பெங்களூரு: திருஞானசம்பந்தர் தோற்றுவித்த, 1,500 ஆண்டு பழமை வாய்ந்த
மதுரை ஆதீனத்தின், 293வது குரு மகா சன்னிதானமாக, சாமியார் நித்யானந்தா
முடிசூட்டப்பட்டார். இதை, நடிகை ரஞ்சிதா முதல் வரிசையிலிருந்து பார்த்து
ரசித்தார். பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர்.
292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார். தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய மதுரை ஆதீனம், நித்யானந்தாவிடம் செங்கோல் கொடுத்து, மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு என்று அறிவித்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு கொடுத்தார். இருவரும் தங்கக் கிரீடத்துடன் காட்சியளித்தனர். பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். நடிகை ரஞ்சிதா, புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.
பல கோடிக்கு சொத்து: மதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வயதில்லை: நித்யானந்தா கூறியதாவது: தற்போதைய மதுரை ஆதீனத்தின் பதவிக் காலம் கூட என் வயதில்லை. நான் பிறந்தது, 1978ம் ஆண்டு தான். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பல கட்டடங்களை, அவர் தான் உருவாக்கினார். மதுரை ஆதீனம், அகில உலக ஆன்மிக இயக்கமாக தரம் உயர்த்தப்படும். முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் என்றார்.
நன்றி: தினமலர்

0 comments:
Post a Comment