நீங்கள் பிறந்த நிமிடத்தில் வானில் பல கோடி கி.மீ.தூரத்தில் நவக்கிரகங்கள் இருந்த நிலையைப் பொறுத்தே உங்களது ,பெற்றோர்,உடன்பிறந்தோர்,கல்வி,குணாதிசயம்,மனைவி,சேமிப்பு,சேர்க்கும் சொத்துக்கள்,பார்க்கும் வேலை அல்லது தொழில்,குழந்தைகள்,காதலி,சுகபோகங்கள்,புகழ், அவமானம்,துரோகம்,வரும் நோய்,அரசாங்கத்தின் கோபம்,சந்திக்கும் மகான்கள்/சித்தர்கள்,கற்கும் சூட்சுமவித்தை,தரிசிக்க இருக்கும் கோவில்கள் என அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அமைகின்றன.அப்படி அமைவதை உங்களால் எப்போது,எப்படி நடைபெறும் என்பதை துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியுமா?
குறைந்தது 5 வருடங்கள்,அதிகபட்சமாக ஐந்து ஜன்மங்களுக்கு ஜோதிடத்தை தனது தொழிலாகக் கொண்டிருப்பவர்களே உண்மையான ஜோதிடர்கள் ஆவர்.(போலியான ஜோதிடர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணம்: உடலை வருத்தி உழைக்கும் மனோபாவம் இல்லாததும்,பிரச்னையில்லாத தொழிலாக ஜோதிடம் இருப்பதுமே!)
எந்த ஒரு திறமையான ஜோதிடரும் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் வாதநோய் வந்துதான் மரணமடைவார்;ஏனெனில்,ஒரு திறமையான ஜோதிடர் ஒவ்வொரு ஜாதகத்தையும் பலன் சொல்வதற்காக ஆராயும்போது அவரது மூளையும்,மனமும்,உள்ளுணர்வும் கடுமையாக உழைக்கிறது.தன்னை நம்பி,இந்த ஜாதகர் தனது வாழ்க்கையையே ஒப்படைக்கிறார்;இவருக்கு இருப்பதிலேயே சிறந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திறமையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர்.தவிர,நவக்கிரகங்களில் ரகசியச் செயல்பாடுகளைக் கண்டறிந்து,உரியவர்களிடம் சொல்லி,அவர்களைக் காப்பாற்றுவதால்,நவக்கிரகங்களின் சாபங்களும் ஜோதிடருக்கு உண்டாகும்.
ஒரு திறமையான ஜோதிடரால் ஒரு ஜாதகத்துக்கு 24 மணி நேரம் பலன் சொல்ல முடியும்.(எங்கள் ஊரில் இவ்வாறு சொல்பவர்கள் இருந்தார்கள்;ஆனால்,தொகை ரொம்ப அதிகம்!!!)இன்றைய வேகமான ,விரைவான வாழ்க்கை வாழும் காலத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் பலன் சொல்ல முடியும்.அப்படிச் சொல்லும்போது,உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் உங்களைப்பற்றிய ரகசியங்கள் வெளிப்படும்;அந்த ஒரு மணி நேர ஜோதிடப்பலன்கள்,உங்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும்.பலர் ஜோதிட ஆலோசனையை பின்பற்ற ஆரம்பித்தப்பின்னரே,சாதாரண ஆளாக இருந்தவர்/ள்,கோடீஸ்வரராக மாறியிருக்கின்றனர்.நீங்கள் இதுவரையிலும் வாழ்ந்துவந்த வாழ்க்கையை இனி வாழ மாட்டீர்கள்.நீங்கள் புது வாழ்க்கையைப் பெற்றுவிடுவீர்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல;இந்தியா முழுக்க இந்தியப் பிரதமர் முதல் ஒரு சாதாரண அரசு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்(ப்யூன் அல்லது துப்புரவுப்பணியாளர்) வரை அவரவர் ரேஞ்சுக்கு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படியே செயல்பட்டுவருகின்றனர்.
மறைந்த முன்னாள் ஆந்திரமுதலமைச்சர் ஒருவர்,தனது கட்சியை ஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆந்திராவின் ஆளும் கட்சியானது.இந்த சாதனையை உலக வரலாற்றில் இன்றுவரையிலும் யாராலும் முறியடிக்கப்படவில்லை;இந்த சாதனைக்குப்பின்னால் அந்த ஆந்திரமுதலைமைச்சரின் ஆஸ்தான ஜோதிடர் இருந்திருக்கிறார்.இதற்குப் பரிசாக,ஆந்திர மாநில அரசில் முதன்முறையாக ஜோதிடத் துறை உருவாக்கப்பட்டது;அந்த துறையின் மந்திரியாக அந்த ஜோதிடர் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஆந்திரமாநிலத்தின் ஜோதிடத்துறை மந்திரியாக இருந்தார்.ஆன்மீக நாடான இந்தியாவில் கூட 1999 இல்தான் ஆன்மீக மேம்பாட்டுத்துறை என்னும் துறை உண்டாக்கப்பட்டது.தமிழ்நாட்டில் சில சமுதாய மக்கள் இன்றும் தமது ஆஸ்தான ஜோதிடருக்கு அளவுகடந்த மரியாதை கொடுத்த பின்னரே,அவரிடம் ஜாதகம் பார்ப்பதுண்டு;இந்த பழக்கம் தற்போது எல்லா சமுதாய மக்களிடமும் பரவி வருவது மகிழ்ச்சியே!!!
