Friday, April 20, 2012

நம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி?

கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..
ஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே! என்றார். பக்தன், சுவாமி! நீங்கள் தூணை விடவேண்டியதுதானே! ஏன் விடமாட்டேன் என்கிறீர்கள்? என்றான். இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.

நன்றி: தினமலர்

1 comment: