Monday, March 19, 2012

சரியான நேரம் காட்டும் சூரிய "வாட்ச்': விஞ்ஞானத்தை விஞ்சும் "இயற்கை'

 
திருச்சி: திருச்சி அண்ணா கோளரங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கடிகாரம் ஒன்று சரியான நேரம் காட்டி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

கிராமப்புறங்களில் வயலில் வேலைபார்க்கும், "வாட்ச்' கட்டாத விவசாயிகளிடம் சென்று மணி எத்தனை? என்று கேட்டால், அண்ணாந்து சூரியனைப் பார்த்து "இத்தனை மணி' என்று சரியாக கூறுவர்.பூமி தன்னைதானே சுற்றிக்கொள்வது நாளாகவும் நேரமாகவும், சூரியனை சுற்றுவது வருடமாகவும் கணக்கிடப்படுகிறது. வானத்தில் சூரியன் இருக்கும் இடத்தை வைத்து சரியான நேரத்தை சொல்வது, படிக்காத விவசாயிகளிடம் இருக்கும் அறிவியல் அறிவைக் காட்டுகிறது.

இதேபோல, திருச்சி அண்ணா கோளரங்கத்தில், சூரியனின் இருக்கும் நிலையை வைத்து மணி காட்டும், "கிடைமட்ட சூரியக்கடிகாரம்' ஒன்று, சரியான நேரம் காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.திருச்சி அண்ணா கோளரங்கத்தில், நுழைவுவாயில் அருகே, நேர்குத்து சூரியக்கடிகாரம், நடுக்கோட்டு சூரியக்கடிகாரம், கிடைமட்ட சூரியக்கடிகாரம் ஆகிய மூன்று சூரிய கடிகாரங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முதலிரண்டு கடிகாரங்களும் தாமதமாக நேரங்களை காட்டுகின்றன.

*கிடைமட்ட சூரியக்கடிகாரம்: செவ்வக இரும்பு பலகையின் நடுவில், கத்திக் கப்பல் வடிவில் நீள்வாக்கில் இரும்பு தகடு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. தகடின் இடதுபுறம் முற்பகல் என்றும், வலதுபுறம் பிற்பகல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு புறமும் குறிப்பிட்ட இடைவெளியில் எண்கள் குறிக்கப்பட்டு, தகடின் மேல்முனை உள்ள நடுமையத்தில், 12 என்ற எண் குறிக்கப்பட்டுள்ளது.காலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரை இடதுபுறமும், மதியம் ஒரு மணி வரை மாலை ஆறு மணிவரை வலதுபுறமும் சரியான மணியை காட்டும் வகையில் தகடின் நிழல் குறிப்பிட்ட இடத்தில் விழுகிறது.திருச்சி அண்ணா கோளரங்கத்துக்கு வரும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்கள், தங்களது "வாட்ச்'சில் உள்ள நேரத்தையும், சரியான நேரம் காட்டும் கிடைமட்ட கடிகாரத்தையும் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment