Saturday, April 28, 2012

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?அனுபவ மனோத்ததுவ உண்மைகள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது மாணவ,மாணவியருக்கு இந்த மனோதத்துவ உண்மைகளை பாடமாக நடத்திவருகிறேன்.ஒரே நாளில் இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பின்பற்றுவது கடினமே.

நமது ஒவ்வொரு செயலினைச் செய்யத்துவங்கும்போதும்,இந்த கருத்துக்களை நினைவில் நிறுத்தி,அதன்படி செயல்படுத்த வேண்டியிருக்கும்.இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் பின்பற்றிட குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்.இந்தக் கருத்துக்களைப் பின்பற்றத்துவங்கி,ஓராண்டுக்குப்பின்னரே, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் முந்தி மாதிரி இல்லை என்பதை நம்மிடமே சொல்லத் துவங்குவர்;

இப்படிப்பட்ட வார்த்தைகளைக்கேட்டப்பின்னர், நாம் இன்னும் விடாப்பிடியாக இவைகளைப் பின்பற்றிட வேண்டும்.சில ஆண்டுகளுக்குப்பின்னர்,நமது பழகும் விதம்(பிஹேவியரிங்) அடியோடு மாறியிருக்கும்.

இந்த மனோதத்துவ உண்மைகளை நாம் பின்பற்றிவருவதன் மூலமாக,நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் நம்மை மதிக்கத் துவங்குவார்கள்.முயன்று பார்ப்போமா?

1.உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டுவிடாதீர்கள்;

2.எப்போதும் குறைவாகப் பேசுங்கள்;நிறைய கற்றுக்கொள்வீர்கள்.

3.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

4.ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டால்,அவர் அதற்கு என்ன பதில் கூறுகிறார்? என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே அதற்கு விடை கூற முற்படாதீர்கள்.

5.ஒருவர் உங்களிடம் உதவி கேட்கும்போது,அந்த உதவி செய்வதில் சிறிது சந்தேகமிருந்தாலும்,அந்த உதவியைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

6.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் கூட்டாளிகள்;நீங்கள் வாழும் உலகமே அதுதான்.அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

7.நீங்கள் செய்த தவற்றை ஒருவர் கண்டுபிடித்து சொன்னால்,தயங்காமல் ஒப்புக்கொள்ளுங்கள்.

8.மற்றவர்களின் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருங்கள்.இதனால்,எல்லோருக்கும் உங்களைப் பிடித்துப்போகும்.

9.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில்,தெரியாது என சொல்லிவிடுங்கள்.தெரியும் என்று கூறி,வகையாக மாட்டிக்கொள்ளாதீர்கள்.

10.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

11.பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
12.பிறர் நேரத்தை வீணாக்க வேண்டாம்;அதே சமயம்,பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்க வேண்டாம்.

13. ஒருவரைப் பாராட்டும்போது தாரளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

14.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

15.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

16.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவருக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.
 
நன்றி: ஆன்மிகக்கடல்

0 comments:

Post a Comment