இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார்.
இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆனால் இவரைப்பற்றி எந்த ஒரு சினிமாவும் வெளிவந்ததில்லை. தற்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் படமாக்கப்பட இருக்கிறது.
'ஸ்டீவ் ஜாப்ஸ்' என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு வால்டர் ஐசக்சன் என்பவர், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த ஹாலிவுட் படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தினை ஆஸ்கார் விருதுபெற்ற திரைக்கதையாசிரியரான ஆரோன் சோர்க்கின் எழுதி இயக்குவார் எனத் தெரிகிறது.
இவர் கடந்த ஆண்டு வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்' என்ற ஆங்கில படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 2012-ம் ஆண்டு 'மணிபால்' என்ற ஆங்கிலப்படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment