Monday, April 30, 2012

மைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்


ரூ.20,000க்கும் கீழான விலையில், டூயல் கோர் சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக, மைக்ரோமேக்ஸ் ஏ85 சூப்பர் போன் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மைக்ரோமேக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதிய பாணியில் வடிவமைக்கப்பட்ட போனாக இது உள்ளது. மோட்டாரோலா அல்லது எல்.ஜி. யின் ஸ்மார்ட் போன் போலத் தோற்றமளிக்கிறது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை உள்ளது. இதன் திரை 480x800 பிக்ஸெல் திறன் கொண்டது. திரைக்கு அருகாமையிலேயே முன்பக்க கேமரா மற்றும் பல சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதன் மைக்ரோ எஸ்.டி. கார்டினை எளிதாக மாற்றலாம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூடி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ப்ரோயோ சிஸ்டம் பதியப்பட்டுள்ளது.
‘Gesture control’ எனப்படும் அசைவுகள் மூலம் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்; மாற்றலாம். மியூசிக் பிளேயர், ரேடியோ, வீடியோ பிளேயர் என அனைத்தும் சற்று சிறப்புகளோடு தரப்பட்டுள்ளன. இந்த போன் 4 பேண்ட் அலைவரிசையில் 3G HSDPA and HSUPA சப்போர்ட் தருகிறது. இத்துடன் வை-பி மற்றும் புளுடூத் கிடைக்கின்றன. இணைய இணைப்பில் செயல்படுத்த பல அப்ளிகேஷன்கள் பதிந்து கிடைக்கின்றன.
ஆட்டோ போகஸ் திறன் கொண்ட 5 எம்பி கேமராவிற்கு பிளாஷ் இல்லாததால், பகல் வெளிச்சத்தில் எடுக்கப்படும் போட்டோக்களே நன்றாகக் கிடைக்கின்றன. திறன் கொண்ட பேட்டரி 7 மணி நேரத்திற்கும் மேலாக மின் சக்தி அளிக்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.19,500. இந்த வகையில் டூயல் கோர் சிப் கொண்டு இந்த விலைக்கு விற்கப்படும் முதல் போன் இதுதான். அந்த வகையில் இதனை வாங்கிப் பயன்படுத்தலாம். பணம் கூடுதலாகச் செலவழிக்க விருப்பமுள்ளவர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 வாங்கலாம்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment