சென்ற வாரம் பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க் பற்றி விளக்கமாகப்
பார்த்தோம்... இனி வரும் வாரங்களில் வெவ்வேறு முதலீட்டு முறைகள் பற்றியும்,
அவற்றில் உள்ள நன்மை, தீமைகள் பற்றியும் பங்குகளை எவ்வாறு மதிப்பிடுவது
என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், பங்கு
மதிப்பீட்டிற்காக உபயோகிக்கும் சில வார்த்தைகளை (டெர்மினாலஜிஸ்) பற்றி
அறிந்து கொள்வது அவசியம். காரணம், பங்குகளை அலசி ஆராய இவைதான் அடிப்படை!
ஒரு சிறிய உதாரணத்துடன் இதைப் பார்க்கலாமா? 'அஆஇ’ என்கிற பெயரில் நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறீர்கள். உங்களின் சென்ற ஆண்டு எளிமைப்படுத்தப்பட்ட இன்கம் ஸ்டேட்மென்ட், அதாவது, வருமான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான அறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளைக் காண்பிக்கும்.. இதில் நிறுவனம் பெரிதாக பெரிதாக, பலவிதமான விவரங்கள் வரும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற மாதிரி எளிமையாக 'அஆஇ சூப்பர் மார்க்கெட்’டின் வருமான அறிக்கையைத் தந்திருக்கிறேன். இந்த சூப்பர் மார்க்கெட் மூலம் உங்கள் தினசரி வியாபாரம் சுமார் ரூ.5,000 என்று எடுத்துக் கொள்வோம். சென்ற ஆண்டு உங்களின் மொத்த விற்பனை (டர்ன் ஓவர் என்றும் கூறுவார்கள்) ரூ.18.5 லட்சம். அதில் ரூ.50 ஆயிரம் சேதாரத்தில் (பொருட்கள் உடைந்தது, கெட்டுப் போனது, திரும்பி வந்தது போன்றவை) போய்விட்டது. ஆகையால் உங்களின் நிகர விற்பனை ரூ.18 லட்சம்.
இதில் உங்களின் கொள்முதல் செலவு ரூ.8 லட்சம். வாடகை, சம்பளம், மின்சாரம், டீ, காபி போன்ற அனைத்துச் செலவுகளும் ரூ.5 லட்சம் ஆகிறது. நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தேய்மானம் உண்டாகும். அதற்காக ஒரு குறிப்பிட்ட செலவை எழுதிக் கொள்ளலாம். இந்த ஸ்டோரில் அத்தொகை ரூ.10,000 என்று வைத்துக் கொள்வோம். இதன்பின் கிடைக்கும் லாபமான ரூ.4.90 லட்சத்திற்கு நீங்கள் உங்கள் நிறுவனத்தின் அமைப்பைப் பொறுத்து (உரிமையாளர், பார்ட்னர்ஷிப் அல்லது கம்பெனி) வரி கட்ட வேண்டும். நாம் இங்கு உச்சபட்ச வரியான 33.99%-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆக வரி செலுத்தியபின் கிடைக்கும் லாபமான 3,23,449-தான் உங்களின் நிகர லாபம் ஆகும். இந்த அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியது தேய்மானச் செலவு. அந்தப் பணம் உங்கள் கையில்தான் உள்ளது - செலவு ஆகவில்லை.
அதேபோல், உங்கள் நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களின் புத்தக மதிப்பு (அதாவது, சொத்துகளை வாங்கிய விலையில் இருந்து தேய்மானத்தைக் கழித்த பிறகு உள்ள மதிப்பு) ரூ.1,90,000 என்றும் வைத்துக் கொள்வோம்.
இ.பி.எஸ். (EPS – Earnings Per Share): இ.பி.எஸ் என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள வருமானம். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.
இ.பி.எஸ் = நிகர லாபம்/பங்குகளின் எண்ணிக்கை.
மேற்கண்ட உதாரணத்தில் இ.பி.எஸ். ரூ.16.17 (3,23,449/20,000) ஆகும். அதிகமான இ.பி.எஸ்., ஒரு நிறுவனம் லாபகரமாகச் செயல்படுவதைக் காண்பிக்கும்.
புக் வேல்யூ (Book Value (BV) Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள புத்தக மதிப்பு ஆகும். இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துக்களின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துக்களில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு என்கிறோம்.
புத்தக மதிப்பு = சொத்துக்கள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities) ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு/பங்குகளின் எண்ணிக்கை இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும். ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாகக் கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும். மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.
