உலகிலேயே முதல் முறையாக ஜப்பான் விஞ்ஞானிகள் தரைக்கு கீழே ஏழு கி.மீ., துளையிட்டு பூமியின் மேல் ஓட்டினை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் முடிவில், உலகம் முழுவதும், நிலநடுக்கத்தின் போது ஏற்படும் விளைவுகள் அறியப்படும். சென்னை போன்ற நிலநடுக்கப்பகுதிக்கு அருகிலும் கடற்கரையிலும் அமைந்துள்ள நகரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்படும். இதுவரை உலகில் தரைக்கு கீழே அதிகபட்சமாக 2.1 கி.மீ., வரை தான் துளையிடப்பட்டுள்ளது. இதற்கும் மேல் தோண்டினால் புவியிலிருந்து பாறைக்குழம்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. எண்ணெய் அல்லது எரிவாயு வெளியாக வாய்ப்புள்ளதால் இந்த ஆய்வு எளிதான காரியம் அல்ல.
இந்த ஆய்வின் போது தரைக்கடியில் உணர்விகள் வைக்கப்படுவதால் எதிர்காலத்தில் பூகம்பங்களின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று தெரியவரும். இந்த ஒரு ஆய்விலேயே உலகம் முழுமைக்கும் ஒரு பொதுவான கருத்து உருவாக்கப்படும்.
நன்றி: தினமலர்

0 comments:
Post a Comment