Sunday, May 6, 2012

ஷேர் மார்க்கெட் - 2

ஷேர் மார்க்கெட் - 2

நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!

எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றது தான் பங்குச் சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச் சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள். காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்திரிக்காய் போடுங்க’ என்று கேட்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க’ என்று வாங்கலாம். பங்குச் சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்! முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறியை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். ஆனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே பங்குச் சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.

பங்குச் சந்தை பற்றி மேலும் அறிந்து கொள் வதற்கு முன்பாக, ஷேர் அல்லது பங்கு என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜூவல்லரி கடை நடத்தும் ஒரு பிஸினஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான்கைந்து ஊர்களில் நகைக்கடை இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவை லாபகரமாகவும் நடந்து வருகிறது... தரம், வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை போன்றவற்றால் உங்கள் தொழிலுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் பிஸினஸை டெவலப் செய்தால் இன்னும் பெரிய லெவலுக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் தொழிலை விரிவு படுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை. கடன் வாங்கி இறங்கவும் விருப்பமில்லை... இதுபோன்ற நிலையில் என்ன செய்வது? ஒன்று செய்யலாம்... யாராவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டு இறங்கலாம்.


ஆனால், ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ பார்ட்னர்களாகக் வைத்துக் கொள்வதைவிட பல பேர்களை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம். எப்படி என்கிறீர்களா? ஒருவேளை யாராவது ஒருவரிடம் அதிகப் பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் அந்தத் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுவே ஆளுக்குக் கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்படாது. இது போல் இன்னும் பல சௌகரியங்கள் இதில் உள்ளன. (அதற்காக அசௌகரியங்களே இல்லாமல் போய்விடுமா என்ன! அதை பிற்பாடு பார்ப்போம்!)


சரி, நீங்கள் தொழிலை விரிவுபடுத்த பங்கு முதல்* (சிணீஜீவீtணீறீ) திரட்டுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். தற்போது உங்கள் தொழிலில் உங்களது பங்கு முதல் 8 கோடி (10 முகமதிப்பு* கொண்ட 80 லட்சம் பங்குகளாக இருக்கிறது) என்று வைத்துக் கொள்வோம். மேலும் சில நகரங்களில் கடை ஆரம்பிக்க இன்னும் நாற்பது கோடி தேவைப்படுகிறது. நீங்கள் உங்களது 80 லட்சம் பங்குகளை அப்படியே வைத்துக் கொண்டு, உங்கள் நிறுவனத்தில் புதிதாக 10 முகமதிப்புள்ள, 20 லட்சம் பங்குகளை சந்தையில் சென்று விற்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு நாள் தொழிலில் வெற்றிகரமாக இருந்ததால், பத்து ரூபாய் பங்கை 200 க்கு விற்கிறீர்கள். அதாவது, ஒரு பங்குக்கு 190-ஐ பிரீமியமாக வைத்து விற்கிறீர்கள்!

'இதென்ன கதை? பத்து ரூபாய் பங்கை இருநூறு ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி 8. இரண்டு தெரு தாண்டிப் போனால் அந்த பெரிய ஓட்டலில் இரண்டு இட்லி 14. 'அதே இட்லிதானே! எதற்கு 6 அதிகம் கொடுக்க வேண்டும்’ என்று நாம் கேட்பதில்லையே! காரணம், அந்த 6 தான் அந்த ஓட்டலுக்கு நாம் கொடுக்கும் பிரீமியம்! அந்த ஓட்டலில் நாம் இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அந்த விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பிரீமியத்தை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம். இப்போதைக்கு, லாபகரமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கடையை நீங்கள் விற்றால் குட்வில் அல்லது நிந்தம் என்பதை எதிர்பார்ப்பீர்கள் அல்லவா? அது போலத்தான் இந்த 190 பிரீமியமும் என்பதைத் தெரிந்து கொண்டால் போதும்.

ஆக இப்போது உங்கள் நிறுவனத்தில் மொத்தம் ஒரு கோடி (ஏற்கனவே உங்களிடம் இருந்த பங்குகள் 80 லட்சம்+புதிதாக நீங்கள் விற்ற 20 லட்சம் பங்குகள்) பங்குகள் உள்ளன. பொதுமக்களிடம் இப்பங்குகளை விற்றதால், நீங்கள் உங்களது நிறுவனப் பங்குகளை பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ/பி.எஸ்.இ* போன்ற சந்தையில்) சென்று லிஸ்ட் செய்ய வேண்டும். இம்முறையினால் யார் வேண்டுமானாலும் உங்களது நிறுவனப் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். இதுதான் ஷேர் அல்லது பங்கு உருவாகும் கதை.

நன்றி: நாணயம் விகடன்

1 comment:

  1. எங்களை தொடர்பு கொள்ளாட்டியும் பரவாயில்லை கண்டிப்பா இதை படீங்க

    பங்கு சந்தையில் பணத்தை இழப்பது கற்றுக்கொள்ளாமல் டிரேடு செய்வதுதான் காரணம். ஒரு சில விஷயங்களை மட்டும் கற்றுக்கொண்டு அதை வைத்து சம்பாதித்து விடலாம் என்ற ஆசையில் இன்று பல டிரேடர்கள் இருக்கிறார்கள். கற்றுகொள்வதற்காக பல பேரிடம் போய் அதிலேயே பாதி பணத்தை இழந்தவர்களும் இருக்கிறார்கள். amibroker, candlestick chart என்று இரு விஷயங்கள் தான் பெரும்பாலும் பயிற்சி வடிவில் வந்து எல்லோரையும் ஏமாறசெய்கிறது. அதற்காக அவற்றை தவறு சொல்லவில்லை, ஆனால் அவற்றை வைத்துக்கொண்டு பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. Market correction போது பல நாள் சம்பாதித்த பணம் ஒரே நாளில் போய்விட வாய்ப்புள்ளது. அனைத்து indicator + software ம் ஒரு 20% முதல் 30% வரை தான் ஒரு டிரேடிங் க்கு support ஆக இருக்க முடியும்.இன்னுமுள்ள 70% எது? தொடர்ந்து 3 அல்லது 6 மாதம் ஜெயித்து விட்டு பின் முதலீட்டையும் இழந்து விட்டு கடன்காரனாகி ஊரை விட்டு ஓடிய நபர்களும், உயிரை விட்டவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒரு முதலீடு விஷயத்தில் உள்ளேபோகும் முன், அதனால் உங்களது குழந்தை மற்றும் குடும்ப எதிர்கால நிலவரங்களை கணக்கில் வைத்தே முதலீடு செய்யவேண்டும்.

