Thursday, May 31, 2012

உலக அதிசயமாக கருதப்படும் பெட்ரா !!!



மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.

நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.

திருந்தச் செய்!

ஏ.டி. அண்ட் டி அமெரிக்காவின் டெலிபோன் நிறுவனம். 1960-ல் பல கோடி டாலர் செலவு செய்து வீடியோ டெலிபோன் கண்டுபிடித்தார்கள்.

பேசும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். பரிசோதனைச் சாலையில் அற்புதமாக இயங்கிய டெலிபோன் தொழிற்சாலையில் தயாரித்தபோது பல பிரச்னைகள் கொடுத்தது.

பேச்சு தெளிவாகக் கேட்கவில்லை, வீடியோவும் மங்கலாக வந்தது.

32 ஆண்டுகள் வீடியோ போனில் பணத்தைக் கொட்டிய ஏ.டி. அண்ட் டி 1992-ல் அந்த திட்டத்தை கை கழுவியது. பல்லாண்டு கால பாரம்பரியக் கம்பெனி நஷ்டப் படுகுழியில் விழுந்தது.

நீங்கள் தயாரிக்கும் பொருள் புதுமையாக இருந்தால் மட்டும் போதாது, வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்

சூரிய ஒளி சக்தி மூலம் 22 Gigawatts மின்சாரம் தயாரித்து German உலக சாதனை


சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.

இதுவும் ஒரு சுனாமி !

,

    ள்ளுவன் என்ற உலகம் தெரியாத அப்பாவி மனிதன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தானே அவன் சொல்கிறான் இந்த உலகம் எதை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. என்று கேள்வி கேட்டு உழவு தொழிலையே உலகத்தின் அடிப்படை என்று பதிலும் தருகிறான். உலகத்தை நடத்துகிற உழவு மற்றும் உழவன் இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் நிச்சயமாக வள்ளுவன் தனது கருத்தை மாற்றி கொள்வான் காரணம் நம் நாட்டை பொறுத்தவரை இன்று உழவு என்பது சபிக்க பட்ட ஒரு தொழிலாகவே இருக்கிறது.

நாற்பது வருடங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் சொல்கிறார் ஐயாமார்களே உங்கள் பிள்ளை குட்டிகள் நல்லா இருக்க வேண்டுமானால் வயிறு நிறைய கஞ்சி குடிக்க வேண்டுமானால் விவசாயம் பக்கம் திரும்பி பாக்காதீங்க காட்டுக்குள்ள போய் குள்ளநரி பிடிச்சி பொழப்பு நடத்துற நரிக்குறவன் கூட தான்பிடித்த முயலுக்கு இதுதான் விலை என்று சொல்லி விற்க முடியும் ஆனா அந்த உரிமை விவசாயிக்கு கிடையவே கிடையாது. ராத்திரி பகலா முழிச்சிருந்து தண்ணி பாச்சி காவல் காத்து வரப்பு வெட்டி களையெடுத்து பயிரை கரை சேர்த்து விற்க கொண்டு வந்தால் ஆளாளுக்கு ஒருவிலை கேட்கிறான் கடேசியில் விதை வாங்கின காசுகூட கிடைக்காது. வருஷத்தில் முன்னூறு நாளும் மூச்சிமுட்ட உழைச்சால் கிடைப்பது பட்டினி தான் அதனால விவசாயத்த பண்ணலாமென்று கனவு கானாதிங்க என்கிறார்.

அவர் சொல்வது மிகைபடுத்தப்பட்ட கூற்றாக சொல்ல முடியாது. இந்த நாட்டில் வட்டிக்கி வாங்கி விவசாயம் செய்து அசலையும் வட்டியையும் கொடுக்க முடியாமல் அடிபட்டு உதைபட்டு மனைவி மக்களை கடன்காரன் தூக்கி போகும் அளவிற்கு அவமானப்பட்டு வேறு வழியே இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட விவாசாயிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டும் அசுரதாண்டவம் ஆடிய சுனாமி கூட இரண்டு லட்சம் உயிரை தான் காவு கொண்டது. ஆனால் கேட்பாரற்ற விவசாயிகளின் அவலம் மூன்று லட்சம் உயிர்களையும் தாண்டிவிட்டது.


இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். இந்தியாவின் இதையமே விவசாயி என்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் தான் முதுகெலும்பும் இதையமும் கவனிக்கபடாமல் அனாதைகளாக தெருவில் கிடக்கிறது. பயிர் பச்சைகளை அழித்து நிலத்தடி நீரையே உறிஞ்சி எடுத்து மண்ணின் வளத்தை கெடுத்து நிற்கும் வேலிகாத்தான் முள் இருக்கிறதே அது வளர உரம்போட வேண்டாம் களையெடுக்க வேண்டாம். சுதந்திரமாக பயிர் செய்யும் பூமியில் வளரவிட்டால் போதும். அடுப்பு எரிப்பதற்காகவும் காகித கூழ் எடுப்பதற்காகவும் டன் ஒன்றிற்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்கலாம்.

இதே போல உரம்போட்டு காவல் காத்து தண்ணீர் பாய்ச்சி ரத்தத்தை வியர்வையாக்கி உழைப்பை சிந்தி வளர்க்கப்படும் கரும்பின் விலையோ ஒரு டன் ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் தான் நாட்டை கெடுக்கும் வேலி காத்தானுக்கு இருக்கும் மரியாதை நாட்டு பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்புக்கு இல்லை கரும்பை பயிர் செய்து காசு கேட்டால் அந்த விவசாயி விரட்டி அடிக்க படுகிறான். குண்டு வைத்த பயங்கரவாதி போல் அரசாங்கத்தால் வெறுக்க படுகிறான். ஆனாலும் பாவம் விவசாயி அவன் என்ன செய்வான் அவனுக்கு மண்ணை பொன்னாக்க தெரியுமே தவிர பொன்னை கொள்ளையடித்து வேறு தொழில் செய்ய தெரியாது.

ஒரு முருங்கை மரமும் ஒரு பசுமாடும் ஒரு காணி நிலமும் இருந்தால் ஒரு குடியானவ குடும்பம் செழிப்போடு வாழ்வார்கள் என்று கிராம புறத்தில் சொவார்கள் காரணம் முருங்கைக்காய், முருங்கை பூ, முருங்கை இலை, முருங்கை விதை எல்லாமே ஆரோக்கியமான உணவு உழைப்பவனுக்கு ஏற்ற உடல் வலிவை அந்த உணவால் கொடுக்க முடியும். பசுகொடுக்கும் பால் தன குழந்தையின் வயிற்றை மட்டுமல்ல அக்கம்பக்கத்து வீடுகளிலுள்ள குழந்தைகளின் வயிற்றையும் நிரப்பி சில்லறை தேவைகளுக்கான காசுகளையும் கையில் தரும். நல்ல செழிப்பான காணி நிலத்தில் பாடுபட்டால் வருங்காலம் என்பது வசந்தகாலமே தவிர கசந்த காலமாக இருக்காது. இதனால் தான் அன்று அப்படி சொன்னார்கள்


இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. நகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை குடிக்கும் தண்ணீர் பாட்டலில் அடைத்து விற்க்கபடுகிறது. அந்த பாட்டில் தண்ணீரின் விலை லிட்டருக்கு முப்பத்திரண்டு ரூபாய் ஆனால் பசுதருகின்ற ஆரோக்கியமான பால் லிட்டர் வெறும் இருபது ரூபாய் மட்டுமே இந்த கொடுமை வேறு எந்த நாட்டில் நடந்தாலும் நிலைமையே வேறுவிதமாக போகும். ஆனால் நமது இந்தியன் ரொம்ப நல்லவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வான் திருப்பி அடிக்கவே மாட்டான். ஒரு லிட்டர் பாட்டிலின் தண்ணீருக்கான சுத்திகரிப்பு செலவு மூன்று ரூபாய்க்கு மேல் ஆகாது ஆனால் பல மடங்கு லாபம் அதன் மூலம் பார்க்க படுகிறது. ஒரு மாடு வளர்க்க அதற்க்கான தீவனம் தண்ணீர் புண்ணாக்கு மற்றும் பராமரிப்பிற்கான உழைப்பு என்று கணக்கு போட்டால் ஒரு லிட்டர் பால் பெற ஐம்பது ரூபாயாவது நியாப்படி செலவாகும். ஆனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயி அந்த விலையையா கேட்கிறான். உழைப்பிற்கான ஊதியத்தை கேட்டாலே அவனுக்கு மறுக்கபடுகிறதே அது ஏன்? அவன் இந்தியனாக பிறந்த ஒரே ஒரு பாவத்திர்க்காகவா?

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமான கடமை ஹஜ் பயணம் என்பது அந்த பயணத்திற்கு இந்தியாவில் இருந்து போய்வர நிதி கொடுக்கபடுகிறது. இஷ்லாமியவர்களுக்காவது ஹஜ் புனித பயணம் கட்டாயமாக்க பட்டுள்ளது. கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் சென்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவர்கள் மதத்தில் அது வற்புறுத்தவும் படவில்லை இந்துக்களுக்கு கைலாச யாத்திரை மிக முக்கியமானது ஆனால் அதற்கு கூட சொந்த பணத்தில் சொந்த உழைப்பில் சொந்த பிரயத்தனத்தில் போக வேண்டுமென்று கட்டாயம் இருக்கிறதே தவிர யாரோ கொடுக்கின்ற அதாவது அரசாங்கம் கொடுத்தால் கூட யாசகத்தை பெற்று போக கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இப்படி மத சார்பற்ற அரசுக்கு சம்மந்தமே இல்லாத புனித பயணங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடபடுகிறது.


அரசியல் வாதிகளின் சிபாரிசுகள் இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் திறமை சாலிகளுக்கு இடமில்லை என்று சாஸ்வதமான சம்பிரதாயத்தை கடைபிடிக்கும் விளையாட்டு துறைக்கு வருடத்திற்கு எழுபதாயிரம் கோடி ரூபாய் கொட்டி அழபடுகிறது. வெளிநாட்டில் படித்து வெளிநாட்டிலையே வேலை வாங்கி வெளிநாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழபோகும். இந்திய மாணவர்களுக்காக வருடா வருடம் ஐம்பத்திரண்டு ஆயிரம் கோடிகள் வீணாக்கபடுகிறது. ஆக மத அரசியலுக்கு ஒரு லட்சம் விளையாட்டுக்கு எழுபதாயிரம் வெளிநாட்டில் படிக்க ஐம்பதாயிரம் என்று வருடம் தோறும் இரண்டேகால் லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் செலவாகிறது. ஆனால் இந்தியர்கள் அனைவருக்கும் சோறு போடுகின்ற பசியாற்றுகின்ற விவசாயத்திற்கு வெறும் அறுபதனாயிரம் கோடிகள் மட்டுமே ஒதுக்க படுகிறது. அந்த பணமும் விவசாயிகளின் கையில் வந்து கிடைக்கும் போது ஒன்று அல்லது இரண்டு கோடிகளாக தான் இருக்கிறது.

இதைவிட வேதனையான விஷயங்கள் இருக்கின்றன மக்கள் பிரதிநிதிகள் என்று மக்கள் பிரச்சனையை அரசாங்க கவனத்திற்கு கொண்டு போக தொகுதி தோறும் சில சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தேடுக்கிறோமே அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் என்னவென்று ஊர் முழுவதும் தெரியும். நேற்றுவரை அரைகால் சட்டை கூட போட வழி இல்லாதவன் இன்று எம்.எல்.எ ஆகி விட்டால் ஊரில் இருப்பவன் கோவணத்தை எல்லாம் அவிழ்த்து விடுகிறார்கள். அப்படி பட்ட மக்கள் தொண்டர்களுக்கு எழுபதாம் வருடம் முதல் இன்றுவரை சுமார் இருநூறு மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஒப்பிடும் போது எழுபதாம் ஆண்டில் இருந்து இன்றுவரை கரும்பின் விலை முப்பதெட்டே மடங்கே உயர்ந்துள்ளது.


அரசாங்க பள்ளிகளில் பாடம் படிக்கும் நமது குழந்தைகளின் கல்வி தரம் எந்த அழகில் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம். பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவனுக்கு தமிழை கூட்டி படிக்க தெரியாது. ஆங்கிலத்தில் எ பி சி டி கூட வரிசையாக சொல்ல தெரியாது. இது மாணவர்களின் குற்றமல்ல அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் குற்றமாகும். தன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கூட தெரியாத ஆசிரியர்கள் நாடு முழுவம் உண்டு. யாரவது ஒருவர் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு பாடம் நடத்த துவங்கினால் மற்ற ஆசிரியர்களால் அவர்கள் தடுக்க படுகிறார்கள். சில காலத்தில் அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் பயித்தியகாரன் என்று முடிவு செய்து நல்லவர்களும் கெட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு கூட அதே எழுபதாம் ஆண்டு முதல் இன்றுவரை வாங்கும் சம்பளம் இருநுறு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு கிலோ பருத்தியின் விலை அன்றுமுதல் இன்றுவரை வெறும் இருபத்தி இரண்டு மடங்கே அதிகரித்துள்ளது.

தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருநூறு நாள் வேலை என்று ஒரு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகபடுத்தி நடத்தி வருகிறார்கள். மனசாட்சி உள்ள எவனும் அந்த திட்டத்தால் நல்லது நடந்துள்ளது என்று சொல்ல மாட்டான். பத்து பேர் சேர்ந்து அரையடி பள்ளத்தை மூன்று நாட்களாக தோண்டுவார்கள் இதற்கு ஒரு சம்பளம் அதில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் குமஸ்தாவிற்கு கமிசன் கொடுத்து போக உழைக்காமலே சில பத்து ரூபாய்கள் கையில் கிடைத்து விடுகிறது. இலவச அரிசி சத்துணவு என்று மனைவி மக்களின் வயிறு எப்படியோ நிரம்பி விடுகிறது. ஆண்களுக்கு மது அருந்த உழைக்காத இந்த பணம் கிடைத்து விடுகிறது. இதன் விளைவு கரும்பு வெட்ட நாற்று நட களை பறிக்க வாய்க்கால் வெட்ட கூலிக்கு ஆள் கிடைபதில்லை. அப்படியே வேலைக்கு ஆள்வந்தாலும் சாப்படு சம்பளம் என்று கொடுத்து மாளவில்லை ஒரு மணிநேரம் குனிந்து வேலை செய்தால் ஐநூறு ரூபாய் சம்பளத்தை கீழை வை என்று நிற்கிறார்கள் ஆளும் இல்லாமல் கையில் காசும் இல்லாமல் விவசாயி எப்படி பயிர் தொழில் செய்வான்.

