Tuesday, March 13, 2012

உலக சாதனைக்காக சைக்கிளில் சுற்றும் இங்கிலாந்து வாலிபர்

 
தர்மபுரி: உலக சாதனைக்காக 95 நாட்களில் 30,000 கி.மீ., தூரத்தை சைக்கிளில் சுற்றும் இங்கிலாந்து வாலிபர், தர்மபுரி வந்தார்.உலக அளவில் 105 நாடுகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, 29,000 கி.மீ., தூரம் பயணம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையை முறியடிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கால், 30, என்ற வாலிபர், 95 நாட்களில் 30,000 கி.மீ., தூரத்தைக் கடந்து சாதனை படைக்க, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.இவரைப் போல் ஒன்பது பேர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். பிப்ரவரி 18ம் தேதி, லண்டனில் இருந்து இவரது சைக்கிள் பயணம் துவங்கியது. சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மானிட்டர் மூலம் மைக்கால் எந்த நாட்டில், எந்த இடத்தில் இருக்கிறார். அவர் கடந்த சென்ற தூரம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் துல்லியமாக, லண்டனில் போட்டி நடத்தும் நிறுவன கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் நவீன வசதிகள் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளன.

அதே போன்று அவர் கடக்கும் தூரத்தைக் கண்டறிய வசதியாக, ஸ்பீடா மீட்டர் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் கொண்ட இந்த சைக்கிளில் பயணம் செய்யும் மைக்கால், சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் 30 கி.மீ., தூரத்தை கடந்து செல்லும் வகையில் சைக்கிள் பயணம் செய்கிறார்.

சைக்கிள் பயணம் குறித்து அவர் கூறியதாவது:உலக சாதனைக்காக சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளேன். 20 நாடுகளில் 95 நாட்களில் 30,000 கி.மீ., கடக்க வேண்டும் என்ற லட்சியத்தில் என் பயணம் தொடர்ந்து வருகிறது. இது வரையில் 10 நாடுகளை கடந்து இந்தியா வந்துள்ளேன். தமிழகத்தில் இது வரையில் 450 கி.மீ., பயணம் செய்துள்ளேன்.இவ்வாறு மைக்கால் கூறினார்.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment