சென்ற இதழில் புரோக்கிங் அக்கவுன்டை தொடங்குவது எப்படி என்பது பற்றி
விளக்கமாக எடுத்துச் சொன்னேன். இனி நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும்
தயாராகி விட்டீர்கள்.
எந்த ஒரு செயலில் இறங்கும் முன்பும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது, அதில் புழங்கும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்வதுதான். பங்குச் சந்தையில் புழங்கும் டெர்மினாலஜிகள் ஆங்கிலத்தில் இருப்பதால், சிறிய நகரங்களில் இருப்பவர்கள் என்னமோ ஏதோ என்று பயப்படுகிறார்கள். உண்மையில் இந்த வார்த்தை களைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த டெர்மினாலஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை சரியாக விளங்கிக் கொண்டாலே போதும். இனி பங்குப் பரிவர்த்தனையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில முக்கியமான வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறேன்.
பி.எஸ்.இ: பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். இந்தியாவின் இருபெரும் எக்ஸ்சேஞ்சுகளில் இதுவும் ஒன்று. ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த எக்ஸ்சேஞ்ச் என்ற பெருமையும் இதற்குண்டு. இதன் புரமோட்டர்கள் பெரும்பாலும் புரோக்கர்கள் ஆவர்.
என்.எஸ்.இ: நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட். இந்தியாவின் மிகப் பெரிய எக்ஸ்சேஞ்ச். மும்பையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த எக்ஸ்சேஞ்சின் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? பல பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் சில நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள். பலரும் இதை அரசுக்குச் சொந்தமான நிறுவன மாக நினைக்கிறார்கள். இது தவறு. பல அரசுத்துறை நிறுவ னங்கள் இணைந்து நடத்தும் தனியார் நிறுவனமே இது. நீங்கள் பங்குகளில் வர்த்தகம் செய்யும்போது உங்களது புரோக்கர் இந்த இரண்டு எக்ஸ்சேஞ்சுகளில் ஏதாவது ஒன்றில்தான் நீங்கள் கேட்ட பங்குகளை வாங்கியிருப்பார் அல்லது விற்றிருப்பார். சில புரோக்கர்கள் என்.எஸ்.இ.
அல்லது பி.எஸ்.இ. என ஏதாவது ஒரு எக்ஸ்சேஞ்சில்தான் உறுப்பினராக இருப்பார்கள். பெரிய புரோக்கர்கள் இரண்டு எக்ஸ்சேஞ்சிலும் உறுப்பினராக இருப்பார்கள்.
என்.எஸ்.டி.எல்/சி.டி.எஸ்.எல்: இவை இரண்டும் டெபாஸிட்டரி நிறுவனங்கள். அதாவது, நாம் வாங்குகிற பங்குகளையும் பத்திரங்களையும் பாதுகாப்பது இந்த நிறுவனங்களின் வேலை. எலெக்ட்ரானிக் வடிவத்தில் இருக்கும் பங்குகளும், பத்திரங் களும் இந்த நிறுவனங்க ளால் பாதுகாக்கப்படுகிறது. டெபாஸிட்டரி பார்ட்டிசிபன்ட் (சுருக்கமாக, டி.பி) என்பவர் இந்த இரு நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மத்தி யில் உள்ளவர். பொதுவாக புரோக்கரே டி.பி-யாகச் செயல் படுவார்.
புரோக்கர்: ஸ்டாக் எக்ஸ் சேஞ்சில் உறுப்பினராக இருப்பவர். தனிநபரோ, பார்ட்னர்ஷிப் நிறுவனமோ, கம்பெனிகளோ, அல்லது வங்கிகளோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் உறுப் பினராகலாம். பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ நினைத்தால் புரோக்கர்கள் மூலமாகத்தான் செய்ய முடியும். நாமே நேரில் போய் எக்ஸ்சேஞ்சிடமிருந்து வாங்கவோ, விற்கவோ முடியாது.
சப் புரோக்கர்: ஒவ்வொரு புரோக்கரும் பல சப் புரோக் கர்களை நியமனம் செய்வார். இப்படித்தான் ஒரு புரோக்கிங் நிறுவனம் இந்தியா முழுவ தும் தனது தொழிலை விரிவுப் படுத்துகிறது.
புரோக்கரேஜ்: நீங்கள் பங்கு களை வாங்கி விற்பதற்கு புரோக்கர் எடுத்துக் கொள்ளும் கமிஷன்.
ஆன்லைன் டிரேடிங்: ஆன்லைன் மூலம் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது. இன்டர்நெட் வருவதற்கு முன்பு வரை புரோக்கரிடம் போன் செய்துதான் பங்குகளை வாங்க/விற்கச் சொல்லி வந்தார்கள். இப்போது கம்ப்யூட்டர் உதவியுடன் இன்டர்நெட் மூலமாக நீங்களே வாங்கி விற்கலாம். இதற்கு பெயர்தான் ஆன்லைன் டிரேடிங்.