நிலத்தடி நீரெல்லாம் உறிஞ்சப்பட்டு விட்டது. எரி குளங்களில் மேடுகள் தான் தெரிகிறதே தவிர தண்ணீர் இல்லை ஆற்று மணல் கொள்ளையடிக்க பட்டு ஆறுகள் எல்லாம் பாலை வனங்களாக மாறி வருகிறது. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரை வைத்து பயிர் செய்யலாம் என்றால் மின்சாரமும் இருப்பதில்லை அப்படியே மின்சாரம் வந்தாலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் மோட்டார் பம்புகள் வேலை செய்வதில்லை ஒரு மூட்டை நெல்லை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றால் உயிர் போய்விடுகிறது. இந்த லட்சணத்தில் உலகமே விவசாயத்தை அச்சாணியாக கொண்டு சுழல்கிறது ஓடுகிறது என்று யாரவது சொன்னால் அவர்களை விவரம் தெரியாதவர்கள் அப்பாவிகள் என்று சொல்வதை தவிர வேறு என்ன வழி இருக்கிறது. அதனால் தான் உலகத்தையே ஒன்றரை அடி குறளில் சொன்ன வள்ளுவனை உலகம் தெரியாத அப்பாவி என்று சொல்ல வேண்டி வருகிறது. பாவம் வள்ளுவன் இனி புதியதாக பிறந்து விவசாயத்தின் அவலத்தை எழுத வேண்டிய துர்பாக்கியம் அவனுக்கு ஏற்பட்டுள்ளது.

நன்றி: உஜிலாதேவி

Wednesday, May 30, 2012

ஏற்காடு பற்றிய தகவல் !!! - Yercaud, Jewel of South India.



ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இன்றுவரை தமிழகமே அதிக வெப்பத்துடன் காணப்பட்டாலும் ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை என்பது ஏற்காட்டின் தனிச் சிறப்பு.ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவது போல ஏற்காடு தென்னிந்தியாவின் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கப்படுகிறது. இனி ஏற்காட்டில் காணவேண்டிய இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

Yercaud Lake:
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யவேண்டுமா? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஏற்காடு ஏரி. Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.

ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

Lady's seat:
ஏற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம். வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.

Killiyur Water falls:
ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. மழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது.

Pagoda point:
இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள் இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

Bear's cave:
தனியாருக்குச் சொந்தமான இந்தக் குகை, கரடிகள் தங்கிய இடம். இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை உண்டு என்று நம்பப்படுகிறது ஆனால் உறுதியாக கூறமுடியாது. யாரேனும் உள்ளே சென்று பார்த்தால் தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.


National Orchidarium, Botanical Garden:
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

ஏற்காடு செல்ல ஏற்ற நேரம் - ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்


கோவைக்காயை இரண்டு நாட்கள் பகல் உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும். கோவைக்காயை சமைத்து சாப்பிட முடியாதவர்கள், பச்சைக் கோவைக் காயை வெறும் வாயில் போட்டு நன்கு மென்று துப்பினால் கூட வாய்ப்புண் குணமாகிவிடும்.

கோவைக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்கள், தொடர்ந்து கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

Tuesday, May 29, 2012

நட்சத்திர மீன் பற்றிய தகவல் !!!


நட்சத்திர மீன்களில் பல வகைகல் உள்ளன அவைகலில் முக்கியமானது அஸ்டிரியஸ் ருபென்ஸ் எனப்படும் வகையாகும். இது கடலில் காணப்படும். இதன் மேற்பரப்பு தடிமனான முட்களை கொண்டுள்ளது இது ஒரு அனைத்துண்ணி இது பொதுவாக 5 கால்களை கொண்டுள்ளது. இது உடல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. நட்சத்திர மீனின் மேற்பகுதி அப் ஓரல் எனவும் கீழ் பகுதி ஒரல் எனவும் குறிப்பிடப்படுகிறது

கடலில் அதிகளவில் கணப்படுபவை கடல் நட்சத்திரமீன்கள். இதன் உடலின் மையப்பகுதி வட்டம் எனப்படும். இதிலிருந்து நீளும் ஐந்து கதிர்கள் ஆரங்கள் எனப்படும். இவை படிப்படியாகக் குறுகி நுனியில் கூர்மையாக இருக்கும். எல்லா ஆரங்களும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. வட்டத்துடன் சேர்ந்து இவை சரியான ஐங்கோண நட்சத்திரமாக உறுவாகின்றன. எனவே கடல் நட்சத்திங்களின் உடல்கள் ஐந்து ஆர சமச்சீர் கொண்டவை.

இவை, தோலில் உள்ள சுண்ணாம்புத் தகடுகளின் பகுதிகள். இத்தகடுகளே வட்டம், கதிர்கள் ஆகியவற்றின் கடினமாக வெளிச் சட்டகம் ஆகின்றன. நீர்க்குழாய் மண்டலமும் கடல் நட்சத்திரத்தில் உள்ளது.

இது, வடிகட்டும் தட்டில் இருந்து தொடங்குகிறது. இந்த தட்டில் உள்ள அதிகப்படியான துளைகளின் வழியாகக் கடல் நீர் வடிகட்டப்பட்டு நீர்க்குழாய் மண்டலத்தை நிரப்புகிறது. முதலில் சிறிய கற்கால்வாய் வழியே வந்து நீர், வளையக் கால்வாயை அடைகிறது. இந்த கால்வாயில் இருந்து ஆரத்துக்கு ஒன்றாக ஐந்து ஆரக்கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. இந்தக் கால்வாய்கள் வழியே நீர், கால்களின் உட்புறத்தை அடைகிறது.

நீர்க்குழாய் மண்டலம், இயக்கத்துக்குப் பயன்படுகிறது. காலில் நீர் அழுத்தும்போது அது நீண்டு கடலின் அடித்தரையை உறிஞ்சிப் பற்றிக் கொள்கிறது. கால்கள் சுருங்கும்போது நீர் கால்வாயில் திரும்பச் செலுத்தப்படுகிறது. கடல் நட்சத்திரத்தின் உடல், கால் பற்றியிருக்கும் இடத்துக்கு இழுக்கப்படுகிறது.

கடல் நட்சத்திரங்கள் உணவு உட்கொள்ளும் முறை வித்தியாசமானது. அவை வேட்டை.ாடி உண்ணும் உயிரினங்கள், மெல்லுடலிகளாகும்.

ஒரு மெல்லுடலியின் ஓட்டு மூடிகளைக் கால்களால் உறிஞ்டிப் பற்றிக் கொண்டு கடல் நட்சத்திரம் அவற்றை ஒருபுறமாக இழுக்கத் தொடங்கும். மெல்லுடலியின் மூடுதசைகள் உடனேயே சிப்பியை மூடிக் கொள்ளும். ஆனால், பின்பு களைத்துப் போகும். கடல் நட்சத்திரத்தின் பல கால்களோ ஒன்று மாற்றி ஒன்றாக வேலை செய்வதால் அது களைப்படுவதில்லை.

