Monday, May 21, 2012

ஐபிஎல் 5: டெக்கான் சார்ஜர்ஸ் அபார வெற்றி-பிளே ஆப் சுற்றில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ipl 5, royal challengers bangalore, deccan chargers, ஐபிஎல் 5, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்ஸ்ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 133 ரன்களை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, முடிவில் 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்தது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சாரஜ்ர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய டெக்கான் சார்ஜர்ஸ் அணி களமிறங்கியது.

துவக்க வீரராக களமிறங்கிய ஷிகார் தவன் 5 ரன்கள் எடுத்து போல்டான நிலையில், அடுத்து வந்த அக்ஷத் ரெட்டி 7 ரன்களில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேமரூன் ஒயிட் 1 ரன்னில் ஏமாற்றினார். அணியின் ஸ்கோரை உயர்த்த கடுமையாக போராடிய கேப்டன் சங்கக்காரா 15 ரன்கள் எடுத்த நிலையில், முரளிதரனின் சுழலில் சிக்கினார்.

இந்த நிலையில் பொறுப்பாக ஆடி வந்த டுமினி, பார்த்திவ் பட்டேல் உடன் ஜோடி சேர்ந்து 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு முரளிதரன் வீசிய 17வது ஓவரில் டுமினி 3 சிக்ஸ் அடித்து வானவேடிக்கை காட்டினர்.

ஆனால் 53 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 74 ரன்களை எட்டிய டுமினி ஜாகிர் கான் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் பார்த்திவ் பட்டேல் 16 ரன்கள் எடுத்து கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ஆஷிஸ் ரெட்டி 4 ரன்களில் போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 132 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்களும், ஜாகிர் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

133 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கத்தை அளித்தார். 2வது ஓவரில் அதிரடியாக 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்த கிறிஸ் கெய்ல் 10 பந்துகளில் 27 ரன்களை குவித்து போல்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த தில்ஷன் 4 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார்.

2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய திவாரி காயம் காரணமாக ஓய்வெடுக்க சென்றார். அப்போது அமித் மிஸ்ராவின் ஓவரில் டி வில்லியர்ஸ் 4 ரன்கள் எடுத்து டுமினியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் அகர்வால் 1 ரன்னில் போல்டானார். இதனால் ஓய்விற்கு சென்ற திவாரி திரும்ப களமிறங்கினார்.

அதன்பிறகு விராத் கோஹ்லி, திவாரி ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். இந்த நிலையில் பொறுப்பாக ஆடி 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்த கோஹ்லி 42 ரன்கள் எடுத்த நிலையில் கோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாகிர் கான் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகினார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிந்த நிலையில் திவாரி மட்டும் பொறுப்பாக 30 ரன்கள் எட்ட, சங்கக்காராவிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்பை எட்டியது. வினய் குமார் அதிரடியாக ஆட முயன்று அவுட்டானார். அடுத்து வந்த முரளிதரனும் அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வியை தழுவியது.

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் தோல்வியை தழுவியதால், ஐபிஎல் 5 தொடரின் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றிற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்தது.

0 comments:

Post a Comment