Tuesday, May 22, 2012

கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்

http://i.imgur.com/eEV91.jpgஷேர் ஆட்டோல முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோவும் ஹீரோயினும் போறப்ப ஒரு பொறம்போக்கு வேணும்னே ஹீரோயின் மேல இடிக்கறான்.. ஒரு தடவை இடிச்சிருந்தா ஹீரோ சும்மா உட்டிருப்பாரு.. 2 டைம் இடிக்கறான்.. அவனுக்கு ராசியான நெம்பர் 2 போல..உடனே ஹீரோ ஸ்டாப்ல இறங்குனதும் பப்ளிக் டாய்லட்ல அந்த நாயை போட்டு குமுறு குமுறுன்னு குமுறுறாரு.. ஐ மீன் ,அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடறாரு.. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல நல்ல  அபிப்ராயம் வந்துடுது..

 ஹீரோவும், ஹீரோயினும்  அடிக்கடி சந்திக்கறாங்க , ஊரை சுத்தறாங்க.. எல்லா ஹோட்டல்லயும் சாப்பிடறாங்க.. ஒரு நாள் ஹீரோ வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிடறாங்க.. ஹீரோ மட்டும் தனியா இருக்காரு.. ஹீரோயின்க்கு பிறந்த நாள்.. அவ தன் காதலை சொல்ல ஹீரோ வீட்டுக்கு வர்றா.. அவளை பார்த்ததும் அந்த தத்தி ஹீரோ அந்த கில்மா புக்கை ஒளிச்சு வைக்கறான்.. நானா இருந்தா கற்றதும் பெற்றதும் உனக்கும் இந்தான்னு குடுத்திருப்பேன்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு..

http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/Nov13/Swasika/normal/Swasika_20175.jpg

 அப்புறம் திடீர்னு லூஸ் மாதிரி ஹீரோயினை ஹீரோ டைட்டா கட்டிப்பிடிக்கறாரு.. கிட்டத்தட அட்டெம்ப்ட் ரேப் மாதிரி.. ஹீரோயின் மிரண்டு போய் ஓடிடுது..  ஜெயேந்திரர்ட்ட இருந்து தப்பிச்சு ஓடுன எழுத்தாளர் அனுராதா ரமணன் மாதிரி..( பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம்)

இப்போ 2 பேருக்கும் சண்டை.. பிடிக்கலைன்னா ஃபோன் நெம்பர் மாத்திட்டு போய்ட்டே இருக்கனும்.. அந்த கேனை ஹீரோயின் என்ன பண்றா .. உன்னை எனக்குப்பிடிக்கலை, நீ செஞ்சது தப்பு அப்டினு அடிக்கடி மீட் பண்ணி சொல்றா..

 ஹீரோயினுக்கு வேற பக்கம் நிச்சயம் ஆகிடுது.. மேரேஜ் அன்னைக்கு முந்தின நாள் ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயினை கன்வின்ஸ் பண்ணி “ கடைசியா ஒரு தடவை நீ வந்து பேசு”ன்னு சொல்றான்.. நானா இருந்தா “ டேய் கேனை... எனக்கு மேரேஜ், நான் எப்படி அங்கே வர முடியும், அவனை வேணா மண்டபத்துக்கு கூட்டிட்டு வா”ன்னு சொல்லி இருப்பேன்..

 ஆனா அந்த கேனை ஹீரோயின்  மண்டபத்துல இருந்து எஸ் ஆகி முன்னாள் காதலன் வீட்டுக்கு போறா.. அதுக்குள்ள அந்த அவசரத்துல பிறந்த அவசரக்குடுக்கை ஹீரோ தற்கொலை பண்ணிக்கறார்..இவ ஹேரே போச்சுன்னு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை மேரேஜ் பண்ணிக்கறா.. இவ்ளவ் தான் கதை ( ஆனா ஹீரோயினுக்கு ஹீரோ செத்தது தெரியாதுன்னு கேவலமான ட்விஸ்ட் வேற )


ஹீரோ ஆள் ஜம்முன்னு தான் இருக்கார்.. ஆனா கேரக்டர் தான் வீக்.  சாதாரண விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை பண்ணிக்கற அளவு வீக் மைண்ட்??? டூயட் காட்சிகளில், காதல் கலாய்ப்புக்காட்சிகளில் பாஸ் மார்க் ..


ஹீரோயின் ஆள் கும்முன்னுதான் இருக்கு. 60 மார்க் தேறும். அலங்கார வளைவுகள் பிளஸ் பாயிண்ட்ஸ்.