முடிவில் கடல் நட்சத்திரமே மெல்லுடலியை வெல்லும், மெல்லுடலியின் ஓட்டு மூடிகள் திறந்து கொண்டதுமே கடல் நட்சத்திரம் தன் இரைப்பையை உள்வெளியாகத் திருப்பி நீட்டி மூடிகளுக்கு இடையே புகுத்தும். இரைப்பையின் ஜீரண நீர், மெல்லுடலியின் உடலை அதன் சிப்பிக்கு உள்ளேயே ஜீரணிக்கும்.

கடல் நட்சத்திரத்தின் இந்த ஊட்டமுறை காரணமாக, மெல்லுடலியானது ஓடுகளால் எவ்வளவுதான் உறுதியாக மூடப்பட்டிருந்தாலும் தப்பமுடியாமல் அதற்கு இறையாகி விடும். கடல் நட்சத்திரம் அதை ஓடுகளுக்கு உள்ளேயே ஜீரணித்து உட்கொண்டு வெற்று ஓடுகளை விட்டுச் செல்லும்.

ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் - Anaimalai Sanctuary



தமிழகத்தின் பிரபலாமான கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது இந்த சரணாலாயம்958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCO வின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.

2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்.

இந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.உங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.

இங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.

இங்கு எப்படி செல்வது?
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.


2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்


3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.


கோவை வழியாக செல்லும் ரயில்கள்:

1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381

கட்டணம்:
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10

நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

உணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:

The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001,
Tamil Nadu.
Ph - 04259 25356

பெஞ்சமின் ஃபிராங்கிளின் பற்றிய தகவல் !!!


ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான சுயசரிதைகளுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்ஸ்க்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் ஆகப் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. அவர்தான் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனுகுலத்தின் மேன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியும், இலக்கியவாதியும், வர்த்தகரும், அரசியல்வாதியுமான பெஞ்சமின் ஃபிராங்கிளின்.

1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்புக் கடிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

வாசிப்பை நேசிப்போம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் புழுவாக படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததாலோ என்னவோ சுவாரசியமாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.

இங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். ஃபிராங்கிளின் பல கட்டுரைகளை தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்ய சொல்வாராம் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard's Almanack என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த சஞ்சிகைதான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில்கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய கண்டுபிடிப்புதான். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பாக்கியமாக கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் இன்னும் என்னவெல்லாம் உலகுக்கு தந்திருக்கிறார் தெரியுமா?

நோட்டுப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா முறையில் நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். Philadelphia-வின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான Pennsylvania பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அப்போது உலக நாடுகள் துக்கத்தில் மூழ்கின. அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அவற்றுள் மிகவும் பிடித்த பொன்மொழி:

"இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்"

கூந்தல் உதிர்வதை தடுக்க சில வழிகள் !!!



சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.

வெந்தயம்:

கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், ஆண்கள் சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது குறையும்

எள்ளுச்செடி:

எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும்
பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.

தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.

ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயிலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

Monday, May 28, 2012

இந்திய தேசிய கொடியே வடிவமைத்தது

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்
கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!!

லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்ளறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர்நிதி மன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் . 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அணைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்

இவருடைய ஆளுமை திறனால் தான் முஸ்லிம்கள் அதிகமா இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூற்றினர்
மகாத்மா காந்திஜி .அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர்.முஸ்லிம்விரோத
கொள்கைக்கு எதிராக இருந்தார் . இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே சமுதயதிர்க்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்

ஆனால் தேசிய கொடியே ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இந்துத்துவ அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள் . ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான் கட்டினர் என்று மறந்து விட்டனர் .அதனால் அவர்களுக்கு நாம் நியாபகம் காட்டவேண்டும் அது நமது கடமை அல்லவா ?????????

ஆர்க்டிக் நரி பற்றிய தகவல் !!!



ஆர்க்டிக் இது பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது, ஆனால் இந்த இடங்களில் சில விலங்குகள் வசிப்பிடமாக உள்ளது. அதில் ஒன்று ஆர்ட்டிக் நரி இது ஒரு "நாய்" குடும்பம் ஆர்க்டிக் தட்ப வெப்ப நிலை -112 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும் மற்றும் வானிலை 94 டிகிரி வரும்போது இந்த நரிகள் மட்டும் நடுக்கம் இல்லாமல் இருக்கும். நீண்ட குளிர்காலத்தில், சூரியன் 24 மணி நேரமும் ஒளிரும் போது இதை நம்பாத நரிகள் இருட்டு மற்றும் கோடை காலத்தில் வசிக்க முடியாது.

ஆர்க்டிக் நரிகள் சில நேரங்களில் சாம்பல், நீலம், அழகான வெள்ளை முடிகளாக இருக்கும்.கோடை நெருங்கி வரும் நிலையில், ஆர்க்டிக் நரி வெள்ளை முடிகள் உதிரத்தொடங்கி பழுப்பு நிறமாக மாறத்தொடங்குகிறது. பிறகு அதே செப்டம்பர் மற்றும் அக்டோபர் பழுப்பு தோல் வரும் வரை நடக்கிறது, மற்றும் நவம்பர் மாதம் தோலானது முழுமையாக வெள்ளையாக மாறும் ஆர்க்டிக் நரிகள் அழகான சிறிய, அவைகளின் தலை மற்றும் உடல் 1 ½, அல்லது 2 ½ அடியாக இருக்கும் மற்றும் அவைகளின் வால் பொதுவாக 10-16 அங்குல இருக்கும். அவைகளின் எடை சராசரி 5-13 பவுண்டுகளாக இருக்கும்.

ஆர்க்டிக் நரிகள் முக்கியமாக ஊனுண்ணிகள் என்பதால் ஆனால் அவைகளுக்கு உணவு கண்டுபிடிப்பது எளிது. அவைகள் மீன், மற்றும் பிற பாலூட்டிகள் உண்றும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது மற்ற விலங்குகள் சிந்திய மிச்சத்தை சாப்பிடுகிறது. அவைகள் சாணம் மற்றும் கொட்டைகள் போன்ற சில பழங்களை உண்ணும்.
ஆர்க்டிக் நரிகள் மட்டுமே 11 ஆண்டுகள் வரை சராசரியாக வாழமுடியும் அது நீண்ட நாள் வாழ முடியாது.

ஆர்க்டிக் நரிகள் சாப்பிடும் அதே உணவுகளை துருவ கரடி மற்றும் ஆர்க்டிக் ஓநாய்கள் போட்டியிட, அவைகள் முக்கியமாக மீன், பறவைகள், மற்றும் சிறிய பாலூட்டிகள் துருவ கரடி போட்டியிட. ஆர்க்டிக் ஓநாய்கள் ஆர்க்டிக் முயல்களை இந்த நரிகள், மீன், பாலூட்டிகள், பூச்சிகள், போன்றவைகளுக்கு போட்டியிடுகிறன.
இந்த நரிகள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களை பயன்படுத்தும், அவைதான் அவற்றின் முக்கிய பலம். அவை தங்கள் இரையை துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.

சர்' ஐசக் நியூட்டன் பற்றிய தகவல் !!!


ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!

ஊழியர்கள் தரும் பிஸினஸ் ஐடியா!


இணையதள வணிகம் என்னும் இ-காமர்ஸில் நம்பர் ஒன் அமேஸான். காம்தான். புத்தகம், ஆடைகள், சி.டி.கள், பொம்மைகள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் என எல்லாமே விற்கும் பிரமாண்ட இணையதளக் கடை. இதன் வருட வியாபாரம் 4,800 கோடி டாலர்கள் (சுமார் 2,40,000 கோடி ரூபாய்.)

