Wednesday, May 23, 2012

ராட்டினம்-2012. திரைவிமர்சனம்



 இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்.. ராட்டினம் படத்தை பற்றி கருத்தை சொல்லி இருந்தார்.... சில நேரங்களில் மட்டுமே அவர் ரசனை  எனக்கு ஒத்து வரும்... மற்றபடி பொதுவாக எல்லா படத்தையும் மரண மொக்கை என்ற அளவிலேயே அவர் கருத்து இருக்கும் ..


ஆனால் அவர் நன்றாக இல்லை என்று ஒரு படத்தை  சொல்லி விட்டால்  அந்த படத்தை உடனே பார்த்த விடுவது என் வழக்கம்..  ராட்டினம் படம் செமையான மொக்கை என்று சொல்லிவிட்டார்கள்.. 

பொதுவாக  படம் பார்க்காமல் எந்த விமர்சனத்தையும் விரிவாக படிக்க மாட்டேன்.. இரண்டு  வரிகள் மேய்ந்து விட்டு தாவிச் செல்வது எனது வழக்கம்...நேரமின்மை காரணமாக நேற்று ராட்டினம் படத்துக்கு போனேன்.. நான் முன்பே சொன்னது போல அவர் ரசனையும் என் ரசனையும்  இந்த படத்தில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருந்தது..

===========
ராட்டினம்ம்படத்தின் ஒன்லைன்..

காதல் மற்றும் காமம் மறுக்கப்பட்ட தேசத்தில் காதல் செய்தால்  என்னவாகும்-? என்பதே படத்தின்  ஒன்லைன்
=============

ராட்டினம் படத்தின் கதை....


நீயில்லை என்றால் என் உயிரே இல்லை என்று சொன்ன காதலர்கள் இருவர் சூழ்நிலை காரணமாக என்னவாகின்றார்கள் என்பதே படத்தின் கதை.
==============
படத்தின் சுவாரஸ்யங்களில்  சில...
காதல் மறுக்கப்பட்ட நம் சமுகத்தில் ரோட்டில்  காதலி சாப்பிட்டு விட்டு போடும் கிட்கேட்  சாக்லேட் பேப்பரை பொறுக்கி எடுத்து பத்திரப்படுத்தி வைப்பதே காதல் என்று  நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழக இளைஞர்களை  திரையில் காட்ட முயற்சி மேற்க்கொண்ட இயக்குனருக்கு சபாஷ்..

ஆனால் படத்தில் நிறைய அமெச்சூர் தனங்கள் தெரிகின்றது.. வலுவில்லா தொய்வான  காட்சி அமைப்புகள்..

 இரண்டு வருடம் காதலித்த பெண்ணிடம் லவ்யூ சொல்ல முயற்சிக்க அவரோ அவரது நண்பனுக்கு ரூட்  விடும் காட்சி நல்ல சுவாரஸ்யம்...

நண்பர்கள் பேசிக்கெள்வது கூட என்ன மச்சான் நீ  நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன்? என்ற அளவிலேயே டயலாக்குகள் போதும் என்றுஇயக்குனர் முடிவு எடுத்து விட்டார் போல...ஆனால் தினமும் பசங்க குடித்துக்கொண்டே இருக்கின்றார்கள்...ஏதோ நைட் ஷோ போனானுங்க படம் பார்த்தானுங்க ரோட்டுக்கடையில் சாப்பிட்டானுங்க என்பதாய் காட்சிகள் இருந்து இருக்கலாம்.


ரொம்ப நாட்களுக்கு பிறகு டிவி நடிகை ஜீவாவை பார்க்க முடிந்தது... படத்தின் முதல் காட்சிகளில்  நடக்கும் அரசியல் சண்டை ரொம்ப நீட்டாக படமாக்கி இருக்கின்றார்கள்..  அதே டெம்ட் படம் முழுக்க இருந்து இருக்க வேண்டும்..

இரண்டு வருடம் காதலித்த பெண் கேரக்டர் கிராமத்து சாயலில் நன்றாகவே இருக்கின்றார்..
நாயகன் நிறைய இடங்களில் நாயகியை பார்த்து வழிந்து சிரிக்க வேண்டும் என்று இயக்குனர்  சொன்னதை பச்சக் என்று பிடித்துக்கொண்டு விட்டார் என்பது பல காட்சிகளில்  தெரிகின்றது.

நாயகி சுவாதி நல்ல தேர்வு. இருந்தாலும் முகத்தில் சின்ன மெச்சூர்டு பேஸ் போல  சில காட்சிகளில் தெரிகின்றார்.... நாயகி சுவாதியை ரொம்ப டிசன்டாகவே காட்டி இருக்கின்றார்கள். ஆனால் அவர் வேறு ஒரு படத்தில்  திறமை காட்டி, இருக்கின்றார் என்பதற்கு சில ஸ்டில்கள் காணக்கிடக்கின்றன.


சில காட்சிகள் சீரியல் காட்சிகள் போல கட்ஷாட் எல்லாம் போட்டு ரியாக்ஷன் கொடுத்து இருக்கின்றார்கள்.

தூத்துக்குடி நகரத்து சின்ன சின்ன இடங்களை கூட கேமராமேன் விட்டுவைக்கவில்லை.. நல்ல பதிவு...

இசையமைப்பாளர் கையை கட்டி இருக்க வேண்டும்.. நிறைய காட்சிகளில் வாசித்து சீரியல் பீலிங்கை  கொடுத்த புண்ணியவான் அவர்தான்...

ஆனால் பாரில் கிளைமாக்சுக்கு முன் நடக்கும் சண்டையில் நம்மை நிமிர்ந்து  உட்கார வைக்கின்றார்கள்... அதே போல  அந்த கிளைமாக்ஸ் நன்றாக இருந்தது.. பட் எதிர்பார்த்த்துதான்.. நாயகனின் அப்பா மேல் படத்தை முடிக்கும் அந்த காட்சி நிறைவாகவே இருந்தது..

========

படத்தின்  டிரைலர்.


==============
படக்குழுவினர் விபரம்

Story, screenplay.direction : K.S Thangasamy 
Music : Manuramesan
Editing : Gopikrishna
Art direction : Mani Karthik
Cinematography : P Raj Sundar

=========
பைனல்கிக் 
இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இன்னும் இந்த படம் மிக சிறப்பாக வந்து இருக்கும் படத்தில்  தொடக்கமும் முடிவும் மட்டுமே மனதில் நிற்கின்றது.. கன்யாக்குமாரி நான்  போகலை.. அவன்பொய்தான் சொன்னான் ஆனாலும் எனக்கு  பிடிச்சி இருந்தது என்று சொல்லும் அந்த காட்சியில் ஒரு ரசிகன் எழுந்து நின்று கைதட்டினான்..  அவன் நிறைய முறை கைதட்ட வைத்து இருக்க  வேண்டும்... இந்த படம் டைம்பாஸ் படம்..
------------------

0 comments:

Post a Comment