காணப்படும்.
சுழலின் வெப்பம் அவ் வெளி மேற்பரப்பில் உள்ள தண்ணீர் படலத்தை ஆவியாக்குவதிலேயே இழக்கப்பட்டுவிடுவதால், பானையின் உள்ளே வெப்பம் செல்லாது தண்ணீர் குளு குளு என இருக்கும். அத்துடன் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீரின் வெப்ப நிலையும் மேற்படி நீர்படலத்தை ஆவியாக்குவதற்கு செலவாவதால் அத் தண்ணீர் வெளி வெப்ப நிலையை வெட மிகவும் குறைவான வெப்பநிலையில் இருக்கும்.
அத் தண்ணீரின் குளுமை, பற்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தாது, உடலுக்கு தீங்களிக்காது அற்புதமான குளிர்மையை உங்களுக்கு தரும்.
அத்துடன் குளிர்சாதனப் பெட்டி வெளியேற்றும் வெப்பம் காரணமாக சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் கதாநாயகர்களாகவும் நீங்கள் விளங்கலாம்.
நன்றி :http://www.tamilcloud.com

0 comments:

Post a Comment