ரஷிய தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று
பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றின. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு
ஏற்பட்டது. உலகத்தின் இறுதி நாள் வந்து விட்டது என்று சொல்லிசிலர் திகிலை
ஏற்படுத்தினர்.வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ? என்று சிலர்
சந்தேகப்பட்டனர்.இன்னும் சிலர்கடவுளுடைய அருளின் வெளிப்பாடு என்கின்றனர்.
ஆனால் பெரும்பாலானோர் இரசாயன பேரழிவு ஒன்றை இது கட்டியம் கூறுகின்றது என்றே நம்பினர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் என்று அரசு கோரியது. மொஸ்கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. இதனால் மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.

0 comments:
Post a Comment