ஆர் சுந்தர் ராஜன் , புரோட்டா சூரி 2 பேர் இருந்தும் காமெடி வறட்சி. வடிவேல் மாதிரி காரணத்தை சொல்லிட்டு அடிடா எல்லாம் செம கடி.. வடிவேல் மாதிரி பண்ண த்தான் அவர் இருக்காரே?




http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3628_L_galvpf.gif


மனம் கவர்ந்த வசனங்கள்


1. எந்த சோப் போட்டு குளிச்சாலும் நீ வெளுக்கப்போறதில்லை, ஏன் ரிஸ்க் எடுக்கறே?


2. இப்போ நான் சொன்ன தத்துவம் அரிஸ்டாட்டில் சொன்னது..


 அதானே. சொந்தமா நீங்க எப்போதான் சொல்லி இருக்கீங்க?



3. BAG  ல பாருங்க....

 ஒண்ணும் தெரியலையே?


 யோவ்.. என்னை சுத்தி சுத்தி வந்து பார்த்தா என்ன தெரியும்? என் ஹேண்ட் பேக்ல பாருய்யா  ( அடங்கோ ,... அடேய் அடேய் அவ்ளவ் அப்பாவியாடா நீ ?)


4. உன் கவிதையை நான் படிக்கறதை விட நீயே படிச்சுக்காட்டினா  ரொம்ப நல்லாருக்கும். ( தக்காளி.. நீ கை நாட்டா?).


5. நமக்கு செய்யப்படும் அதீத வசதிகள் நம்ம குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது


6. சிம்மே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போட்டாலும் பரவாயில்லை, பேட்டரியே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போடறியே?


7. என்னது? நீ குடிக்க மாட்டியா? இதுக்கு நம்பற மாதிரி ஒரு காரணம் சொல்லு


அப்பா என் மேல வெச்சிருக்கற நம்பிக்கை தான் நான் குடிக்காததுக்கு காரணம்..


8. பிசிராந்தையார் பிசிராந்தையார்னு

 2 பேரா?



ம்ஹூம், ஒருத்தர்தான்.....



9.  டீல நாட்டுச்சர்க்கரை போட்டுக்குடிச்சா நல்லாருக்கும், உடம்புக்கும் நல்லது..


10. அவ யார் கூப்பிட்டாலும் போவா .

 யோவ்!!!!!


நல்லது கெட்டது நடந்தா வீட்டுக்கு யார் கூப்பிட்டாலும் போவான்னேன்.


11. சொல்லாம போயிட்டானேன்னு ஃபீல் பண்ணக்கூடாது/..அதான்..

 ஆமா, இவர் மேல் லோகத்துக்கு போறப்பக்கூட எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டுத்தான் போவாரு..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_78226435185.jpg
பாரதியார் சொன்னாரே நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை வேணும்னு
 அதை ஃபாலோ பண்றாங்களாம்
12. சாராயம் குடிச்சு செத்தவன் சமாதில சாராயம் வெச்சு படைக்கறாங்க, ஃபிகரால உயிரை விட்டவன் சமாதில அந்த ஃபிகரையா வெச்சு படைக்கறாங்க



13.  நான் ஏன் இப்போ பிராந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்னா .உன் மனசுல இருக்கற காதல்ங்கற மனப்பிராந்தியை அகற்றத்தான்


14. இந்த விஷயம் முகத்துக்கு முன்னால நின்னு மன்னிப்பு கேட்கற விஷயம் இல்லை.. முதுகுக்கு பின்னால நின்னு கூனிக்குறுகி மன்னிப்பு கேட்கற விஷயம்


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை வைத்துக்கொண்டு அதை 13 ரீல் இழுத்த தைரியம்.. தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த நுணுக்கம்


2. ஹீரோ  ஹீரோயின் செலக்‌ஷன்.. காதல் காட்சிகளில் கண்ணியம்..




http://www.tamilnow.com/movies/gallery/kandathum-kanathathum/kandathum-kanathathum-6426.jpg


இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. காதலையே இன்னும் வெளீல சொல்லாத ஒரு பயந்தாங்கொள்ளி காதலன் கில்மா புக்கை படிச்சுட்டு காதலியை மிஸ் யூஸ் பண்ண ட்ரை பண்ணுவானா?


2. காதலி அதாவது ஹீரோயின் முத முதலா ஹீரோ வீட்டுக்கு உள்ளே வர்றா.. நித்தியானந்தா ஆசிரம பெட்ரூமுக்குள்ள வர்ற மாதிரி பெப்பெரெப்பேன்னு வருவாளா?  அப்பா அம்மா வீட்ல இல்லைங்கற மேட்டர் அவளுக்கு தெரியாது.. அப்போ அவ என்ன பண்ணுவா? காலிங்க் பெல் அடிச்சுட்டோ, கதவை தட்டிட்டோ வருவா.. ஆனா ஹால், தாண்டி அவ பாட்டுக்கு உள்ளே வந்துடறாளே?


