Sunday, April 22, 2012

செசன்யாவில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

செசன்யா நாட்டில் டைனோசர் நாற்பதுக்கும் மேற்பட்ட முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ரஷியாவைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தவை டைனோசர்கள். பூமியில் வாழ்ந்த விலங்குகளிலே மிகவும் பிரம்மாண்டமானவை அவை. புவியியல் மாற்றங்களினால் காலப்போக்கில் அவை அழிந்து விட்டாலும் அவற்றின் எலும்புகள் முட்டைகள் மட்டும் படிமங்களாக உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

செசன்யா நாட்டில் ஆய்வு செய்ய புவியியல் ஆய்வாளர்கள் அங்கு ஒரு பாறையில் இருந்த 40 டைனோசர் முட்டை படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து செசன் மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் கூறியதாவது

முன்னாள் சோவியத் ஜார்ஜியாவின் எல்லைப் பகுதியில் இருந்த மலையை சாலைப் பகுதிக்காக உடைத்து எடுத்த போது அந்த மலையில் ஓவல் வடிவ படிமங்கள் அதிகம் இருந்தன. அவற்றை புவியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்த போது அவை டைனோசர் முட்டை படிமங்கள் என்பது தெரியவந்தது.

அந்த பாறையை மென்மையாக உடைத்து தனியாக சேகரித்ததில் 40 முட்டை படிமங்கள் கிடைத்தன. அவை 25 செமீ முதல் 1 மீ வரை உள்ளன என்றார். டைனோசர் முட்டை உள்ள பகுதியை சுற்றுலா தலமாக செசன்யா அரசு முடிவு செய்துள்ளது.

செசன்யா நாட்டில் 1994 முதல் 2001 வரை போர் நடைபெற்றது. ரஷ்யாவின் நிலப்பகுதி என்று ரஷ்யாநாட்டினரும் நாங்கள் சுதந்திர நாட்டை சேர்ந்தவர்கள் என்று செசன்யா நாட்டினரும் தெரிவித்து வருகின்றனர். தற்போது போர் முடிவுக்கு வந்ததை அடுத்து செசன்யாவை புணரமைக்க பல மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செசன்யாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செசன்யா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:http://abijinpakkam.blogspot.com

0 comments:

Post a Comment