1994. ஜெஃப் பெஸோஸ் என்னும் இளைஞர் டி.ஈ. ஷா என்னும் கம்பெனியில் வேலை பார்த்தார். இணையதளத்தில் புத்தகங்களை விற்பனை செய்யும் பிஸினஸை டி.ஈ. ஷா கம்பெனி தொடங்கலாம் என்று தன் மேலதிகாரிக்கு சிபாரிசு செய்தார் ஜெஃப் பெஸோஸ். அதற்கு மேலதிகாரி சொன்ன பதில், இது வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ரொம்ப நல்ல ஐடியா.' தன் திட்டத்தில் உறுதியாக இருந்த ஜெஃப் பெஸோஸ், அமேஸான்.காம் தொடங்கினார். இன்று மிகப் பெரிதாக வளர்ந்து நிற்கிறார்.

உங்கள் ஊழியர்கள் தரும் ஐடியாக்களை காது கொடுத்து கேட்டாலே போதும், புதிய பிஸினஸ் தானாகவே கிடைக்கும்!

2012 இல் உலகம் அழியுமா ஒரு பார்வை 12

சில காலங்களுக்கு  முன் hubble என்னும் தொலைநோக்கி கருவியை nasa விண்வெளிக்கு அனுப்பியது. அது வானில் ஒரு செயற்கை கோள் போல, பூமியை சுற்றி கொண்டு இருக்கிறது. அதன் மூலம் விண்வெளியை  ஆராய்ந்ததில் நமது வானவியலின் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.
  
         நாம் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி போன்ற  அமைப்பில்  இருக்கிறது, அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த  விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் உண்டு அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே 
நமது சூரியகுடும்பம் இருக்கிறது.
      பால்வெளி மண்டலம் கோடிகணக்கான நட்சத்திரங்களை தன்னுள் உள்ளடக்கி 
வெண்மையாக, ஒரு பாய் போல தட்டையாக கிடையாக பரவியிருக்கிறது.
        நமது சூரியன் தனது கோள்களுடன் இந்த பால்வளிமண்டலத்தில் ஒரு 
வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இது பால்வளிமண்டலதுக்கு  செங்குத்தான திசையில் சுற்றிவருகிறது.
        புரியாவிட்டால் இந்த விளக்கத்தை பாருங்கள், நமது வீட்டின் கூரையில் 
மாட்டபட்டிருக்கும் மின்விசிறி கிடையாக சுற்றுகிறது. அதே போல தான் 
நமது பால்வளிமண்டலமும் சுற்றுகிறது.
        ஆனால் நமது சூரியன் பால்வளிமண்டலத்தில்  இருந்துகொண்டே  மேசையில் இருக்கும் மின்விசிறி போல பால்வளிமண்டலதுக்கு செங்குத்தாக சுற்றுகிறது. இதை உங்களுக்கு புரியும் அளவுக்கு படமாக வரைந்திருக்கிறேன் நீங்களே பாருங்கள்.
   
            நமது பூமிக்கு நடுவாக பூமத்தியரேகை இருப்பது போல  பால்வளிமண்டலதுக்கும், ஒரு நீளமான மத்திய ரேகை உண்டு அதை galactic equator என்று சொல்வார்கள்.
             சூரியன் தனது நீள்வட்ட பாதையில் செங்குத்தாக சுற்றும் போது 
பால்வளிமண்டலத்தின் மத்தியரேகையை ஒரு குறித்த  காலத்தில்  சந்திக்கிறது.
        இப்படி சூரியன் பால்வளிமண்டலத்தின் மத்தியரேகையை சந்திக்க
எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா....? 26,000 வருடங்கள்.
      அதாவது சூரியன் பால்வளிமண்டலத்தை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் 
காலம் 26,000 வருடங்கள்.
      இம்முறை அந்த அச்சை நம் சூரியன் எப்போது சந்திக்கிறது தெரியுமா...?
2012 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21ஆம் தேதி.
    அதாவது மாயன்களின் நாட்காட்டியில் ஒரு மொத்த சுற்றுகளுக்கு எடுக்கும் 
26,000 வருடங்களும், பால்வளிமண்டலத்தின் அச்சை சூரியன்  அடையும் காலம 26,000 வருடங்கள்  என்பதும் ஆச்சு அசலாக பொருந்துகிறது. எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்தார்கள்.??
       இத்துடன் ஆச்சரியம் தீர்ந்துவிட வில்லை இன்னும் ஒரு ஆச்சர்யமும் உண்டு 
       சூரியன் பால்வளிமண்டலத்தை சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே 
கருமையான ஒரு பள்ளம்(dark rift ) போன்ற இடம்  இருப்பதையும்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
       அதன் ஈர்ப்பு விசையினால் சூரியக்குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் 
     ஏதாவது ஒரு காலத்தில் இப்படி சூரியன் மத்தியரேகையை தொடும்போது 
கருப்பு பள்ளத்தின் ஈர்ப்புவிசை அதை இழுக்கலாம். ஒரு முறை 
நடக்காவிட்டாலும் ஏதாவது 26,00 வருடங்களுக்கு ஒருமுறை அப்படி
நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
    இப்படி ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை தெளிவாக
சொல்லிவிடகூடிய ஒரு இனம் இருக்குமென்றால் நிச்சயம் நாம் அதை
மதித்தே ஆகவேண்டும்.

     சரி....! இதுமட்டும் தான் அவர்கள் சொன்னார்களா? இதை மட்டும் வைத்தே
நாம் 2012 இல் உலகம் அழியுமென முடிவுகட்டிவிடலாமா?
--------------------------

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு!''- தன் சினிமா அறிமுகம் குறித்து கண்கள் மின்னப் பேசுகிறார் விக்ரம் பிரபு.


 அன்னை இல்லத்தின் மூன்றாவது தலைமுறையும் வெள்ளித் திரை தொடுகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன், 'கும்கி’யின் கதை நாயகன்... விக்ரம் பிரபு!

 ''லிங்குசாமி சார்... எங்க குடும்பமே மதிக்கும் இயல்பான மனிதர். 'இனி சினிமா தான்’னு முடிவு பண்ணினதும் அவரைத் தான் சந்திச்சேன். 'என்ன மாதிரி படம் பண்ணலாம்?’னு ஆரம்பிச்சு, 'இந்த மாதிரி இருக்கணும், இப்படிலாம் இருக்கக் கூடாது’னு நிறைய விஷயங்களைப் புரியவெச்சார். பிரபு சாலமன் சார் படத்தில் கமிட் ஆனதும், 'நம்ம புரொடக்ஷன்லயே படம் பண்றீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டார். எனக்குக் கிடைச்ச நல்ல அண்ணன் அவர்!''

''காடு, யானைனு முதல் படத்துலயே நிறைய சவால் போல..?'