இருப்பினும்,பெரும்பாலானவர்கள் ஜோதிடம் பார்ப்பதற்கு ஒரே ஒரு டீ வாங்கித் தருவதும்;மின் அஞ்சல் வழியே பார்க்கும்போது தட்சிணை தராமல் இருப்பதும் மஹாபாவங்களுள் ஒன்று ஆகும்.தட்சிணா தேவி என்று ஒரு தேவதை இருக்கிறது.சூட்சுமக்கலை எனப்படும் ஜோதிடம்,கைரேகை,அருள்வாக்கு,வாஸ்து,நிமித்திகம் போன்ற கலைகளில் தேர்ச்சியடைந்தவர்கள் இவைகளில் ஏதாவது ஒன்றைத் தொழிலாக பார்த்தால்,அவர்களோடு அந்த தட்சிணாதேவதையின் பிரதிநிதி கூடவே செல்லும்.ஒவ்வொரு முறையும் அவர்களின் தொழில் நிறைவடைந்ததும்(ஜாதகம் பார்த்ததும்/வாஸ்து பார்த்ததும்/நிமித்திகம் எனப்படும் ப்ரசன்னம் பார்த்ததும்) அதற்குரிய தட்சிணையை வாங்குகிறார்களா? என்பதை கவனிக்கும்.அப்படி வாங்காமல் இருந்தால்,அந்த ஜோதிடரின் தலையெழுத்தில் பதிந்து வைக்கும்;கேட்டும் தட்சிணை தராமல் இருப்பவர்களுக்கு அவர்களின் தலையெழுத்தில் நிறைய மாற்றங்களை(இதுவரை சொன்ன ஜோதிடப் பலன்களை செயல்படுத்திட விடாமல்/அல்லது முழுமையாக செயல்படவிடாமல் ) செய்துவிடும்.இந்த தெய்வீகரகசியத்தை ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக நமக்குச் சொன்னவர் ருத்ராட்ச தெரபிஸ்ட்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆவார்.அவருக்கு கோடி நன்றிகள்!!!
ஜோதிடப் பலன் சொல்வதற்கு தட்சிணை வாங்குவது பாவம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.இந்தக் கருத்து கலியுகத்துக்கு மட்டும் பொருந்தாது.இதுபோன்ற சூட்சும மற்றும் தெய்வீகக்கலையை இலவசமாக்கி ,மலிவுபடுத்தினால் இதற்குரிய மரியாதையே இராது.மேலும்,இலவச ஜோதிடபலன்களை ஜோதிட இதழ்களில் வெளியிடுவது ஒன்றும் தவறில்லை;ஏனெனில்,ஜோதிட இதழ்களின் விலையே அதற்குரிய தட்சிணை ஆகும்.எந்த ஒரு கலையையும் அதற்குரிய தட்சிணையைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது.ரூ.10/-க்கும்,ரூ.50/-க்கும் ஜோதிடம்பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தின் மதிப்பை சீர்குலைக்கிறார்கள் என்பதே உண்மை.யாராவது ஓசிக்கு அரசாங்க வேலை பார்ப்பார்களா?ஓசிக்கு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்வார்களா?பிறகு எதற்கு ஜோதிடத்தை இழிவாக நினைக்கிறீர்கள்?இதில் இலவசமாக ஜோதிடம் பார்ப்பதை பெருமையாகவும் நினைக்கும் கூட்டம்,நாத்திகவாதிகளால் உண்டாகிவிட்டது.எனக்குத் தெரிந்து பலர் ,தனது சட்டைப்பையில் தனது பிறந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.ஒருவர் ஜோதிடர் என்பது இவருக்குத் தெரிந்தால்,உடனே,தனது சட்டைப்பையில் இருக்கும் ஜாதகநகலைக் காட்டி ஆலோசனை கேட்பதுண்டு;ஆனால்,எந்த ஒரு ஜோதிடரின் ஜோதிட ஆலோசனையையும் பின்பற்றுவதேயில்லை;
நன்றி: ஆன்மிகக்கடல்
rudracha therapist rudratcham aninthiruntharaa
ReplyDelete