மேற்கண்ட உதாரணத்தில் ஒரு பங்கின் புத்தக மதிப்பு ரூ.9.50 (1,90,000/20,000) ஆகும். இந்த உதாரணத்தில் நிறுவனத்திற்கு எந்தவிதமான கடனும் இல்லை என்று எடுத்துக்கொள்வோம். இந்த புத்தக மதிப்பு நிறுவனம் இருக்கும் துறையைப் பொறுத்து மாறுபடும். சில தொழில்களுக்கு (மின் உற்பத்தி போன்றவை) முதலீடு அதிகம் தேவைப்படும். அதே சமயம் சர்வீஸ் சார்ந்த துறைகளுக்கு முதலீடு அதிகம் தேவைப்படாது.
பங்கின் மார்க்கெட் மதிப்பு (அ) விலை: பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் விலை. இந்த உதாரணத்தில் பங்கின் சந்தை விலை ரூ.66 என்று எடுத்துக் கொள்வோம்.
பி/இ (P/E – Price/Earnings Per Share): இது பங்கின் சந்தை விலைக்கும், இ.பி.எஸ்-ஸிற்கும் உள்ள விகிதமாகும். ஒரு பங்கின் வருமானத்தைப் போல அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்காக உள்ளது என்பதை இந்த விகிதம் காண்பிக்கும். பொதுவாக இவ்விகிதம் குறைவாக இருப்பது நல்லது - அதாவது, சந்தை விலை குறைவாகவும், இ.பி.எஸ் அதிகமாகவும் இருப்பது நல்லது.
பி/இ = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் வருமானம்.
பி/பிவி (P/BV – Price/Book Value Per Share): புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதை தனியாகக் காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். அவ்விகிதம்தான் பரவலாக உபயோகிக்கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் (Market Price/ Book Value or P/BV). இவ்விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப் போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும்.
பி/பிவி = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் புத்தக மதிப்பு
டிவிடெண்ட் (Dividend): நிறுவனங்கள் தங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் தங்களின் பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுப்பதை டிவிடெண்ட் என்று கூறுகிறோம். இந்த டிவிடெண்ட் கொடுக்கும்முன் நிறுவனங்களே வரி கட்டிவிடுவதால், பங்குதாரர்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டாம்.
டிவிடெண்ட் யீல்ட் (Dividend Yield): டிவிடெண்டுக்கும் பங்கின் சந்தை விலைக்கும் உள்ள விகிதம். உதாரணத்திற்கு, நீங்கள் வைத்திருக்கும் 'அஆஇ’ பங்கு ஒன்றிற்கு ரூ.3.30 டிவிடெண்ட்-ஆக சென்ற ஆண்டு வழங்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். மேலும், அப்பங்கின் சந்தை விலை ரூ.66 என்று எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் வைத்திருக்கும் பங்கின் டிவிடெண்ட் யீல்ட் 5% (3.30/66 ஜ் 100) ஆகும்.
டிவிடெண்ட் யீல்ட் = டிவிடெண்ட் தொகை/ பங்கின் சந்தை விலை X 100 பங்குச் சந்தையில் உள்ள வெவ்வேறு முதலீட்டு யுத்திகள் யாவை? முதலீட்டில் பலவிதமான யுத்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ கீழே:
1. வேல்யூ இன்வெஸ்ட்டிங்
2. குரோத் இன்வெஸ்ட்டிங்
3. கான்ட்ரா இன்வெஸ்ட்டிங்
4. பேஸிவ் இன்வெஸ்ட்டிங்
இவை தவிர வேறு சில யுத்தி களும் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் இந்த நான்கிற்குள் கொண்டு வந்துவிடலாம்.
ஒருவரின் மனநிலைக்கு ஏற்ப அவரின் முதலீட்டு யுத்தியும்/முறை யும் அமைய வேண்டும். வேகமான மனநிலையில் இருப்பவர்கள் ’குரோத்’ பங்குகளை நாடிச் செல்வர். தாம் வாங்கும் பங்கில் வேல்யூ இருக்க வேண்டும் என்பவர்கள், 'வேல்யூ’ பங்குகளை நாடிச் செல்வர்; மாத்தி யோசிப்பவர்கள் 'கான்ட்ரா’ பங்குகளை நோக்கிச் செல்வர். மார்க்கெட் ரிஸ்க்கைவிட ஒரு துளி கூடவோ அல்லது குறையவோ எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் 'பேஸிவ்’ முறையை நாடிச் செல்வர்.
நன்றி: நாணயம் விகடன்

0 comments:
Post a Comment