Wednesday, May 30, 2012

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்


கோவைக்காயை இரண்டு நாட்கள் பகல் உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும். கோவைக்காயை சமைத்து சாப்பிட முடியாதவர்கள், பச்சைக் கோவைக் காயை வெறும் வாயில் போட்டு நன்கு மென்று துப்பினால் கூட வாய்ப்புண் குணமாகிவிடும்.

கோவைக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்கள், தொடர்ந்து கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

0 comments:

Post a Comment