'
''நிச்சயமா! ஒரு யானைப் பாகனாகவே வாழ வேண்டிய கேரக்டர். 'நம்ம ஹீரோ மாணிக்கத்தை முதல்ல ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க’னு பிரபு சாலமன் சார் சொல்லிட்டார். சும்மா ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புனா, அக்செப்ட் பண்ற ஆளா மாணிக்கம்? மாணிக்கம் என்ற யானையை ஃப்ரெண்ட் பிடிக்க கேரளா போனேன். மாணிக்கம் மேல் எப்படி ஏறுவது, இறங்குவது, அவர் நடக்கும்போது எப்படி ஃபேலன்ஸ் பண்ணி உட்கார்றதுனு பதினஞ்சு நாள் பயிற்சி. மாணிக்கத்தோட பாகன் அதை மலை யாளத்தில் பழக்கியிருந்தார்.


 அதனால அதுக்குத் தெரிஞ்ச மலையாள வார்த்தை களை நானும் கத்துக்கிட்டேன். யானைகள் ரொம்ப ஸ்மார்ட். நம்ம கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் நாம சொல்ற தைக் கேட்கும். 'இவன் பயப்படுறான்’னு அதுக்குத் தெரிஞ்சுட்டா... அவ்வளவுதான். அதனால உள்ளுக்குள்ள உதறுனாலும் வெளிய காமிச்சிக்காம கொஞ்ச நாள்லயே மாணிக்கத்தை நல்ல ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன்!''

''நடிக்க வர்றதுக்கு முன்னாடி ரஜினி, கமலைச் சந்திச்சு வாழ்த்து வாங்கினீங்களே... என்ன சொன்னாங்க?''


''கமல் சார் எனக்கு என்னென்ன தெரியும்னு முழுசாக் கேட்டுட்டு, இன்னும் என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு டீடெய் லாப் பேசினார். 'எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும்... ஒரு படத்தை எப்படிப் பார்க்க ணும்னு அவர் சொல்லிக்கொடுத்த எல்லாமே சினிமா பாடங்கள்.


 'முதல் படத்திலேயே ஹீரோயிசம், பெர்ஃபார் மன்ஸுனு மாட்டிக்காம எல்லாத்தையும் கலந்து பண்ணுங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நம்மை அவங்க எப்படி ஏத்துகிறாங்கங்கிறதைப் பொறுத்து அப்புறம் முடிவு பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னார். ரெண்டு பேருமே அவங்கவங்க சக்சஸ் ஃபார்முலாவையே எனக்கு சொல்லிக் கொடுத்ததாத் தோணுச்சு!''

''சினிமா குடும்பப் பின்னணியோட நடிக்க வர்றதும், முதல் வெற்றியும் ஈஸிதான். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறது வாழ்நாள் போராட்டமாச்சே...


''
''உண்மைதான்! ஆனா, அதுக்கு நான் தயாரா இருக்கேன். கலிஃபோர்னியா சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ்ல ஆரம்பிச்சு, கார்பென்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்புனு சினிமா தொடர்பா 'ஏ டு இசட்’ கத்துக்கிட்டுதான் வந்திருக்கேன்.


'சர்வம்’ படத்தில் விஷ்ணுவர்தன் சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன்.என்னை சினிமாவுக்காக எப்படியும் வளைக்கலாம்கிற அளவுக்கு மாத்திக்கிட்டேன். தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். நேர்மையா உழைச்சா எந்த விஷயமும் சாத்தியம்னு நம்புறவன் நான்!''

Sunday, May 27, 2012

ராசி பலன்


ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது.  அதில்  ஜோதிடர்கள்  பலர் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் 2012 எவ்வாறு இருக்குமென்று  தங்கள் கணிப்புக்களைக்  கூறிக்கொண்டு இருந்தனர்.  எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு
நன்மை பயக்குமென்றும், எந்தெந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு தீமையான பலன்கள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் விவாதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.  அப்போது ஒரு ஜோதிடர் இந்த விவாதங்களில் பங்கு கொள்ளாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார்.  அதை கவனித்த நிகழ்ச்சி அமைப்பாளர் “நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? இதில் பங்கெடுக்கத்தானே இங்கு வந்தீர்கள்? அப்படி
இருக்கும்போது ஏன் ஒதுங்கி இருகிறீர்கள்?” எனக் கேட்டார்.  
 
gopinath1 ராசி பலன்அதற்கு அந்த ஜோதிடர் வெறும் ராசியை வைத்துப் பலன் சொல்ல முடியாதென்றும், லக்கினத்தையும் சேர்த்து வைத்துத்தான் பலன் செல்ல வேண்டுமென்றும் அவ்வாறு கூறினால்தான் பலன்கள் சரியாக இருக்குமென்றும் கூறினார்.  நிகழ்ச்சி அமைப்பாளர் சிறிது அதிர்ந்து போனார். ”இந்த ஜோதிடர் கூறுவது சரிதானா?  இவர் கருத்து சரியானது என்று கூறுபவர்கள் கையைத் தூக்குங்கள்? ” என்று மற்ற ஜோதிடர்களைப் பார்த்துக் கேட்டார். அனேகமாக ஓரிருவரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் கையை உயர்த்தினர். ”இவர் சொல்வது சரியானது என்றால் நாம் இதுவரை ராசியை வைத்துத்தானே பலன் சொல்லிக் கொண்டு இருந்தோம்” என்று கேட்டார். ஜோதிடர்களிடமிருந்து சரியான பதில் இல்லை.  இதுவரை பலன் கூறியவர்கள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தார்கள்.  சரியான பதிலை அவர்களால் கூற முடியவில்லை.  இத்தோடு இந்த நிகழ்ச்சியை நிறுத்திக் கொள்வோம். நாம்
நம் கருத்தைக் கூறுவோம்.
 
ராசி என்பது ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம்.  அதாவது ஒருவருக்கு அஸ்வினி நட்சத்திரமென்றால் அஸ்வினி நட்சத்திரத்தில் அன்று சந்திரன் இருக்கின்றார் எனப் பொருள். அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் இருக்கிறது.  ஆக அவர் மேஷ ராசிக்காரர்.  அதைப் போன்று பரணி நட்சத்திரம், கார்த்திகை முதல் பாதம்  ஆகியவை மேஷ ராசியில் வருகின்றன. ஆக பரணி நட்சத்திரத்திலோ அல்லது  கார்த்திகை முதல் பாதத்திலோ பிறந்தவர்களுக்கும் மேஷ ராசிதான்.  ராசி ஒன்றாக இருந்தாலும் நட்சத்திரம் வெவ்வேறுதான். நட்சத்திரங்களுக்கு ஏற்பபலன்களும் வேறுபடும். அப்படி இருக்கும்போது பலன்கள் எப்படி ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே மாதிரி இருக்கும்?
 
இருவர் ஒரே நட்சத்திரமெனக் கொள்வோம்.  அவர்களுக்குப் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்குமா?  இருக்காது.  மாறுபடும்.   நீங்கள் உங்கள் அனுபவத்தில் இரட்டைக் குழந்தை பிறப்பைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வாழ்க்கை எல்லாம் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இரட்டைக்  குழந்தைகள் பிறந்த நேரத்தில் சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும்.  அவர்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால் ஜாதகத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்காது.  ஒரே மாதிரியான ஜாதகமாகத்தான் இருக்கும்.  ஆனால் பிறப்பில் பார்த்தால் ஒன்று ஆண் குழந்தையாக இருக்கும்; மற்றொன்று பெண் குழந்தையாக இருக்கும்.  ஒன்று படிப்பில் சுட்டியாக இருக்கும்.  மற்றொன்று படிப்பில் அவ்வளவு நாட்டமில்லாது இருக்கும்.  ஒன்றுக்கு உரிய காலத்தில் திருமணம் ஆகி இருக்கும். மற்றொன்றுக்கு மிகவும் தாமதப் பட்ட திருமணம் ஆகி இருக்கும். ஒன்று பிறந்து இறந்து இருக்கும்.  மற்றொன்று உயிருடன் இருக்கும்.  இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும். 
 