    எந்த tips provider ஆவது தன்னுடைய trading statement ஐ காட்டி இருக்கிறார்களா? ஒரு மாதம் இரண்டு மாத statement ஐ காட்டக்கூடாது. இரண்டு வருடம் அல்லது 3 வருட statement ஐ காட்டணும். அப்படி யாரவது காட்டினால் மட்டுமே அவர்கள் ஜெயித்தவர்கள் என்று நம்பலாம். அவர்களை நீங்கள் தொடர்வதும் தவறில்லை. எத்தனை பித்தலாட்டங்கள் நடக்கிறது தெரியுமா market ல்? இதை சொல்லவே தனியா ஒரு வகுப்பு நடத்தலாம்.

    ஒரு நண்பர் facebook ல் சொல்லிருந்தார், ஹிந்தில பேசினா நம்பி tips க்கு பணம் கட்டறாங்க, தமிழில் சொன்னா யாரும் நம்புவதில்லைன்னு" அது உண்மை தான். போகட்டும் விடுங்கள் நண்பரே. நிறைய பேர் என் கண்முன்னாடி பெரிய அளவில் loss ஆகிருக்காங்க, பார்த்தா பாவமா இருக்கும். சொன்னா யாருங்க கேட்கறாங்க. மனதுக்குள் நினைத்துக்கொள்வேன், அனைவரும் புத்திசாலி ஆகிட்டா நாம ஈஸியா ஜெயிக்க முடியாதே என்று. வேறு என்ன செய்யமுடியும்?

    பலரின் அறியாமை தான் ஒரு சிலருக்கு பெரிய வெற்றியாகிறது, இது Share market க்கு மட்டுமல்ல அனைத்துக்கும் பொருந்தும். வெற்றி பெறுவதற்கு வழியை சொல்லி தருபவர்கள் வெற்றியாளர் கிடையாது, அந்த வழியில் வெற்றி பெற்றவரே வெற்றியாளர்.

    எங்களை பற்றி:

    இன்று பயிற்சி என்ற பெயரில் எத்தனையோ பேர் வந்திட்டாங்க, சரி தவறில்லை. டிரேடு பண்ணி ஜெயிக்க முடியாதவங்க பயற்சி வகுப்புகளை நடத்தும் போது, நமக்கென்ன? நான் என்னுடைய trading statement உடன் உங்களை சந்திக்க உள்ளேன். (அதுதானே உங்களுக்கு நம்பிக்கை அளிக்கபோகிறது). 2005 ல் தான் market க்குள் வந்தேன். 2007 இறுதிவரை heavy loss அட பயப்பாடதீங்க 38,000 ரூபாய் தான், கடன் வாங்கி தான் trade செய்தேன். ஆனா இப்போ ? ஹஹா... ஹஹா... ஹஹா.. ஆனா இன்னும் கோடீஸ்வரன் ஆகலை. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு நேர்ல வாங்க சொல்றேன். மார்க்கெட் னாலே வாழ்க்கை இழந்தவர்கள் இருக்காங்க, எனக்கு மார்க்கெட் இல்லேன்னா வாழ்க்கையே இல்லை. நான் வாங்கின காரின் விலை (2010 ல்) 64,000 ரூபாய்தான், ஆனா இதுவரை அதுக்கு பெட்ரோல் 6 லட்ச ரூபாய்க்கு போட்டிருக்கேன். யாரும் உதவி செய்யவில்லை, அம்மாவிற்கு பாசத்தை தவிர என்ன காட்டமுடியும்(அது தான் என் முதலீடு) 10 ரூபாய்க்கு வழி இல்லாமல் இருந்த நான் IT கட்டிட்டு இருக்கேன்னா சும்மா எப்படி?

    இன்னும் பல உண்மைகளை பயற்சி வகுப்புகளின் போது சொல்கிறேன், இன்னும் 3 மாதங்கள் ஆகும், அதற்கான வேலைகளில் தான் இப்போது இருக்கேன். Equity, future and option ல டிரேடு செய்து loss ஆனவரா நீங்கள், வாங்க market ல் வாங்க எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறீங்க னு புரிய வைக்கிறேன்.

    தயவு செய்து trainer கள் யாரும் கோபபட வேண்டாம். தவறானவர்களை மட்டும் தான் சுட்டி காட்டியுள்ளேன். நான் உங்களுக்கு நிரூபிக்க பட வேண்டிய உண்மைகளை நேரில் பயற்சியின் நிரூபிக்கிறேன்.

    மெயில் ல உங்களது போன் நம்பருடன் தொடர்பு கொள்ளுங்கள், நானே அழைக்கிறேன் உங்களை:
    tamilnadustocks@gmail.com

    பெயர் :
    போன்:
    ஊர் :
    மூன்றும் தேவை.

    உண்மைகளை மட்டுமே சொல்லிருக்கேன், யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
    நன்றி.


    முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு share பண்ணுங்கள்



    ReplyDelete