Sunday, April 22, 2012

வெங்காயத்தை கண்ணீர் வராமல் வெட்டுவது எப்படி????


வெங்காயம் வெட்டும் போது ஏன் கண்ணீர் வருகிறது?

வெங்காயத்தின் கலங்களில் நொதியங்கள் மற்றும் Amino acid sulfoxid காணப்படும்.Amino acid sulfoxidesகள் sulfenicஅமிலத்தை உருவாக்கும். இவை கலங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவாறு காணப்படும். நாம் வெட்டும்போது sulfenicஅமிலத்துக்கும் நொதியங்களுக்கும் தாக்கம் நிகழ்ந்து propanethiol S-oxide உருவாக்கப்படும். இது விரைவில் ஆவியாகி கண்ணில் உள்ள நீருடன் தாக்கமுற்று சல்பூரிக்கமிலத்தை உருவாக்கும். சல்பூரிக்கமிலம் கண்ணில் எரிச்சலை உண்டாக்குவதால் கண்ணீர் வருகிறது.


வெங்காயத்தை கண்ணீர் வராமல் வெட்டுவது எப்படி?
வெங்காயத்தை வெட்ட முன் சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் பனிக்கட்டிகளை உருவாக்கும் பகுதியில் வைத்துவிட்டு பிறகு வெட்டுங்கள்.

அல்லது சில பனிக்கட்டிகளை எடுத்து அதனால் வெங்காயத்தை விறைக்க வைத்த பின் வெட்டுங்கள்..

உங்கள் கண்ணில் கண்ணீர் வராமலிருக்க வாழ்த்துக்கள்.....

0 comments:

Post a Comment