ஒரே மாதிரியான ஜாதகங்கள் இருக்கும் போதே வாழ்க்கையில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றபோது வெறும் ராசியை மட்டும் பலன் சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? சரி! ராசி, லக்கினம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பலன்கள் சரியாக வருமா? வராது. ஜாதகங்களைத் தனித் தனியாகப் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும்.  மொத்தமாக ராசிக்கோ அல்லது  லக்கினத்தை மட்டுமோ அல்லது இரண்டையும் மட்டுமோ வைத்துக் கொண்டு சொல்லும் பலன்கள் சரியாக இருக்காது.  “பொட்டைக் கண்ணில் மை இட்டால் பட்ட இடத்தில் படட்டும்” என்று கூறுவார்களே; அதைப் போல்தான்.
 
ஒவ்வொருவர் தனிப்பட்ட ஜாதகத்தையும் தனியாக ஆராய்ந்துதான் பலன்கள் சொல்ல வேண்டும். ஒரு ஊரில் ஒரு பணக்காரருக்கு ஒரு குழந்தையும் அதே ஊரில் ஒரு ஏழைக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம்.  இரண்டு ஜாதகங்களும் சந்தேகமில்லாமல் ஒன்றாகத்தான் இருக்கும்.  ஆனால் வாழ்க்கை முறை ஒரே மாதிரியாகவா இருக்கும்? நிச்சமாக இருக்காது.  வித்தியாசங்கள் இருக்கும்.  பணக்காரர் வீட்டில் பிறந்த குழந்தை வளர்ந்து நல்லகாலம் வரும்போது தொழிலில் பல லட்சங்கள் லாபம் பார்க்கலாம்.  அதே வயதிலுள்ள ஏழைக்குழந்தைக்கு அதே நல்ல நேரத்தில் பல நூறுகளோ அல்லது பல ஆயிரங்களோ லாபமாக வரலாம். பணத்தில் அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம்.  ஆனால் அப்போது மனதிற்குக் கிடக்கும் நிறைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.   The quantum of satisfaction will be same for both of them.    ஆகவே இவ்வாறு பலவற்றை மனதில் கொண்டு கணித்துப் பலன் சொல்ல வேண்டிய ஜோதிடத்தை வெறும் ராசியையோ அல்லது லக்கினத்தையோ வைத்துப் பலன் சொல்வது அறியாமை அன்றோ.
 
அதேபோன்று நிகழ்ச்சியை நடத்துபவரும் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.  “இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்களுக்குத் திருமணம் நடைபெறும்? இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்கள் வீடு கட்டுவார்கள்?” என்று  அறியாத்தனமாகக் கேள்விகள் கேட்கக் கூடாது. 

நன்றி: தமிழோவியம்

உருமி@உருமி - Cinema Vimarsanam



நடிகர்கள்: பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன்……….மற்றும்…………..அது இருக்கும் ஒரு 1000 குலோவோ இல்ல 2000 குலோவோ…….
இயக்கம்: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: சந்தோஷ் சிவன் & பிரித்விராஜ் & ஷாஜி

சந்தோஷ் சிவன்…….நல்ல ஒளிப்பதிவாளர்….பல படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சு தேசிய விருதுகள் பல வாங்கியிருக்கார்….சில குறும்படங்களையும் எடுத்து பல அவார்டு வாங்கியிருக்கார்……..சில படங்களையும் இயக்கி அவார்டுல்லாம் வாங்கி இருக்கார். சில படங்களை தயாரிச்சும் இருக்கார்.

சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவருக்கு………பரபரப்பையும், பெரும் புகழயும், தேசிய விருதுகளயும் வாங்கி தரும் இவர் இயக்குகிற & தயாரிக்கற படங்கள் இவருக்கு துட்டு மட்டும் ஒரு போதும் வாங்கி தருவதில்லை. ஏன்?

அதெல்லாம் உனக்கு எதுக்கு? இந்த படத்த பத்தி சொல்லுன்னு நீங்க கேக்கறது சரிதான்……….

உருமி படத்த பாத்ததுக்கு பின்ன என்னன்ன தோனுதுன்னா? இல்ல இல்ல ஞாபகம் இருக்குன்னா?

ஆஹா……..என்ன ஒரு ஒளிப்பதிவு……………அப்படியே ஒவ்வொரு பிரேமும் கன்னுல ஒத்திக்கற மாதிரி இருக்குங்க…….சான்ஸே இல்ல………படத்துல வர புல் பூண்டு, காஞ்சி போன மரம்……..தன்னி, வானம், பூமி, வீடு மனிதர்கள், ஆயுதங்கள், மனிதர்களோட ஆடைகள்…..இன்னும் இன்னும்…….அட பிரேமுல வர எல்லாமே அழகுதாங்க………………….பிரபுதேவா கூட ரொம்ப அழகா இருக்காருன்னா பாத்துக்கங்க…………கேமராவ கைல வச்சுருக்க எல்லாரலயும் இப்படி எடுக்க முடியுமா? இவரு கன்னுல என்னமோ கூடுதலா வச்சு படைச்சுருக்கான் அந்த பிரம்மன்…………

கதை, பிரித்வியும், பிரபு தேவாவும் பிரண்ட்ஸ்………..பிரித்வியோட பரம்பரை சொத்த பத்தி தெரிஞ்சு ஒரு அல்லக்கை பிரித்விக்கிட்ட விலை பேசுது…..சரிதான் ஏதோ நமக்கு நல்ல நேரந்தான்னு நினைச்ச பிரித்வி கூட பிரபுவு கூப்புட்டு கிட்டு அந்த இட்த்த பாக்க வந்தா…………அங்க ஒரு ஆதரவற்றோர் அனாத புள்ளங்களுக்கான இல்லம் இருக்கு……….அங்க இருக்கர காப்பாளர் வேற நீ விக்காத வித்தா நாங்க எங்க போவோம்…………உங்க அப்பா, பாட்டனெல்லாம் எவ்வளவு நல்லவங்க தெரியுமான்னு டயலாக் பேசுது.

இந்த டயலாக்கெல்லாம் கேட்டுட்டு குழப்பமா இருக்கற பிரித்விய ஆர்யா குரூப் (மூஞ்சில கருப்பு மசியெல்லாம் போட்டுருக்காரு……….ஆதிவாசியா இருப்பாரோ) வந்து தூக்கிட்டு போயி காட்டுகுள்ள வச்சி………நீ என்னடே உனக்கு வரலாரே தெரியல……நான் சொல்றேன் கேளுன்னு………….ஒரு நடந்த சம்பவத்த நீட்டி முழக்கி, பில்டப் பன்னி வரலாறுன்னு சொல்றாரு……………
ஐய்யோ இன்னொரு கதையா?

கவலை படாதீங்க…….சுருக்கா சொல்றேன்……..

வாஸ்கோடகாமான்னு ஒரு போர்த்துகீசிய கொள்ளைகாரன்…………இப்படிக்கா போகுமோது………..நல்ல வாசனையா காத்துல இப்படிக்கா வந்துருக்கும் போலஅந்த வாசனைய மோப்ப நாய் கனக்கா மோப்பம் புடிச்சு மலபார் பக்கம் ஒரு யாவாரி கனக்கா வரான்…….

ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா? நாய் வால நிமித்த முடியுமா? தெரு நாய குளிப்பாட்டி நடு வூட்ல வுட்டாலும் நரகல தானே தேடும்…………ச்….ச்…………..ச். எதுவுமே சரியா வரலயே………..ஆங்……..அதேதான்……நரிக்கு இருக்க இடம் குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாங்கிறது மாதிரி……மலபாரோட வாசனை பொருள்களையும், அது மூலம் கிடைக்கற செல்வ செழிப்பயும் பாத்து அரசியல் வியாதிங்க பொறம்போக்கு நிலத்த வளைக்கர மாதிரி…………மலபாரயே தன் கட்டுக்குள்ள கொண்டு வர பாக்குறான்

பன்னாட்டு கம்பெனிங்க தான் வாஸ் கோட காமான்னு வச்சுக்கங்க……….அந்த பன்னாட்டு கம்பனிய ஆதரிக்கற அரசியல்வியாதிங்க மாதிரி சில பேரு வாஸ் பக்கம்……பன்னாட்டு கம்பெனிய எதிர்க்கற பொது மக்கள் இல்ல நக்சலைட் மாதிரி பிரித்வி அப்பா(பழைய ப்ரித்வி) & குருப்………முடியுமா..? அரசியல்வியாதிங்க வுட்ருவாங்களா?...........பழைய பிரித்வி அப்பாவ வாஸ் கொன்னுடறான்……..

அதுல தப்பிக்கற பிரித்வி………….தன் அப்பாவ கொன்ன வாஸ கொல்றதா சபதம் போட்டுட்டு உருமிங்கற ஆயுதத்தோட வாஸுக்காக காத்திருக்கான் தன் நன்பன் பிரபு தேவாவோட(இதும் பழைய பிரபுதேவா).
தன் அப்பாவ கொன்ன வாஸ பழி வாங்கினாரா?

அவரு பழி வாங்கியிருந்தா, அப்பறம் காந்தி தாத்தாவுக்கு என்ன வேலை?
பிருத்வி உருமி வச்சுருந்த்து மாதிரி வாஸும் துப்பாக்கின்னு ஒன்னு வச்சுருக்கான்……..துப்பாக்கிட்ட உருமியோட பாச்சா பலிக்கல………
ஆல் அவுட்,……….. கப்பு வாஸுக்குதான் கிடைக்குது…………….……போனா போவுதுன்னு .அடிமை வாழ்வு மட்டும் மக்களுக்கு………….(அன்னைக்கு கிடைச்சத இன்னும் தக்க வச்சுட்டுருக்கோம்…..வெல்டன் கீப் அட் அப்…..)

இதுல வர பொன்னுங்கள பத்தி ஒரு தனி பதிவே போடலாம்ம்பரவாயில்ல இங்கயே சொல்றேன்

இதுல ஜெனிலியாவ பத்தி சொல்லனும்……….பொன்னுக்கு அரைக்கல் ஆயிசாங்கற ஒரு முஸ்லீம் இளவரசி கேரக்டரு……..வாஸு & அரசியல்வியாதிங்க மாதிரி எதிரிங்கள எதிர்க்கற ரோல்…….அந்த சீரோ சைஸ் உடம்ப வச்சுகிட்டு, ஆக்சன் சீன்ஸுல சும்மா பூந்து விளையாடிருக்கு புருசுலி மாதிரி…….பொன்னு செம அழகா இருக்கு………..ஒளிப்பதிவு………..சந்தோஷ் சிவனாச்சே….

நித்யா மேன்னும் ஒரு இள்வரசிதான்…..(ஒரு இந்து)…..நித்யா மொத்த அழகயும் நமக்கு விருந்து வச்சுருக்கார்…..பழைய பிரபு தேவாவ உருகி உருகி காதலிக்கர ரோல்(இந்த மலையாள பொன்னுங்களோட டேஸ்டு என்ன்ன்னே புரிய மாட்டேங்குது……நயந்தாரா ஞாபகம் வந்தா நான் பொறுப்புல்ல)…நித்யாவுக்கு ஃபைட் சீனெல்லாம் இல்ல….லவ் பன்ரதும், பிரபுக்கு உதவி பன்றதும் தான்……..ஆனா பாத்துக்கிட்டே இருக்கலாம் போலருக்கே………………சந்தோஷ்……………?

தபு, ஒரு டான்ஸர்………….ப்ச்…..ப்ச்…….வயசாயிடுச்சேப்பா………ஏன் சந்தோஷ்………….?
வித்யா பாலன், சந்தோஷ் ஒரு புரச்சியே பன்னிருக்காரு………இந்த ஹாலிவுட் பொடி பசங்கல்லாம் சோசியம் பாக்குற, குறி சொல்ற லேடிங்க கேரக்டர எல்லாம் ஆயாங்களுக்கே கொடுப்பானுங்க………..ஆனா நம்ம சந்தோஷ்……..அந்த கேரக்டர வித்யாவுக்கு கொடுத்து………நம்ம கைய மட்டும் இல்ல………………அதாங்க மனசயும் நீட்டற மாதிரி வச்சுருக்கார்………..இது புர்ச்சிதானே……..வித்யாவும் மலையாள லேடி கேரக்டுருல வந்து நம்ம பாடிய சூடேத்துர மாதிரி பாட்டு பாடி டான்ஸ் ஆடி பிரித்விக்கு குறி சொல்லுது……

கிளைமாக்ஸ், இந்த வரலாற கேட்ட பிரித்வி தன்னோட நிலத்த அரசியல்வியாதிங்க கிட்ட விக்காம……….அனாதை இல்லத்துக்கே குடுத்தறார்….

சரி படத்த பத்தி நாலு வரி சொல்லு?
இவ்வளவு நேரமா என் சொந்த கதையையா சொன்னேன்…….
சரி…..சரி……….

ஒரு பத்து படம் எடுக்கறதுக்கு தேவையான கேரக்டர்ஸ், நடிகர்கள், கிளை கதைகள்…….இன்னும் இன்னும் எல்லாத்தயும்……….ஒரே படத்துல வச்சி விலாவரியா விளக்கி……..எப்பா சாமி எதடா சொல்ர என்னடா சொல்றன்னு……இழு இழுன்னு இழுத்து………………முடியல…………….இந்த தேவையில்லாத விளக்கத்தெல்லாம் கொஞ்சம் கட்டிங் போட்டு………….வாஸுவோட எண்ட்ரிய்யும், அவர எதிர்த்தவங்க்ளோட ஆக்சனையும் பர பரன்னு சொல்லியிருந்தா நல்லா செமயா இருந்துருக்கும்,

 படம் பாக்கலாமா? கூடாதா?
சில பேரு குடுக்கற பில்டப்பல்லாம் காதுலயே வாங்காம…………வரலாறு அறிவியலுன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா……….பாக்கலாம்….இத்தனை பொன்னுங்களயும் இவ்வளவு அழகா தந்த்துக்கே ரெண்டு தடவ பாக்கலாம்மூனாவதா…..அது உங்க பொறுமைய, நேரத்த பொறுத்தது….
--------------