Monday, March 5, 2012

டில்லியில் நில அதிர்வு; கட்டடங்கள் குலுங்கின!

புதுடில்லி: டில்லியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு மணி 10 நிமிடம் அளவில் சுமார் 10 வினாடிகள் நடந்த இந்த அதிர்வு அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது. இந்த நில அதிர்வு டில்லி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்தது.

வட இந்திய பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டது. உ . பி., மாநிலம் லக்னோவிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியை ஒட்டியுள்ள தெற்கு, நொய்டா, குர்கான், காசியாபாத், அம்பாலா, உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த அதிர்வு இருந்தது. பூகம்ப ஆய்வு மையம் இது 5 ரிக்டர் அளவாக இருந்ததாக தெரிவிக்கிறது.

உ .பி., ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலத்திலும் , இந்த அதிர்வு இருந்தது. இங்கு ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் எதுவும் வெளிவரவில்லை. பூமிக்கடியில் 20 கி.மீட்டரில் இந்த நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர் : இந்த நடுக்கம் உணரப்பட்ட போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறியபடி வெளியேறினர். பலரும் வீதியில் கூடி நின்று இது குறித்து பேசி வருகின்றனர்.

0 comments:

Post a Comment