தேன்கூடு (A Miracle in Engineering & Technology)
இந்த “தேன்கூடு” (Bee hive) என்பது… இத்துனூண்டு முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா-larva) அற்பப்புழு, (ப்யுபா-pupa) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்து பறந்து வந்து நம்மை கொட்டி வீங்க வைக்கும் ஒரு மிக மிக சாதாரணமான “தேனீ எனும் ஒரு பறக்கும் பூச்சி” இனத்தினால் கட்டப்படுவதுதான் என்று அறிந்த போது… அதுவும் எவ்வித உலக கட்டுமான பொருட்களும் இன்றி சுயமாக தன்னிடம் சுரக்கும் மெழுகால் கட்டுகிறது என்று அறிந்தபோது… “இறைவா…! உன் படைப்பே படைப்பு..! அற்புதம்..! நீ ஒப்புயர்வற்ற தூய்மையானவன்” என்றே என்னை புகழ வைத்தது..!
அப்படி என்னதான் இருக்கிறது அந்த தேன்கூட்டில்..?
தேனீக்கள் தங்களுக்கு என்று உறைவிடம் & உணவுக்களஞ்சியம் வேண்டி, முட்டையிட்டு, கூட்டுப்புழு காத்து, குஞ்சு பொறிக்க வேண்டி தன்தேவைக்காக கட்டுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல… ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி கட்டுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு மூலையிலிருந்து கட்ட ஆரம்பிக்கின்றன. இருபுறமும் கட்டுகின்றன. அதில் அளவீடுகளில் அப்படி ஒரு கணித சுத்தம்..! அற்புதமான பொறியியல்..! வியப்பில் ஆழ்த்தும் தொழில் நுட்பத்திறன்..! பல்லாயிரக்கணக்கில் மக்கட்தொகை இருந்தாலும் எவ்வித குழப்பமும் இன்றி அவரவர் வேலையை அவரவர் உணர்ந்து தமக்குள் பகிர்ந்துகொண்டு ஒரே குறிக்கோளாய் தூக்கம், ஒய்வு இல்லாத உழைப்பு..! அச்சமுதாயத்தில் அப்படி ஒரு சட்டம் ஒழுங்கு..! கட்டுக்கோப்பு..!
தேன்கூடு எதனால் உருவானது..?தேன்கூட்டின் இந்த அறுகோண அறைகளுக்கு (hexagonal honey comb-cells of the beehive) பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு உபயோகங்கள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது. ஆனால், அவை அனைத்தயும் பொருட்படுத்தி கட்டுகிறது. இங்கே கூடு கட்டும் போது மெழுகுப்பொருளை வீணாக்காமல் படு சிக்கனமாக உபயோகிக்கிறது. உதாரணமாக, 40 கிராம் மெழுகுப்பொருளில் 22.5cm X 37cm அளவுள்ள ஒரு கூட்டை கட்டிவிடுகிறது. இந்த மிகச்சிறிய கூடு இரண்டு கிலோவுக்கும் மேல் எடை தாங்கும் சக்தி கொண்டது..!
அதேநேரம், அக்கூட்டில் இரண்டு வித உயரங்களில் அறைகள் இருக்கும். ஒன்று தேன், மகரந்தம் ஆகியன சேமிக்க மற்றும் பெண் லார்வா வளர, பெண் ப்யுபா உருமாற என்று பெண் தேனிக்களுக்காக நிறைய 5.2 to 5.4 மி.மீ அளவு அகலம் கொண்ட அறைகள். மற்றது ஆண் தேனீக்கள் வளர 6.2 to 6.4 மி.மீ அகல அளவில் உள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். இதெல்லாம் பகுத்தறிவு அற்ற இந்த பூச்சி இனத்தில் எப்படி யார் முடிவு எடுக்கிறார்கள் என்பது அறிவியலுக்கு புரியாத புதிர்..!
தன் வாழ்நாளில் உறக்கம் எல்லாம் கிடையாது தேனிக்கு. கடும் கும்மிருட்டில் கூட கூடுகட்டும் தேனீ..! ஒவ்வோர் அறையின் அறுகோணமும் அளந்து பார்த்தால் மிகத்துல்லியமாக 120 கோண பாகையில் இருக்கிறது..! இத்தேன்கூட்டின் அடிவரிசையில் இருபக்கமும் உள்ள அறைகள் ஒன்றாக இணைந்திருக்கும் இடத்தில், மூன்று அறைகள் ஒரு அறையுடன் பின்னிப்பிணைந்து படு உறுதியான கட்டமைப்பை கொடுக்கிறது. இவை நேருக்கு நேராக 180 கோணத்தில் கிடைமட்டமாக இணைந்தால், 90 கோண பாகையில் மொத்த அறைகளும் கணம் தாங்காமல் புவி ஈர்ப்பு சக்தியால் ஒன்றன் மீது ஒன்றாக சரிந்து விடக்கூடும் அல்லவா..? அதனால் சற்று ‘v’ போல மேல்நோக்கி குறுகி இருப்பது கூட்டுக்கு நலம்.
மனிதனுக்கு சில நூற்றாண்டிக்கு முன்னர் தெரிந்த இப்பேர்பட்ட அறிவுத்திறன் இந்த தேனிக்கு எப்போது வந்தது..? மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே இப்படித்தானே இவை கட்டுகின்றன..? அவற்றுள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று, ஆப்ரிக்காவில் கட்டினாலும், அமெரிக்காவில் கட்டினாலும், ஆஸ்திரேலியாவில் கட்டினாலும் அக்கூட்டில் இதே கட்டமைப்புத்தானே..? எப்படி சாத்தியம் இதெல்லாம்..?
சகோ..! உங்களுக்கு ஒரு சவால்..! நீங்கள் உங்கள் நண்பர்கள் மூன்று பேரை உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு மொத்தமான காகிதத்தையும், ஆளுக்கு ஒரு பென்சிலையும் எடுங்கள். காகிதத்தின் இடது மூலையிலிருந்து ஆரம்பித்து அறுகோணம் அறுகோணமாக… ஒட்டி ஒட்டி… உங்கள் கண் பார்வை அளவீட்டில்… ஒரே அளவினதாக இருக்குமாறு ஒரு ஆறுவரிசைக்கு காகிதத்தின் மையத்தை நோக்கி வரைந்து வாருங்கள்.
இன்னொரு நண்பர், அந்த அளவை தமக்குள் உள்வாங்கி, அதேபோல, காகிதத்தின் வலது மூலையிலிருந்து மையத்தை நோக்கி ஆறுவரிசையில், அதே அளவில், வரைந்து வரட்டும். காகிதத்தின் மையம் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு… இரண்டும் ஒன்றாக சேரும் மைய இடத்தில் ‘எசகுபிசகாக சேருகிறதா’ அல்லது ‘மிகச்சரியாக அறுகோணமாகவே இணைகிறதா’ என்று இருவரும் முயற்சி செய்யுங்கள்..!
Can instincts be acquired and modified through natural selection? What shall we say to the instinct which leads the bee to make cells, and which has practically anticipated the discoveries of profound mathematicians?
நன்றி: முஹம்மத் ஆஷிக்
தொடரும் ..
0 comments:
Post a Comment