Tuesday, May 22, 2012

மின்வெட்டு... உடலையும் பாதிக்கும்

உணவுப் பொருள் பாதுகாப்பில் குளிர்சாதனப்பெட்டியின் வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படி, வெப்ப நிலை அதிகரிக்கும்போது எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பதுக் கடினம். மின் வெட்டு சமயங்களில் இரண்டு மணி நேரம் வரை ரெஃப்ரிஜிரேட்டரின் வெப்பநிலை நான்கு டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் குளிர்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். தற்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் பல்கிப் பெருகும்.

நாளின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் மின் வெட்டுப் பிரச்னையின்போது தவிர்க்க வேண்டிய சில வழிமுறைகள்:

காய்கறிகள், பழங்களைக் கழுவாமல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது. அவற்றில் இருக்கின்ற பாக்டீரியாக்கள் மற்றப் பொருட்களுக்கும் பரவும் வாய்ப்பு அதிகம்.

மீன் - இறைச்சி போன்ற அசைவ வகை உணவுகளில், தீமை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் பரவி வளரும். கேடு விளைவிக்கும் இந்த நுண்கிருமிகள் உடன் இருக்கும் காய்கறி & பழங்களின் மீதும் பரவினால் சீக்கிரமே உணவுப் பொருட்களும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகிவிடும். இந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படும்.

கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் வகை உணவுகளான சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், தோசை மாவு போன்ற உணவுப் பொருட்களை மின் வெட்டு சமயங்-களில் பயன்படுத்த வேண்டாம்.

காய்கறிகளைக் காற்றுப் புகாத கன்டெய்னரில் வைத்திருந்தால் இரண்டு நாட்கள் வரை பூஞ்சை படராமல் பார்த்துக்கொள்ள முடியும். கீரை வகைகளை பிரவுன் பேப்பரில் சுற்றிவைத்தால், விரைவில் அழுகிவிடாமல் தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment