Wednesday, May 16, 2012

இனி சிலிண்டர் விலை ரூ.1,200


நாடு முழுவதும் 12 கோடியே 50 லட்சம் சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மானியத்தை 2 கட்டமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் மத்திய & மாநில அரசு முதல்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் ரத்து செய்யபடு்ம் என்றும், இரண்டாவது கட்டமாக மாதத்திற்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வருமானம் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படு்ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் ரத்து செய்யப்பட்டால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரை இவர்கள் ரூ..1,200 கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால், எப்போது இந்த உத்தரவு வரும் என்பதுதான் குறிப்பிடப்படவில்லை.

சிலிண்டரே சரியாக கிடைப்பதில்லை. இதி்ல் இதுவுமா?

0 comments:

Post a Comment