Thursday, March 8, 2012

திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!

நன்றி: தினமலர்






நகரி:திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் ஆண்டுதோறும் மலைபோல் குவிந்து கொண்டே வருகிறது. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் மூலம், வட்டியும் கூடுதலாகக் கிடைக்கிறது.
தலைமுடி வருமானம்: கடந்த, 2010-11ம் ஆண்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை விற்றதன் மூலம், 20 கோடி ரூபாய் கிடைத்தது. தலைமுடியை இன்டர்நெட் ஏலம் மூலம் விற்பனை செய்ததில், 2011-12ம் ஆண்டு, 179 கோடி ரூபாய் வரை வருமானம் அதிகரித்தது.தற்போது நிலுவையில் உள்ள தலை முடியையும் சேர்த்து, இந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும் தலைமுடியை விற்பனை செய்வதன் மூலம், 145 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010-11ம் ஆண்டு, உண்டியல் காணிக்கை மூலம், 650 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் இத்தொகை, 81 கோடி ரூபாய் கூடுதலாக அதிகரித்து, 731 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வரும், 2012-13ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் வரை, உண்டியல் வருமானம் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் விற்பனையைக் குறைத்து விட்டதன் மூலம், வருமானம் குறைந்தாலும், லட்டு பிரசாத விற்பனையை அதிகரித்துள்ளதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது.
வருமானம் உயரும்: நடப்பு, 2011-12ம் ஆண்டில், வெங்கடேச பெருமாள் கோவிலின் வருமானம், 1,949 கோடியே 26 லட்சம் ரூபாய் கிடைத்தது. வரும் ஆண்டில் இத்தொகை, 2,010 கோடியே, ஒரு லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மதிப்பீட்டின்படி, திருப்பதி தேவஸ்தானம், நடப்பு 2012-13ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தை ஆமோதித்துள்ளது. பொறியியல் துறைக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்திற்கு 106 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 67 கோடி ரூபாயும், திருமலை பாதுகாப்பு பிரிவுக்கு 3,963 கோடி ரூபாயும், நிதியுதவித் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாயும், ஊழியர்களின் சம்பள வினியோகத்திற்கு 336 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரசாதங்கள் தயார் செய்ய பொருள் வாங்குவதற்காக, 196 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment