லண்டன்: உலகில் மிக அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில், பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன.
சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும், "ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.,) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆயுத இறக்குமதியில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முக்கிய பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, இந்தியா...