தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூர் டூ சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும்.இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!!
தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியாகத் தீர்ந்துவிடுகின்றன;தவிர,இங்கு வரும் பெண் பக்தைகள் திடீரென பரவசமடைந்து சாமியாடுவதும் உண்டு.கேட்டவரம் எதுவாக இருந்தாலும் இவர் தருவதால்,இவரை நோக்கி படையெடுத்துவரும் பக்தர்கள்,பக்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
0 comments:
Post a Comment