ஆஃப்லைன் டிரேடிங்: புரோக்கர் அலுவலகத் துடன் போன் மூலம் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு வாங்க/விற்கச் சொல் வதை ஆஃப்லைன் டிரேடிங் என்கிறார்கள்.
மொபைல் டிரேடிங்: செல்போன் மூலமாக பங்குப் பரிவர்த்தனை செய்வது.
மார்க்கெட் ஆர்டர்: ஒரு பங்கு தற்போது மார்க்கெட்டில் விற்கப் படும் விலைக்கே வாங்குவது/விற்பது.
லிமிட் ஆர்டர்: இந்த விலைக்கு இந்தப் பங்கை வாங்க அல்லது விற்க விரும்புகிறேன் என்று விலையைக் குறித்து ஆர்டர் கொடுப்பது.
இன்ட்ரா டே டிரேடிங்: ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்பது.
ஐ.பி.ஓ.: தனது தொழிலை விரிவுப் படுத்த நிறுவனங்களுக்கு நிதி தேவைப்படும். இந்த நிதியைத் திரட்ட சந்தையில் பங்கு வெளியிடும் முதல் முயற்சியே ஐ.பி.ஓ.
எஃப்.பி.ஓ.: ஐ.பி.ஓ-வுக்கு அடுத்த கட்டம் இது. ஏற்கெனவே சந்தையில் லிஸ்ட் ஆகியுள்ள நிறுவனம், தனது நிதித் தேவைகளுக்காக மீண்டும் சந்தையில் தனது பங்குகளை விற்பது.
ரைட்ஸ்: ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு, உரிமை அடிப்படையில் பங்குகளை விற்பது.
போனஸ்: நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இலவசமாக பங்குகளை வழங்குவது. போனஸ் கொடுக்கப்பட்ட விகிதத்தில் சந்தையில் பங்கின் விலை உடனே குறையும்.
ஸ்ப்ளிட்: பங்குகளின் முகமதிப்பைக் குறைத்து, அதிக பங்குகளாகக் கொடுப்பது. உதாரணத்துக்கு ரூ.10 முகமதிப் புள்ள ஒரு பங்கை உடைத்து, ரூ.2 முகமதிப்புள்ள ஐந்து பங்குகளாக்கிக் கொடுப்பது. இப்படிச் செய்யும் போது இதே விகிதத்தில் பங்கின் சந்தை விலை உடன் குறையும்.
செக்டார்ஸ்/இண்டஸ்ட்ரிஸ்/ துறைகள்: ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ஒரே துறையைச் சார்ந்த பங்குகள் எனக் குறிப்பிடுகிறோம். உதாரணத்துக்கு ஐ.டி. துறை, ஆட்டோமொபைல் துறை, மின்சாரத் துறை, கேப்பிட்டல் குட்ஸ், ரீடெயில், டெலிகாம், வங்கி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்: ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு. பங்குகளின் விலை ஏறினால் இதன் மதிப்பு உயரும். குறைந்தால் மதிப்பும் குறையும்.
மிகப் பெரிய, பெரிய, நடுத்தர, மற்றும் சிறிய நிறுவனங்கள் (ஜெயன்ட், லார்ஜ், மிட் அண்ட் ஸ்மால் கம்பெனிகள்) - நிறுவனப் பங்குகளின் மொத்த மார்க்கெட் மதிப்பை வைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரிவுக்கு என தனியாகப் சட்ட ங்கள் ஏதும் இல்லை. நமது வரையறையைப் பொறுத்து மாறலாம். இன்றைய நிலையில் ரூ.1,00,000 கோடிக்கு மேல் மார்க்கெட் மதிப்புள்ள நிறுவனங்களை மிகப் பெரிய நிறுவனங்கள் என்றும், ரூ.30,000 கோடி - ரூ.1,00,000 கோடி மார்க்கெட் மதிப்புள்ள நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் என்றும், ரூ.5,000 கோடி - ரூ.30,000 கோடி மார்க்கெட் மதிப்புள்ள நிறுவனங்களை நடுத்தர நிறுவனங்கள் என்றும், ரூ.2,000 கோடி - ரூ.5,000 கோடி மார்க்கெட் மதிப்புள்ள நிறுவனங்களை சிறிய நிறுவனங்கள் என்றும், ரூ.2,000 கோடிக்கு கீழ் மார்க்கெட் மதிப்புள்ள நிறுவனங்களை மைக்ரோ கேப் நிறுவனங்கள் என்றும் கூறலாம்.
நன்றி: நாணயம் விகடன்

0 comments:
Post a Comment