சீனாவைச் சேர்ந்த, லி ஹான்ஜியாவோ என்ற இளைஞர், மரத்தால் செய்யப்பட்ட, 23 பெஞ்சுகளை, ஒரே நேரத்தில் பற்களால் தூக்கி, சாதனை படைத்துள்ளார். சீனாவின் சோகுய்ங் என்ற நகரத்தில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்த, 23 பெஞ்சுகளும், ஒரு மீட்டர் நீளமுடையவை. இவற்றின் மொத்த எடை, 70 கிலோ. பற்களால் தூக்கிய இந்த பெஞ்சுகளை, 11 நொடிகள் கீழே விழாமல், ஆகாயத்திலேயே நிற்க வைத்து, நம்ப முடியாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். இதற்கு முன், 14 பெஞ்சுகளை தூக்கியது தான், சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்துள்ள ஹான்ஜியாவோவின் பெயர், சீனாவில் இருந்து வெளியாகும் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment