சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு
ரயிலுக்கு 5 பெட்டிகள் வீதம் 40 ரயில்களுக்கு மொத்தம் 200 பெட்டிகள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 1,472 கோடி
செலவிடப்படுகிறது.
இந்த பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி
கொண்டதாகவும், துரு பிடிக்காமல் இருக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கொண்டும்
தயாரிக்கப்படுகிறது. தானியங்கி ரயில் இயக்கம், தானியங்கி ரயில் பாதுகாப்பு
மற்றும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலிலும்
மொத்தம் 1,300 பேர் பயணம் செய்யும் வகையில் நவீன முறையில் ரெயில் பெட்டிகள்
தயாரிக்கப்படுகிறது.
சீக்கிரம் முடிக்கனும். டிராபிக் தாங்க முடியல.!
0 comments:
Post a Comment