3. காதலியை பார்த்ததும் கில்மா புக்கை காதலன் ஏன் மறைக்கறான்? அவ தன்னை தப்பா நினைச்சுடக்கூடாதுன்னுதானே? அப்படி நினைக்கறவன் கட்டிப்பிடிச்சு ரேப் பண்ண மட்டும் ட்ரை பண்ணுவானா?

4. சரி, ஆனது ஆகிடுச்சு... பயங்கர கோபத்துல ஹீரோயின் வெளில கிளம்பறா.. போறவ தலைவிரி கோலமா, டிரஸ் எல்லாம் கலைஞ்ச போஸ்ல தெருவே வேடிக்கை பார்க்க அப்படியா போவா?வில்லன்கள் 10 பேரு துரத்தி வர்றாங்களா? காதலன் தானே? அதுவும் அவ முறைச்சதும் அவன் பம்மிக்கிட்டு தேமேன்னு சும்மா தான் நிக்கறான்.. நின்னு நிதானமா தன்னை சரி பண்ணிட்டுத்தானே வருவா?


5. கோவிச்சுக்கிட்டு போனவ  வேற ஊருக்கு போலாம், அல்லது அவனை டோட்டலா அவாய்டு பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு  அடிக்கடி அவனை மீட் பண்ணி உன்னை பார்க்கவே பிடிக்கலை, சாரின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்காளே?


http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg


6. இடைவேளைக்குப்பிறகு எப்படி கதையை நகர்த்தறதுன்னு தெரியாம திரு திருன்னு விழிக்கறீங்க.. ஹீரோ சோகப்பாட்டு, சரக்கு அடித்தல்னு செம போரா கதை நகருது..

7. இந்தக்காலத்துல எத்தனையோ தப்பு பண்ணிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாம வாழும் பலர் மத்தில ஜஸ்ட் கில்மா புக்கை படிச்சதாலும், அதனால உணர்ச்சி வசப்பட்டு காதலியை கட்டிப்பிடிசதாலும் ஒருத்தன் குற்ற உணர்ச்சில தற்கொலை செய்வது எல்லாம் ஓவர்


8. என் ஐடியா என்னான்னா ஹீரோயின் அவ வீட்ல தனியா இருக்கறப்ப பாத்ரூம்;ல குளிக்கறப்ப ஹீரோ எண்ட்டர் ஆகறார்,.. கட்டிப்பிடிக்கறார்னு சீன் வெச்சிருந்தா மேலே சொன்ன அத்தனை லாஜிக் மீறலும் பணால் ஆகி இருக்கும், எங்களுக்கும் ஒரு சீனாவது மிச்சம் ஆகி இருக்கும்..

9. க்ளைமாக்ஸ் மகா சொதப்பல்.. ஹீரோவை ஹீரோயின் ஏத்துக்கிட்டு மேரேஜ் பண்ணி இருக்கனும்.. அதை விட்டுட்டு அவனை தியாகி ஆக்கி ஹீரோயினை துரோகி ஆக்கியது ஓவரோ ஓவர்


10. ஹீரோவோட  ஃபிரண்ட் தலை எல்லாம் களைஞ்சு 2 கிலோ முடியோட கேவலமா இருக்கார்.. அவரை முன்னே பின்னே பழக்கம் இல்லாத  ஹீரோயின் அவரை நம்பி மிட் நைட்ல எப்படி ஆட்டோல கழுத்துல கைல 30 பவுன் நகையோட போவார்? அது கூட தேவலை.. அதே ஃபிரண்ட் அம்போன்னு ஹீரோயினை நீங்க தனியா மண்டபத்துக்கு போய்க்குங்கன்னு அனுப்பறார்.. ஆட்டோ டிரைவர் பாட்டுக்கு கடத்திட்டு போய்ட்டா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp4ULl_JsKf5LUsTNGufShEl6lXkebNvFpJMhdOoP2ZPEfKRfFzsnuiPF6ASuTC7hv3WDSuPxjWhmn_jIOpQcCcNCzOn5H_FdQp-H1i0GfdRY_t0uJlk6K3szuVWe4e3Sx8_6wbs8YumU/s1600/Kandathum+Kanathathum+Movie+Stills+Photos+Kandathum+Kanathathum+New+Pictures.jpg


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

0 comments:

Post a Comment